கையெடுத்து கும்பிட்டு கெஞ்சும் விஷால்- உள்ளே நடந்தது இது தான்
December 05, 2017விஷால் ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார். அவர் மனுவை பார்த்த தேர்தல் ஆணையர் இரண்டு பேர் விஷாலுக்கு எதிராக கையெழுத்...
இதனால், விஷால் மட்டுமின்றி அனைவருமே அப்செட் ஆனார்கள். இதை தொடர்ந்து தேர்தல் ஆணையிரிடம் விஷால் கையெட்டுத்து கும்பிட்டு கெஞ்சினார்.
அவர் பேசுகையில் ‘மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் தான் வந்திருக்கின்றேன், எல்லா போட்டியாளர்களையும் அனுமதித்த நீங்கள், எனக்கு மட்டும் ஏன் வெளியே போன் செய்துவிட்டு வந்து நிராகரித்தீர்கள்’ என கெஞ்சினார்.
இதை தொடர்ந்து பலரும் விஷாலுக்காக தேர்தல் ஆணையிரிடம் கெஞ்சி கேட்டும் அவருடைய வேட்புமனுவை நிராகரித்துள்ளனர்.
விஜய் சேதுபதியின் ரூ 200 கோடி பட்ஜெட் படத்தின் படப்பிடிப்பு தேதி வெளிவந்தது
December 05, 2017தமிழ் சினிமாவில் தொடர்ந்து தரமான படங்களாக தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் விஜய் சேதுபதி. இவர் திரைப்பயணத்தில் மிக முக்கிய படமாக SyeRaa அமையவ...
ஆம், ரூ 200 கோடி பட்ஜெட்டில் உருவாகவிருக்கும் இப்படத்தில் சிரஞ்சீவி ஹீரோவாக நடிக்க, அமிதாப் பச்சன், சுதீப்புடன் முக்கியமான கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதியும் நடிக்கவுள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்பு நாளை பிரமாண்டமாக ஐதராபாத்தில் தொடங்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இப்படம் தான் அடுத்த வருடம் இந்திய ரசிகர்களால் மிகவும் எதிர்ப்பார்க்கப்படும் படமாக இருக்கும் என்று தெரிகின்றது.
விஜய் ஆண்டனிக்கு முதன் முறையாக வந்த சோகம்
December 05, 2017விஜய் ஆண்டனி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளர்ந்து வருபவர். இவர் நடித்தாலே அந்த படம் தரமானதாக தான் இருக்கும் என்று பலரும் நம்பி செல்வார...
அப்படியிருக்கையில் இவர் நடிப்பில் கடந்த வாரம் திரைக்கு வந்த அண்ணாதுரை அவர் திரைப்பயணத்தில் சந்தித்த மிகப்பெரும் தோல்வி படமாக அமைந்துள்ளது.
இதனால், விஜய் ஆண்டனி கடும் வருத்தத்தில் உள்ளதாக கிசுகிசுக்கப்படுகின்றது, எப்போதும் தரமான கதைகளை தேர்ந்தெடுப்பவர், தற்போது மசாலா பக்கம் சென்று கொஞ்சம் சறுக்கியுள்ளது பலருக்கும் அதிர்ச்சி தான்.
ஆனால், இவர் கையில் தொடர்ந்து படங்கள் இருப்பதால் உடனே கம்பேக் கொடுப்பார் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
மனைவியின் ஆசையை நிறைவேற்றாத அம்பேத்கர்! நினைவு தினச் சிறப்புப் பகிர்வு!
December 05, 2017‘‘அய்யா... உங்களால் அதிக நேரம் சலிப்பின்றி, களைப்பின்றி புத்தகங்களை எப்படி வாசிக்க முடிகிறது? அதன் ரகசியத்தை எங்களுக்குச் சொல்லுங்கள். இடைய...
அதே நண்பர்... அவரிடம், ‘‘உங்கள் நூலகம்தான் பெரிய தனியார் இல்ல நூலகம் என்று கூறப்படுகிறதே’’ என்று கேட்கிறார். அதற்கு அந்த நபர், ‘‘அப்படி நான் உங்களிடம் பெருமையாக, இதுதான் உலகின் மிகச் சிறந்த தனியார் நூலகம் என்று கூறிக்கொள்ள மாட்டேன். அதில், சிறந்த தொகுப்புகளைச் சேகரித்து வைத்திருக்கிறேன் என்பதுதான் உண்மை. பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்துக்கு இதனை அளித்துவிடுங்கள். இதை, விலைக்குத்தான் என்னிடம் அவர்கள் கேட்டார்கள். நான் மறுத்துவிட்டேன்’’ என்கிறார் பெருமைபொங்க.
