இனிமேலாவது ஆக்சிடெண்ட்- டை நேரில் பார்த்தா செல்ஃபி எடுத்துட்டு நகராதீங்க: ஹெல்ப் பண்ணுங்க! – அரசணை தகவல்

நாடு முழுவதும் விபத்தில் சிக்குவோர் சரியான நேரத்தில் முதலுதவி மற்றும் சிகிச்சை கிடைத்தால் உயிர் பிழைக்க வாய்ப்புள்ளதாக தெரியவந்தது. இதையடுத...

நாடு முழுவதும் விபத்தில் சிக்குவோர் சரியான நேரத்தில் முதலுதவி மற்றும் சிகிச்சை கிடைத்தால் உயிர் பிழைக்க வாய்ப்புள்ளதாக தெரியவந்தது. இதையடுத்து சாலை விபத்துகளில் சிக்குவோரை காப்பாற்ற நினைப்பவர்களை போலீஸ் தொந்தரவில் இருந்து பாதுகாக்கும் வகையில், மத்திய அரசு அறிவித்துள்ள விதிமுறைகளுக்கு, சுப்ரீம் கோர்ட் ஒப்புதல் அளித்துள்ளது. இதனால், விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவி செய்யச் சென்றால் வழக்கு வம்பு வருமோ என, இனி அச்சமடையத் தேவையில்லை.கடந்த 29.10.2014ம் தேதி இது குறித்து சுப்ரீம் கோர்ட் மற்றும் மத்திய அரசு வழிகாட்டுதல்கள் படி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இதையொட்டி, போக்குவரத்து ஆணையர் சத்யபிரதா சாகு வெளியிட்டுள்ள உத்தரவு:

* விபத்தில் காயமடைந்தவர்களை அருகில் உள்ளவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லலாம். அவர்களை எந்த கேள்வியும் கேட்காமல் முகவரியை பெற்றுக் கொண்டு வெளியில் செல்ல அனுமதிக்க வேண்டும். அரசு அவர்களுக்கு சன்மானம் வழங்க வேண்டும்.

* விபத்து இடர்பாடுகளில் உள்ளவர்களுக்கு உதவி செய்பவர்கள் எந்தவொரு சமூக மற்றும் குற்றவியல் நடவடிக்கைகளுக்கும் பொறுப்பாக மாட்டார்கள்.

* விபத்தில் காயமடைந்தவர்கள் குறித்து தொலைபேசி மூலம் காவல் துறைக்கோ விபத்து சிகிச்சை மையத்திற்கோ தொடர்பு கொள்ளும் போது அவரது பெயர் மற்றும் சொந்த விவரங்கள் தெரிவிக்க நேரிலோ அல்லது தொலைபேசியிலோ கட்டாயப்படுத்தக்கூடாது. இதனை மீறினால் சம்பந்தப்பட்ட அலுவலர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

* பதிவு செய்யப்பட்ட அனைத்து மருத்துவமனையும் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உடனே சிகிச்சை அளிக்க வேண்டும். உதவி செய்பவர் குடும்ப உறுப்பினர் அல்லது உறவினராக இல்லாத பட்சத்தில் அவரிடம் செலவினம் எதையும் பெறக்கூடாது.

* சாலை விபத்தினால் அவசர சிகிச்சை அளிக்க வேண்டிய சூழ்நிலையில் ஒரு மருத்துவர் கவனமின்றி அக்கறை செலுத்தவில்லையெனில் அவர் மீது இந்திய மருத்துவ கழக ஒழுங்குப்பாடு 2002 அதிகாரம் 7ன் கீழ் பணியின் நடத்தையின்மை என கருதி நடவடிக்கை எடுக்கப்படும்.

* அனைத்து மருத்துவமனைகளின் நுழைவாயிலில் இந்தி, ஆங்கிலம் மற்றும் அந்தந்த மாநில நடைமுறை மொழிகளில் விபத்து இடர்பாடுகளில் உள்ளவர்களுக்கு உதவி செய்பவர்களை கைது செய்யவோ அல்லது ஒரு தொகையை வைப்பு தொகையாக செலுத்தவோ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கான சிகிச்சைக்காக கோரப்படுவதில்லை என்ற அறிவிப்பு பலகைகள் இருக்க வேண்டும்.

அனைத்து பொது மற்றும் தனியார் மருத்துவமனைகளும் இந்த நடைமுறைகளை உடனடியாக செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். இந்த விதிமுறைகளை முழுமையாக கடைபிடிக்க தவறும் மற்றும் மீறும்பட்சத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About