May 02, 2018
அஜித் பணம் கொடுத்தது உண்மை தான், ஆதாரத்துடன் நிரூபணம்
May 02, 2018<
அஜித்தின் பிறந்தநாள் நேற்று சமூக வலைத்தளங்களில் உலக அளவில் ட்ரெண்ட் செய்து கொண்டாடப்பட்டது. அப்போது இயக்குனர் சுசீந்திரனும் தன் வாழ்த்தை அஜித்திற்கு கூறினார்.அதே நேரத்தில் அஜித் தன் நண்பரின் சிகிச்சைக்கு பணம் கொடுத்ததாக சுசீந்திரன் தெரிவிக்க, இதை ஒருவர் மறுத்து பேஸ்புக் பக்கத்தில் கருத்து தெரிவித்தார்.இதை தொடர்ந்து அவரின் கருத்திற்கு கிழே கமெண்ட் பாக்ஸில் ஒருவர் ‘ரோஜா ரமணனுக்காக அஜித் சாரிடம் உதவி கேட்டு சென்ற குழுவில் நானும் ஒருவன். அஜித் சாரிடம் பிரதானமாக பேசியது நீங்கள் தான் இலக்கியன். ஆனால் அப்போது அவர் நடித்துக்கொண்டிருந்தது வரலாறு படம் அல்ல., வில்லன். அஜித் சாரின் சார்பாக ராஜா என்பவரின் மூலமாக 20 ஆயிரம் ரூபாய்க்கான காசோலை ரோஜா ரமணின் பெயருக்கு ராமச்சந்திரா மருத்துவமனைக்கு அளிக்கப்பட்டது’ என்று கருத்தை கூறியவருடன் சென்ற கணேஷ் என்பவரே தெரிவித்துள்ளார்.இதில் அவர் சொன்ன கருத்திற்கு வரலாறு என்று தவறாக சொன்னதை வில்லன் என்று மாற்றிய...