2 மணி நேரத்தில் புயலாக மாறும்... புயல், மழை அப்டேட்...

வடகிழக்குப் பருவமழை கடந்த அக்டோபர் 30-ம் தேதி தொடங்கியது. பெரிதாக மழையைத் தராமல் ஒரு மாதம் கடந்து விட்ட நிலையில் இப்போது உருவாகி இருக்கும் ...

வடகிழக்குப் பருவமழை கடந்த அக்டோபர் 30-ம் தேதி தொடங்கியது. பெரிதாக மழையைத் தராமல் ஒரு மாதம் கடந்து விட்ட நிலையில் இப்போது உருவாகி இருக்கும் காற்றழுத்த தாழ்வு நிலை, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி உள்ளது. இது புயல் ஆகவும் மாற உள்ளது.
தென்கிழக்கு வங்கக் கடலில் இருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்  அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக மாறக்கூடும் என்பதுதான் சென்னை வானிலை மையத்தின் லேட்டஸ்ட் எச்சரிக்கை.

காற்றழுத்த தாழ்வு மண்டலம் எங்கே இருக்கிறது?

தென்கிழக்கு வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 15 கி.மீ வேகத்தில் மேற்கு வடமேற்கு நோக்கி நகர்ந்துள்ளது. இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. சென்னையில்  இருந்து தென் கிழக்காக 830 கி.மீ தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து கிழக்கு தென் கிழக்காக 780 கி.மீ தொலைவிலும் இலங்கை திரிகோணமலையில் இருந்து  கிழக்கு தென் கிழக்காக 490 கி.மீ தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது மேற்கு வடமேற்காக நகரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது தவிர இது அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக மாறக்கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

புயல்

எங்கே கரையைக் கடக்கும்?

தமிழக கடற்கரையில் சென்னை-வேதாரண்யம் இடையே கடலூருக்கு நெருக்கமாக டிசம்பர் 2-ம் தேதி காலை கரையைக் கடக்கும் என்றும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. புயல் சின்னமாக உருவாவதற்கு அறிகுறியாக பலத்த காற்று வீசக்கூடும். இப்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உள்ள நிலையில் மணிக்கு 50 முதல் 60 கி.மீ வேகத்தில் தரை காற்று வீசக்கூடும். படிப்படியாக இது அதிகரித்து டிசம்பர் 1-ம் தேதி மணிக்கு 75 முதல் 85 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும். 2-ம் தேதியன்று மணிக்கு 60 முதல் 70 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடல் பகுதிகளில் அலைகளின் வேகம் மிக அதிகமாகிருக்கும் என்றும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

கனமழை முதல் முதல் மிக கனமழை

இன்று மாலை முதல் சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் ஆங்காங்கே மழை பெய்யும். படிப்படியாக மழை அளவு அதிகரித்து தமிழகம், புதுச்சேரி கடலோரப்பகுதிகளில் பெரும்பாலான பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும். டிசம்பர் 1 மற்றும் 2-ம் தேதி தமிழகத்தின் உள் மாவட்டங்களிலும் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக் கூடும்.இது குறித்து சென்னை வானிலை மைய இயக்குனர் பாலசந்திரனிடம் கேட்டபோது, "எத்தனை மில்லி மீட்டர் அளவுக்க்கு மழை பெய்யும் என்பது முன் கூட்டியே கணிக்க முடியாது. கனமழை பெய்யும் என்பதை மட்டும்தான் இப்போதைக்கு சொல்ல முடியும்" என்றார்.

மீனவர்களுக்கு எச்சரிக்கை

தமிழகம், புதுச்சேரி கடல் பகுதிக்குள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ஏற்கனவே சென்றவர்கள் விரைவில் கரை திரும்ப வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது வரை ஏமாற்றி வந்த மழை கனமழையாகப் பெய்யும் என்று அறிவிக்கப்பட்டதே மக்கள் மனதில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About