March 15, 2015
'அது' நல்லது... அந்த 'அது' எதுங்க...?
March 15, 2015<
கொஞ்சம் இருப்பா.... நீங்க நினைத்து வந்த அந்த 'அது' இது இல்லீங்கோ.....அந்த 'அது' மருத்துவம் சம்பந்தப்பட்டது...! மருத்துவக் குறிப்பு சம்பந்தமாக நாம் பார்க்க இருப்பது அந்த 4 நல்ல விசயங்களை பற்றி தான். 1. இசை நல்லது... எப்படின்னு கேட்கிறீங்க தானே? குறைப் பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகளை மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சில நாட்கள் கண்காணிக்க வேண்டியிருக்கும். இப்படிப்பட்ட குழந்தைகள் தாலாட்டு பாடல்களாலும், இனிமையான இசையாலும் பலன் பெறுகின்றன என்கிறது 'பீடியாட்ரிக்ஸ்(pediatrics)' இதழ். அமெரிக்காவின் 11 மருத்துவமனைகளில் 272 குறைப்பிரசவ குழந்தைகளிடம் ஆராய்ச்சி நடந்தது. வழக்கமான சிகிச்சைகளோடு தாலாட்டு பாடல், பெற்றோரே பாடிய பாட்டு, இதயத்துடிப்பு போன்ற ஓசை அடங்கிய இசை என பலவற்றை மாற்றி மாற்றி குழந்தைகளைக் கேட்க வைத்தார்கள். இசை கேட்ட குழந்தையின் இதயத் துடிப்பு முதல் உடல் வளர்ச்சி வரை எல்லாவற்றிலும் முன்னேற்றம் இருந்ததாம்! 2. புதுசு நல்லது... எப்படின்னு கேட்கிறீங்க தானே?...