விஜய் , அஜித் குட்பை... ரஜினி வெல்கம்!

தமிழ்நாட்டில் பிரபலமான நடிகர்கள் ஷூட்டிங் செய்யும் போது, ரசிகர்கள் கூட்டம் அள்ளும்.அதைத் தவிர்க்க பெரும்பாலும், வேறு மாநிலங்களில் தான் ஷூ...

தமிழ்நாட்டில் பிரபலமான நடிகர்கள் ஷூட்டிங் செய்யும் போது, ரசிகர்கள் கூட்டம் அள்ளும்.அதைத் தவிர்க்க பெரும்பாலும், வேறு மாநிலங்களில் தான் ஷூட்டிங் செய்வர்.

விஜய் நடித்துவரும் 'பைரவா' படத்தின்  கதை முழுக்க முழுக்க திருநெல்வேலியை பின்னணியாகக் கொண்டது. நெல்லையில் படப்பிடிப்பு நடத்தினால் பொதுமக்களின் அன்புத்தொல்லை அதிகரிக்கும் என்று ஹைதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் செட் போட்டு படம் பிடித்தனர். அடுத்து ராஜமுந்திர் பகுதியில் ஷூட்டிங் நடத்தினார்.  இடையில்  சில நாட்கள் பொள்ளாச்சியில்  விஜய் சம்மந்தப்பட்ட காட்சிகளை படமாக்க திட்டமிட்டு இருந்தார், இயக்குனர் பரதன். விஜய் நடிக்க வருகிறார் என்று தெரிந்த மக்கள்,  கூட்டம் கூட்டமாக   ட்ராக்டர்களிலும், கார்களிலும், டூ-வீலர்களிலும் குவிய ஆரம்பித்து விட்டனர்.

 திறந்த வெளியில் மக்கள் கூட்டம் திரண்டு நிற்பதை அறியாமல் கேரவன்  உள்ளிருந்த விஜய் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வர ஷாக் ஆகிவிட்டார். மக்கள் நெருக்கியடித்துக் கொண்டு  விஜய்யை நோக்கி முன்னேற,  திரண்டிருந்த கூட்டத்தில் திடீரென தள்ளுமுள்ளு ஏற்பட்டது. நிலவரத்தின் கலவரத்தை உணர்ந்த விஜய் சடாரென கேரவனில் புகுந்து கொண்டார். இயக்குனர் பரதனை அழைத்து 'இனி இங்கே ஷூட்டிங் வேண்டாம் உடனே பேக் -அப் சொல்லுங்கள்" என்று கறாராக சொல்லி விட்டார், விஜய். தமிழகத்தில் பொள்ளாச்சியில் எடுக்க இருந்த காட்சிகளை  ராஜமுந்திரியில் படமாக்கி விட்டார், பரதன்.

 அஜித்தின்  57-வது படத்தின் பெரும்பாலான காட்சிகளை ஐரோப்பிய நாடுகளிலேயே படப்பிடிப்பு நடத்தி விட்டார், டைரக்டர் சிவா. கடந்த இரண்டு மாதங்கள் இடைவிடாது படப்பிடிப்பில் கலந்துவிட்டு சென்னை திரும்பினார், அஜித். ப்ரியதர்ஷன் -மோகன்லால்  அன்புக்கட்டளைக்கு இணங்க சென்னை சாலிகிராமத்தில் இருக்கும் பிரசாத் லேப் ப்ரிவ்யூ தியேட்டரில் 'ஒப்பம்' திரைப்படத்தை ரசித்துப் பார்த்தார். சென்னையின் முக்கியமான வீதிகளில் அஜித்தின் 57-வது படத்தின் படப்பிடிப்பை நடத்தத் திட்டமிட்டு இருந்தார், சிவா.

சென்னை திருவான்மியூர் வீட்டில் இருந்த அஜித்திடம் சென்னை படப்பிடிப்பு தொடர்பாக பேசினார், சிவா.  'சென்னையில ஷூட்டிங் வேணாமே..' என்று தவிர்த்த அஜித்திடம் 'ஏன்...' என்று வினவியிருக்கிறார், சிவா. 'வெங்கட்பிரபு டைரக்‌ஷன் செய்த 'மங்காத்தா' ஷூட்டிங் சென்னையில் தான் நடந்தது. அப்போ பயங்கர செக்யூரிட்டு போட்டிருந்தாங்க. பின்பக்கம் ரயில்வே  ட்ரேக்  இருந்துச்சு. அதையொட்டி  பத்தடி சுவர்மேல எட்டு காலேஜ் பசங்க உயிர் பயமே இல்லாம நின்னுக்கிட்டு ஷூட்டிங்கை வேடிக்கை  பார்த்தாங்க. அதுக்கப்புறம் அவங்களுக்கு  செக்யூரிட்டு போட்டு ஷூட்டிங் நடத்தறதுக்குள்ளே போதும் போதும்னு ஆயிடுச்சு' என்று அஜித் விவரிக்க  அடுத்த ஷெட்யூல் ஹைதராபாத்துக்கு மாற்றப்பட்டது.

அடுத்து சூப்பர் ஸ்டார் நாற்காலியில் அமரப் போராடும் விஜய், அஜித் இருவரும் தமிழ்நாட்டில் சென்னையில் இருக்கும் மோகன் ஸ்டுடியோ, பிவிபி ஸ்டுடியோ தவிர வேறு இடங்களில் நடிக்க ஒப்புக்கொள்வது இல்லை.

 சென்னையை அடுத்துள்ள தமிழ்மக்கள் திரளாக வசிக்கும் திருக்கழுங்குன்றம் பகுதியில் '2.0' படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்த ரஜினியை எச்சரிக்கையாக, பாதுகாப்பாக, சுகாதாரமாக இருக்க வேண்டும் என்று  அறிவுறுத்தி இருக்கிறார்கள். அதுபற்றி கிஞ்சித்தும் கவலைப்படாமல்  திருக்கழுகுன்றத்தில் வசிக்கும் மக்களோடு போட்டோ எடுத்துக்  கொண்டு '2.0' படத்தில் நடித்து வருகிறார், ரஜினி என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About