January 18, 2019
சன் டிவிக்காக புது அவதாரம் எடுக்கும் விஜய் சேதுபதி: வீடியோ இதோ
January 18, 2019விஜய் சேதுபதியும் டிவி நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளார். கமல் ஹாஸன், விஷால், பிரசன்னா, வரலட்சுமி சரத்குமார், ஸ்ருதி ஹாஸன் உள்ளிட்...
விஜய் சேதுபதியும் டிவி நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளார்.
கமல் ஹாஸன், விஷால், பிரசன்னா, வரலட்சுமி சரத்குமார், ஸ்ருதி ஹாஸன் உள்ளிட்டோர் டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்கள். இந்த வரிசையில் விஜய் சேதுபதியும் சேர்ந்துள்ளார்.
சன் டிவியில் ஒளிபரப்பாக உள்ள அது எந்த வகையான நிகழ்ச்சி என்ற விபரம் விரைவில் வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் தான் புதிய அவதாரம் எடுத்துள்ளது குறித்து ட்விட்டரில் அறிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் விஜய் சேதுபதி.
முதன் முறையாக
வினா நான், விடை அவர்கள்!@SunTV #TheNewHostInTown @NoiseAndGrains @VisionTime
“அந்த கதைல அவங்க தான் ஹீரோ
நான் ஹீரோ Friend” pic.twitter.com/eqoAvWHLfB
— VijaySethupathi (@VijaySethuOffl) December 10, 2018
விஜய் சேதுபதி சொல்வதை பார்த்தால் விஷாலை போன்று சமூக அக்கறை கொண்ட நிகழ்ச்சியை தான் தொகுத்து வழங்கவிருக்கிறார் என்று தெரிகிறது. இந்த நிகழ்ச்சியில் நான் ஹீரோ அல்ல ஹீரோவின் நண்பன் என்கிறார் அவர்.
நிஜ வாழ்க்கையின் ஹீரோக்களை நமக்கு காட்ட உள்ளார் விஜய் சேதுபதி.