பலத்த மவுனத்திற்கு பின் வாயை திறந்த ரஜினிக்கு கமல் நன்றி!

எதையும் சொல்ல வேண்டிய நேரத்தில் சொல்லாமலும், எதையும் செய்ய வேண்டிய நேரத்தில் செய்யாமலும் மவுனம் காப்பதில், ரஜினிக்கு நிகர் அவரே! ‘தென்னங்கன...

எதையும் சொல்ல வேண்டிய நேரத்தில் சொல்லாமலும், எதையும் செய்ய வேண்டிய நேரத்தில் செய்யாமலும் மவுனம் காப்பதில், ரஜினிக்கு நிகர் அவரே! ‘தென்னங்கன்னை நடும்போதே தேங்காய்க்கு சொல்லி வைக்கணும்’ என்கிற அளவுக்கு மிதமிஞ்சிப் போகும் அவரது சுறுசுறுப்புக்கு மற்றுமொரு உதாரணமாக அமைந்துவிட்டது இந்த தியேட்டர் ஸ்டிரைக் விவகாரமும், லோக்கல் டாக்ஸ் விவகாரமும்!

ரஜினி குரல் கொடுக்கணும். ரஜினி குரல் கொடுக்கணும் என்று விவேக், சேரன் போன்றோர் கத்தி ஓய்ந்த நேரத்தில் தன் கோரிக்கையை அரசுக்கு தெரிவித்தார் ரஜினி. அதுவும் தனது ட்விட்டர் பக்கத்தில். ‘தமிழ் திரைப்படத்துறையில் லட்சக்கணக்கானோரின் வாழ்வாதாரம் அடங்கியிருப்பதால், சினிமாத் துறையினரின் கோரிக்கையை அரசு பரிசீலிக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ள ரஜினியின் ட்விட்டுக்கு நன்றி தெரிவித்திருக்கிறார் கமல்.

நேற்று கமல் வெளியிட்ட அறிக்கை புயல் என்றால், ரஜினியின் ட்விட் சின்ன டேபிள் பேன். போகிற போக்கை பார்த்தால், ரஜினியை முந்திக் கொண்டு அரசியல் கிணற்றில் கமல் குதித்துவிடுவார் போலிருக்கே?

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About