மோ...திரைவிமர்சனம்... காமெடி சரவெடி தான். பக்காவான கதைக்களம்.

பேய் கதைகள் தமிழ் சினிமா பாத்து பழகிய விஷயம். இங்கேயும் நாங்களும் வித்தியாசமான பேய் கதையை எடுப்போம் என கூறி ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் மோ என...

பேய் கதைகள் தமிழ் சினிமா பாத்து பழகிய விஷயம். இங்கேயும் நாங்களும் வித்தியாசமான பேய் கதையை எடுப்போம் என கூறி ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் மோ என்ற பெயரில் இயக்கியிருக்கிறார் புவன் R நுல்லன்.

சரி இது நிஜமாகவே பேய் கதையா, இல்லை எப்படிபட்ட கதை என பார்ப்போம்.

கதைக்களம்

துணை நடிகையான ஐஸ்வர்யா ராஜேஷ், மேக்கப் மேன் முனிஸ்காந்த் இருவரையும் வைத்து அடுக்குமாடி குடியிருப்பில் பேய் இருப்பதாக கூறி ரியல் எஸ்டேட் அதிபர் மற்றும் அந்த அடுக்குமாடி குடியிருப்பின் செயலாளர் செல்வாவை ஏமாற்றுகிறார்கள் சுரேஷ் ரவி மற்றும் அவரது கூட்டாளிகள்.

ஒரு கட்டத்தில் செல்வாவிடம் சுரேஷ் மாட்டிக்கொள்கிறார். பின் செல்வா, சுரேஷை வைத்தே பாலடைந்த ஒரு ஸ்கூலை விலைக்கு வாங்க முயற்சிக்கிறார். அதே ஸ்கூலை முன்னாள் எம்.எல்.ஏ. மைம் கோபியும் வாங்க நினைக்கிறார்.

கெட்ட சக்திகள் இருக்கும் கட்டிடத்தை மைம் கோபி வாங்க மாட்டார் என்பதை தெரிந்துக் கொண்ட செல்வா, சுரேஷ் ரவி மற்றும் அவரது நண்பர்களை அந்த பாலடைந்த ஸ்கூலில் பேய் இருப்பதாக நாடகம் நடத்தி மைம் கோபியை பயமுறுத்த சொல்கிறார். இல்லையென்றால், போலீசிடம் சுரேஷ் ரவியை சிக்க வைத்துவிடுவேன் என்று மிரட்டுகிறார். போலீசுக்கு பயந்து அந்த பாலடைந்த ஸ்கூலுக்கு நண்பர்களுடன் செல்கிறார் சுரேஷ் ரவி.

இறுதியில் மைம் கோபி அந்த ஸ்கூலை வாங்கினாரா இல்லை செல்வா வாங்கினாரா? சுரேஷ் மற்றும் நண்பர்கள் நிலைமை என்ன ஆனது என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தை பற்றிய அலசல்

முன்பே சொன்னது போல் பேய் கதைகள் தமிழ் சினிமாவுக்கு ஒன்றும் புதிது அல்ல. ஆனால் இந்த கதை கொஞ்சம் வித்தியாசமான பேய் கதைதான். இதில் முக்கியமாக இருப்பது காமெடி. திகில் படத்திற்கு தேவையான காட்சிகளை வைத்து சுவாரஸ்யமாகவும், காமெடியாகவும் திரைக்கதை அமைத்து இயக்கி இருக்கிறார் இயக்குனர் புவன் நல்லான். சொல்ல வந்த விஷயத்தை தெளிவாக சொல்லியிருக்கிறார்.

படத்தில் காமெடி காட்சிகள் பெரிய ப்ளஸ். ஜெப கூட்ட காட்சிகள், யோகி பாபு ஆங்கிலம் பேசுவது, முனிஸ்காந்த் பேய் வேஷம் போடும் காட்சிகளிலெல்லாம் திரையரங்கில் சிரிப்பு சரவெடி தான்.

க்ளாப்ஸ்

காமெடி சரவெடி தான். பக்காவான கதைக்களம்.

பல்ப்ஸ்

சிரிப்புக்கு புல் கேரண்டி என்பதால் குறை தெரியவில்லை.

மொத்தத்தில் மோ தியேட்டர் போய் பாருங்க புல் கேரண்டி காமெடிய Enjoy பண்ணுங்க.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About