இந்த தீபாவளிக்கு ரிலீஸாகும் ரஜினி, விஜய் படம்..!

ரஜினி, கமல், அஜீத், விஜய் படங்கள் ரிலீஸாகாத தீபாவளி, அவர்களது ரசிகர்களுக்கு கறுப்பு தீபாவளி என்பார்கள். வருகிற தீபாவளிக்கு தனுஷின் கொடி,...

ரஜினி, கமல், அஜீத், விஜய் படங்கள் ரிலீஸாகாத தீபாவளி,
அவர்களது ரசிகர்களுக்கு கறுப்பு தீபாவளி என்பார்கள். வருகிற தீபாவளிக்கு தனுஷின் கொடி, கார்த்தியின் காஷ்மோரா, மா கா பா வின் கடலை, நதியா நடித்திருக்கும் திரைக்கு வராத கதை என நான்கு படங்கள் வருகின்றன. ஆனால் சென்னையில் மட்டும் ரஜினி, விஜய் படங்கள் ரிலீஸாகின்றன. ஆம், ரஜினி நடித்த கபாலி படத்தையும் விஜய் நடித்த தெறி படத்தையும் தீபாவளியன்று மீண்டும் திரையிடுகிறார்கள். சென்னை ரோகினி தியேட்டரில் தீபாவளியன்று (29.10.2016) காலை 8.30 மணிக்கு கபாலியும் தெறியும் திரையிடப்படுகிறது. இதனை அறிந்த சென்னைவாசிகள் கடகடவென 8.30 மணி காட்சிக்கான டிக்கெட்களை புக் செய்து விட்டனர். ஆனால், தீபாவளியன்று காலை 8.30 காட்சி மட்டும் தான் இந்த இரு படங்களையும் திரையிடுகிறார்கள் என்பது ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை அளிக்கும் செய்தியாகும். தீபாவளியன்று தெறி 200-வது நாளும் கபாலி 100-வது நாளாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பல...

0 comments

Blog Archive