யானும் தீயவன் - திரைவிமர்சனம்--ஓகே.

சினிமாத்துறையில் படங்களை வெளியிடுவதில் கூட சில சிக்கல்கள் இருக்கிறது. ஆனாலும் பெரிய படங்களுக்கு நடுவே ஒரே நாளில் பல சிறு பட்ஜெட் படங்கள் வெ...

சினிமாத்துறையில் படங்களை வெளியிடுவதில் கூட சில சிக்கல்கள் இருக்கிறது. ஆனாலும் பெரிய படங்களுக்கு நடுவே ஒரே நாளில் பல சிறு பட்ஜெட் படங்கள் வெளியாகிறது. இதில் ஒன்று தான் யானும் தீயவன். யார் அந்த தீயவன், என்ன தான் செய்கிறான் என்பதை பார்ப்போம்.
கதைக்களம்

புதுமுகங்களில் இப்போது இன்னொரு முகமாக அறிமுகமாகிறார் ஹீரோ அஸ்வின் ஜெரோம். கல்லூரிக்காதல் இவரையும் தொற்றுகிறது. பாடும் திறமையால் ஹீரோயினை கவர்கிறார். இருவரும் வெளியே செல்லும் சுற்றும் நேரத்தில் மூவர் இவர்களை வம்பிழுக்கின்றனர்.

தன் ஹீரோயிசத்தை அவர்களிடம் காட்ட ட்விஸ்ட் ஆரம்பமாகிறது. ஹீரோயின் வர்ஷா பொல்லம்மாவை அவரது பெற்றோர் உயர்கல்விக்காக வெளிநாடு அனுப்ப திட்டமிடுகின்றனர்.

விமான நிலையத்தில் இருந்து ஜோடியாக இருவரும் தப்பித்து விடுகிறார்கள். நண்பரான ஜாங்கிரி மதுமிதா, வீட்டில் தஞ்சம் புகுகிறார்கள். நண்பர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து விடிவி கணேஷ் தலைமையில் அவர்களுக்கு திருமணம் செய்துவைக்கிறார்கள்.

விசயமறிந்த பெற்றோர் அவர்களை ஒதுக்கிவைக்க இவர்கள் எங்கேயோ தனிகாட்டு வீட்டில் வாழ்க்கையில் துவங்குகிறார்கள். அங்கு தான் இவர்களுக்கான ஆபத்து கட்டம் வருகிறது.

இதற்கிடையில் பிரபு தேவாவின் சகோதரர் ராஜீ சுந்தரம் பல கொலைகளை செய்து தடயம் தெரியாமல் தப்பித்து வாழ்ந்துவருகிறார். காவல் துறைக்கு சவாலாக இருக்கும் இவரை பிடிக்க பொன்வண்ணன் தலைமையில் ஒரு போலிஸ் படை வேட்டையை ஆரம்பிக்கிறது.

ஹீரோ, ஹீரோயின் என்ன ஆனார்கள், ராஜு சுந்தரத்தை போலிஸ் பிடித்ததா என்பது தான் மீதிக்கதை.

படத்தை பற்றிய அலசல்

ஆடல், பாடல் என கல்லூரி வாழ்க்கையை கலக்கும் ஹீரோ மிக சீக்கிரமாக காதல் வசப்படுகிறார். சினிமாவிற்கு புதுமுகம். ஆனால் நடிப்பில் எக்ஸ்பீரியன்ஸ் போல காட்டியிருக்கிறார். அவரின் நடிப்பு கதைக்கு ஈக்குவல்.

ஹீரோயின் வர்ஷாவை பார்த்தும் நமக்கு அடிக்கடி நஸ்ரியாவின் ஃபேஸ் வந்து போகும். இவ்வளவு ஏன், சிலருக்கு சாய்பல்லவி மாதிரியும் தோன்றலாம். அவரின் முகபாவனைகள் அப்படி தான் இருக்கிறது.

முதலில் ராஜு சுந்தரம் தான் ஹீரோ போல தெரிவார். இவரின் சிறு வயது தோற்றத்திற்கு ஒரு இளைஞனை தேர்வு செய்திருப்பார் பாருங்கள். அவரை பார்த்தால் இளவயது ஷாருக்கான் போல இருக்கிறது. ராஜு சில படங்களில் கேரக்டர் ரோல் பண்ணியிருந்தாலும் இப்படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார்.

பொன்வண்ணன் பற்றி சொல்லவே வேண்டாம். காவல் துறை அதிகாரிக்கு பொருத்தமான செலக்‌ஷன். ஜாங்கிரி மதுமிதா சில இடங்களில் வந்து போகிறார். இவருக்கு ஜோடியாக அருண்ராஜா காமராஜ்.

படத்திற்கேற்ற இசை. போதுமான அளவில் பின்னணி இசையை பயன்படுத்தியிருக்கிறார் இசையமைப்பாளர் அச்சு ராஜாமணி. உண்மையாக நடந்த சிறு சம்பவத்தை படமாக காட்டியிருக்கிறார் இயக்குனர் பிரசாந்த்.

கிளாப்ஸ்

ஹீரோ, ஹிரோயின் கெமிஸ்ட்ரி ஓகே. முதல் அட்டம்ட்டிலேயே ஹீரோ பாஸ்.

இயக்குனர் கதை நகர்த்தும் விதம் சரியான ரூட்.

ஒரே ஒரு ஸ்மைல் என்றால் விடிவி கணேஷால் தான்.

பல்பஸ்

ஜாங்கிரி மதுமிதா, விடிவி கணேஷ் என காமெடி நடிகர்கள் இருந்தும் காமெடிக்கான பிளாட் ஃபார்ம் இல்லாமல் போய்விட்டது. எஞ்ஜாய்மெண்ட் மிஸ்ஸிங்.

அருண்ராஜா காமராஜ் காமெடி செய்ய முயற்சிக்கிறார். ஆனால் அதைகான களம் இல்லை.

கிளைமாக்ஸில் இன்னும் சற்று வேகம் காட்டியிருக்கலாம்.

மொத்தத்தில் யானும் தீயவன் ஓகே.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About