'பரணியைத் தனிமையில் தவிக்கவிட்டனர்!' - பிக் பாஸ் மீது பாயும் இயக்குநர்

'பிக் பாஸ்' நிகழ்ச்சியிலிருந்து பரணி வெளியேறி இருக்கும் நிலையில், சமூக வலைதளங்களில் பலர் பரணிக்கு ஆதரவாகக் குரல் கொடுத்து வருகிறார்...

'பிக் பாஸ்' நிகழ்ச்சியிலிருந்து பரணி வெளியேறி இருக்கும் நிலையில், சமூக வலைதளங்களில் பலர் பரணிக்கு ஆதரவாகக் குரல் கொடுத்து வருகிறார்கள். 'பலூன்' படத்தின் இயக்குநர் சினிஸ், பரணியைத் தனது அடுத்தப் படத்தில் ஒப்பந்தம் செய்வேன் என்று ஃபேஸ்புக்கில் தெரிவித்திருந்தார். இதுபற்றி சினிஸிடம் கேட்டால், 'உண்மைதான்' என்கிறார் சினிஸ்.

சின்னத்திரையில் இதுவரை சீரியல் பார்த்தவர்களையும் கிரிக்கெட் பார்த்தவர்களையும் தனது கட்டுப்பாட்டுக்குள் குத்தகைக்கு எடுத்துள்ளது 'பிக் பாஸ்' நிகழ்ச்சி. திங்கள் முதல் ஞாயிறு வரை இரவு நேரங்களில் பலரையும் தன் ஆளுமைக்குள் வைத்திருக்கும் 'பிக் பாஸ்' நிகழ்ச்சியை மூன்று கோடிக்கும் அதிகமானோர் பார்த்து வருகின்றனர் என்று விஜய் டிவி தற்போது தெரிவித்துள்ளது. பங்கேற்றப் பதினைந்து போட்டியாளர்களில் இதுவரை நான்கு பேர் வெளியேறியிருக்கின்றனர்.  இதில், போட்டியாளர் நடிகர் கஞ்சா கருப்பு வெளியேறியபோது, மற்ற போட்டியாளர்கள் தங்களின் கண்ணீரை வெளிப்படுத்தி கஞ்சா கருப்புக்குத் தங்களது ஆதரவைத் தெரியப்படுத்தினர்.

ஆனால், நடிகர் கஞ்சா கருப்பு வெளியேறியதுக்குப் பின்பு, நடிகர் 'பரணி'யை மற்ற சக போட்டியாளர்கள் அவரது கேரக்டர் வைய்ஸ் தப்பாகப் பேசினார். நடிகர் பரணியும், ''தன்னால் இனி 'பிக் பாஸ்' வீட்டில் இருக்க முடியாது. நான் மிகுந்த மன உளைச்சலில் இருக்கிறேன். என்னை வீட்டைவிட்டு வெளியேற்றுங்கள், இல்லையென்றால் நானே, வீட்டுச் சுவரைத் தாண்டிக் குதிப்பேன்'' என்று கூறி முயற்சியும் செய்துவிட்டார். இந்தச் சம்பவத்துக்குப் பிறகு, நடிகர் பரணியிடம் பேசினார் 'பிக் பாஸ்'. மேலும், பரணி விதிமுறையை மீறியதைக் காரணம்காட்டி அவரைப் போட்டியிலிருந்தும் வெளியேற்றினார் 'பிக் பாஸ்'.

'பிக் பாஸ்' நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய பரணி, ''நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன், எனக்கு 'பிக் பாஸ்' நல்ல அனுபவத்தையே கொடுத்தது'' என்று நமது பேட்டியில் கூறியிருந்தார். இந்நிலையில், சின்னத்திரையைச் சேர்ந்த பல பிரபலங்கள், பரணிக்கு ஆதரவாகச் சமூக வலைதளங்களில் தங்கள் கருத்தை தெரிவித்தனர். சின்னத்திரை நடிகர் அமித் பார்கவ், 'பரணி ஓர் அப்பாவி' என்று தான் வெளியிட்ட ஒரு வீடியோ மூலமாகத் தெரிவித்திருந்தார். ட்விட்டரில் நடிகர் சாந்தனு மற்றும் நடிகை சாந்தனியும் நடிகர் பரணிக்கு ஆதரவாக ட்விட் தட்டியிருந்தனர்.

தற்போது பரணிக்கு ஆதரவாக இளம் இயக்குநரும் கைகோத்துள்ளார். ஜெய், அஞ்சலி நடிப்பில் 'பலூன்' படத்தை இயக்கியிருக்கும் சினிஸ் தனது ஃபேஸ்புக் பதிவில், 'பலூன் திரைப்படம் ரிலீஸாகி வெற்றிபெற்று, நான் வேறு ஒரு தமிழ்ப் படத்தை இயக்கினால், அந்த நேரத்தில் நடிகர் பரணியின் கால்ஷீட் கிடைத்தால் அவரும் என் படத்தில் இருப்பார்' என்று குறிப்பிட்டிருந்தார்.

இதுபற்றி இயக்குநர் சினிஸிடம் பேசினோம். ''நான் 'பிக் பாஸ்' நிகழ்ச்சியை வழக்கமாகப் பார்ப்பேன். ஒரு ஆடியன்ஸாக நான் சொல்ல விரும்புவது, ஓர் அறைக்குள் பத்து நபர்கள் இருந்து, அதில் இருக்கும் ஒன்பது நபர்களும், ஒருவரை மட்டும் கார்னர் செய்தால், கண்டிப்பாக அவரது (பரணி) மனநிலை கடினமாகத்தான் இருக்கும். பரணி நிஜவாழ்க்கையில் எப்படிப்பட்ட நபர் என்று எனக்குத் தெரியாது. ஆனால், 'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் அவர் யாரிடமும் தப்பாக நடந்துகொள்ளவில்லை. அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து அவரை கார்னர் செய்தார்கள். அதனால்தான் பரணி, அனைவரும் இருந்தும் தனிமையை உணர்ந்தார். ஒருவரை அவரின் பெர்சனல் வைய்ஸ் தப்பாகப் பேசக் கூடாது. அதனால்தான் நான் அவருக்கு ஆதரவாக ஃபேஸ்புக்கில் பதிவுசெய்தேன். கண்டிப்பாக, 'காலங்கள் கூடினால் அவர் எனது அடுத்தப் படத்தில் இருப்பார்’ என்று கூறினார் இயக்குநர் சினிஸ்

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About