அன்பானவன் அசராதவன் அடங்காதவன்- திரை விமர்சனம்

த்ரிஷா இல்லன்னா நயன்தாரா இயக்குனருடன் சிம்பு கைக்கோர்க்கின்றார் என்றவுடனே ஒரு பரபரப்பு உருவாகியது கோலிவுட்டில். அதை தொடர்ந்து அந்த பரபரப்பு...

த்ரிஷா இல்லன்னா நயன்தாரா இயக்குனருடன் சிம்பு கைக்கோர்க்கின்றார் என்றவுடனே ஒரு பரபரப்பு உருவாகியது கோலிவுட்டில். அதை தொடர்ந்து அந்த பரபரப்பு அடங்குவதற்குள் டீசருக்கே ஒரு டீசர், மதுரை மைக்கல், அஸ்வின் தாத்தா என வரிசையாக படத்தை பற்றி பாசிட்டிவ் தகவலாகவே வர, படமும் பரபரப்பு குறையாமல் இருந்ததா? பார்ப்போம்.

கதைக்களம்

துபாயில் பெரிய டான் ஒருவரை பிடிக்க, காவல்துறை அதிகாரி கஸ்தூரி தலைமையில் ஒரு டீம் செயல்படுகின்றது. அந்த டான் வேறு யாருமில்லை மதுரையில் லோக்கல் தாதாவாக வலம் வந்த மதுரை மைக்கல் தான்.

மைக்கல் நண்பர் மகத் தங்களின் ப்ளாஷ்பேக்கை துபாய் போலிஸிடம் சொல்வதில் இருந்து படம் தொடங்குகின்றது. மதுரையை கலக்கி வரும் சிம்பு, ஸ்ரேயாவுடன் காதலில் விழுகின்றார்.

ஆனால், இவரின் அடிதடி, வெட்டுக்குத்தால் ஸ்ரேயாவை இழக்க நேரிடுகின்றது. அதை தொடர்ந்து அவர் துபாய் சென்று டான் ஆகிறார். துபாய் போலிஸே அவரை தேட அவரோ சென்னையில் செட்டில் ஆகின்றார், மதுரை மைக்கல் அஸ்வின் என்ற பெயரில் 55 வயதில் 26 வயதான தமன்னாவுடன் காதல் வயப்படுகின்றார்.

இவர்கள் காதல் என்ன ஆனது, துபாய் போலிஸ் சிம்புவை தேடி பிடித்தார்களா? என்பதை இரண்டாம் பாகத்திற்கு லீட் கொடுத்து முடித்துள்ளார் ஆதிக்.

படத்தை பற்றிய அலசல்

படத்தின் பெரிய பலமே சிம்பு தான், மதுரை மைக்கலாக மதுரை ஸ்லாங், மேனரிசம் என்பதையெல்லாம் மறந்து தன் ஸ்டைலில் கலக்குகிறார். அதேபோல் அஸ்வின் தாத்தாவாக மாறும் போது ஆள் பார்க்க வயதாக தெரிந்தாலும், குரல் பற்றியெல்லாம் கவலையே இல்லை, தன் ரசிகர்கள் மீது உள்ள நம்பிக்கையில் ஒன் மேன் ஷோவாக நிமிர்ந்து நிற்கின்றார்.

இவரை தவிர படத்தில் வேறு ஒன்றும் சொல்வதற்கு இல்லை, ஏதோ துபாய் டான் என பில்டப் கொடுத்து மதுரைக்கு கதைக்களம் வர, என்னென்னவோ நடக்க போகின்றது என பார்த்தால் மழையில் நனைந்த பட்டாசு போல் ஆகின்றது அடுத்தடுத்த காட்சிகள்.

யுவனின் தெறிக்கும் இசையில் சிம்பு நடந்து மட்டுமே வருகின்றார். சில இடங்களில் பன்ச் பேசுகின்றார், கூட இருப்பவர்கள் அவரை பில்டப் செய்கின்றனர், அதை தவிர வேறு ஏதும் ரசிப்பதற்கு இல்லை.

அழுத்தமே இல்லாமல் முடியும் முதல் பாதியை தொடர்ந்து அஸ்வின் தாத்தா கலக்க போகிறார் என்று பார்த்தால், அவர் தமன்னாவை காதலிக்க வைக்க எடுக்கும் முயற்சிகள் தான் இரண்டாம் பாதி. அதிலும் ஒரு சுவாரசியமும் இல்லை.

மொட்டை ராஜேந்திரன், கோவை சரளா காட்சிகள் மட்டும் சிரிப்பிற்கு கேரண்டி, வித்தியாசமாக செய்கிறேன் என்று கிளைமேக்ஸில் மற்றொரு கதாபாத்திரத்திற்கு லீட் கொடுப்பதெல்லாம் எந்த ஒரு பயனும் இல்லை. முதல் பாகமே முடிந்தால் போதும் என்ற மனநிலை வந்துவிடுகின்றது.

சிம்புவிற்கு பிறகு படத்தை தாங்கி பிடிப்பது யுவனின் பின்னணி இசை தான். பாடல்கள் பெரிதும் கவரவில்லை என்றாலும் தீம் மியூஸிக்கில் மிரட்டியுள்ளார். கிருஷ்ணனின் ஒளிப்பதிவு கலர்புல்லாக இருக்கின்றது.

சிம்பு கண்டிப்பாக அவர் திரைப்பயணத்தில் ஒரு முக்கியமான முடிவு எடுக்க வேண்டிய இடத்தில் இருக்கின்றார், தன் ரசிகர்களுக்காக தான் படம் செய்கிறேன் என்றால் அவர்கள் உங்களிடம் எதிர்ப்பார்ப்பது வானம், விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா போன்ற படங்களை தான், சிம்பு அதை

க்ளாப்ஸ்

சிம்பு தனி மனிதராக படத்தை தாங்கி செல்கின்றார்.

பல்ப்ஸ்

சுவாரசியமே இல்லாத திரைக்கதை.

எப்போதும் பெண்களை குடித்துவிட்டு திட்டும் காட்சிகள், அதை தான் முதல் படத்திலேயே செய்துவிட்டீர்களே ஆதிக்.

மொத்தத்தில் AAA இரண்டாம் பாகம் சூப்பராக இருந்தாலும், முதல் பாகத்தின் விளைவு இரண்டாம் பாகத்தின் மீது எந்த ஒரு எதிர்ப்பார்ப்பையும் உங்களுக்கு தர வாய்ப்பில்லை.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About