தமிழில் கச்சேரி நடத்திய ஏ. ஆர். ரஹ்மான்: பாதியில் வெளியேறிய வட இந்தியர்கள்!

ஏ.ஆர். ரஹ்மான் பல்வேறு இந்திய மொழிகளில் இசையமைத்துள்ளார். குறிப்பாக, ஆங்கிலப்படங்களிலும் இசையமைத்துள்ளார். இதனால், தேசிய விருது முதல் ஆஸ்கர...

ஏ.ஆர். ரஹ்மான் பல்வேறு இந்திய மொழிகளில் இசையமைத்துள்ளார். குறிப்பாக, ஆங்கிலப்படங்களிலும் இசையமைத்துள்ளார். இதனால், தேசிய விருது முதல் ஆஸ்கர் வரை ரஹ்மானைத் தேடி வந்தன. இதனால், உலகம் முழுவதும் ஏ.ஆர். ரஹ்மான் இசைக்கு என்றே ஒரு கூட்டம் உள்ளது. இதன் காரணமாக ஏ.ஆர். ரஹ்மான் நிகழ்ச்சிகள் எங்கு நடந்தாலும், அங்கு அட்டண்டன்ஸ் போட்டு விடுவார்கள்.

இந்நிலையில், லண்டனின்  வெம்ப்லே பகுதியில், "நேற்று, இன்று, நாளை" என்ற பெயரில் இசை கச்சேரிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இது முழுக்க, முழுக்க தமிழ் பாடல்கள் பாடும் நிகழ்ச்சியாகும். ஆனால், இது தெரியாத பல வட இந்தியர்கள் இந்த நிகழ்ச்சிக்கு ஆர்வமுடன் சென்றுள்ளனர்.

நிகழ்ச்சியில் ஏ.ஆர். ரஹ்மான் தமிழ் பாடல்கள் மட்டுமே பாடியதால், வட இந்தியர்கள் கடுப்பாகி பாதியிலேயே வெளியேறி விட்டனர். மேலும், டிக்கெட் கட்டணத்தையும் திருப்பியளிக்க வேண்டும் என்று சிலர் கோரி வருகின்றனர். அதோடு விடாமல், "தமிழ் பாட்டு மட்டும்தான் பாடுவீர்களா? அப்ப நாங்கள் எல்லாம் தக்காளி தொக்கா?" என்ற ரேஞ்ச்சில் ஸ்டேட்டஸ்களை பறக்க விட்டுக் கொண்டிருக்கின்றனர்.

இதற்கு சில தமிழர்களும், "நிகழ்ச்சி என்ன என்றே தெரியாமல் வந்துட்டு பொங்காதீங்க பாஸ். அவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்பதை புரிந்துகொள்ளுங்கள்" என்று பதிலளித்து வருகின்றனர்.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About