இப்படிப்பட்ட பெருமைக்குரிய மனிதரைப் பற்றி தந்தை பெரியார், ‘‘அவர், இந்தியாவிலேயே தலைசிறந்த அறிவாளிகள் என்று கருதப்படும் சிலரில் ஒருவர். அவர், தனது வாழ்நாள் முழுவதும் மக்களை, அறிவைப் பயன்படுத்துகிறவர்களாகவும் அறிவுக்கு முழுச் சுதந்திரம் கொடுப்பவர்களாகவும் ஆக்கவேண்டும் என்பதற்காகவே பாடுபட்டவர். அவர் நம்மைப்போலவே சாதாரண மனிதர்களில் ஒருவர். சக்திக்கு மேற்பட்ட எந்தவித தெய்வீக சக்தி என்பதோ, தன்மையோ எதுவும் அவரிடத்தில் கிடையாது. அவர் ஒரு மகானோ, மகாத்மாவோ, முனிவரோ, ரிஷியோ, தவசிரஷ்டரோ, வரப்பிரசாதியோ அல்ல... சித்தார்த்தர் எப்படி ஒரு சாதாரண மனிதராக இருந்து மனிதச் சமுதாயத்துக்கு எப்படிப்பட்ட தொண்டு ஆற்றமுடியுமோ, அப்படிப்பட்ட தொண்டாற்றியவர்’’ என்கிறார்.
காலம் கடக்கிறது... நேருவின் அமைச்சரவையில் அங்கம் வகிக்கிறார் அந்த நபர். கம்யூனிஸ்ட் கட்சியினர் அவரை, ‘‘காங்கிரஸில் ஐக்கியமாகிவிட்ட பூஷ்வா அமைச்சர்’’ என்று கிண்டலடிக்கின்றனர். அதற்கு அந்த நபர், ‘‘எளிதில் தண்ணீரில் கரைந்தோடும் களிமண்ணைப்போல் நான் இருக்கவில்லை. நான், ஆறுகளைத் திசைதிருப்பிவிடும் உருகிவிடாத கற்பாறை போன்றவன். நான் எங்கிருந்தாலும், எப்படிப்பட்டவரின் நட்பு கிடைத்தாலும் என்னுடைய தனித்தன்மையை எப்போதும் இழக்கமாட்டேன்’’ என்று சாட்டையடி கொடுக்கிறார்.
இப்படிச் சாட்டையடி கொடுத்த அந்த நபர் பின்னாளில் உலகம் மதிக்கும் அளவுக்கு மாமேதையாகிறார். உலகத்தையும், மக்களையும் எப்படி நேசித்தாரோ, அதுபோல் தன் மனைவியையும் நேசித்தார். இப்போதெல்லாம் அரசியல் தலைவர்கள் எங்கே மக்களை நேசிக்கிறார்கள்? பேரம் பேசவும், விடுதியில் இருக்கவும்தானே ஆசைப்படுகிறார்கள். இதைத்தான் பெரியார் அன்றே, “இன்றைக்கு இருக்கும் பெருந்தலைவர்கள் எனப்படும் பலரும் விளம்பரத்தாலும் மற்றவர்களுடைய பாராட்டினாலும் பெரிய ஆள்கள் ஆனார்களே தவிர, தங்களது அறிவினாலோ, அனுபவ ஆராய்ச்சி காரணமாகவோ அல்லது மக்களுக்குப் பயன்படும் வகையில் தொண்டாற்றியமை காரணமாகவோ கிடையாது. அப்படி உண்மையான தொண்டு புரிபவர்களுக்கு மக்களிடத்தில் செல்வாக்கும் புகழும் கிடைப்பதற்குப் பதில் எதிர்ப்பும் வசவுகளும்தான் கிடைக்கும்” என்றார். அதைத்தானே இன்று நம் அமைச்சர்கள் செய்துகொண்டிருக்கிறார்கள்.
அம்பேத்கர்பெருமையான விஷயங்களைப் பேசிக்கொண்டிருக்கும்போது சில பிரச்னையான விஷயங்களும் வரத்தானே செய்யும். நெற்கதிரோடு இருக்கும் களைபோல... நாம் களையை நீக்கிவிட்டு மீண்டும் அந்த நபரின் கதைக்குள் வருவோம்... அந்த நபருடைய முதல் மனைவி மிகுந்த கடவுள் பக்திகொண்டவர். ஆகையால், பந்தார்பூர் என்ற ஊரில் இருக்கும் கோயிலுக்குச் செல்ல வேண்டும் ஆசைப்படுகிறார். அதை, தன் கணவரிடம் தெரிவிக்கிறார். அந்தக் கோயிலுக்குள் தாழ்த்தப்பட்டவருக்கு அனுமதி இல்லை... இதனால் தன் மனைவியை அங்கு அழைத்துச் சென்று அவமானப்பட வேண்டாம் என்று நினைக்கிறார். ஆதலால், அவரிடம் அன்புடன் வேண்டுகோள் வைக்கிறார்... அவரும், கணவனின் பேச்சுக்கு மதிப்பு கொடுத்து கேட்கிறார். ‘‘கடவுள் சிலையை வணங்குவதை மறந்துவிடு... நம்முடைய ஒழுக்கமான வாழ்வின்மூலம் அடித்தட்டு மக்களுக்குச் சுயநலமின்றிப் பணிபுரிவதன் வழியாக என்றாவது ஒருநாள் நாம் வணங்கக்கூடிய கடவுளை நம்மிடத்திலேயே உருவாக்குவோம்’’ என்கிறார்.
என்ன செய்வார் மனைவி? கணவரின் பேச்சுக்கு எதிர்ப் பேச்சு இல்லாமல் மெளனம் காக்கிறார்; கடைசிவரை தன் ஆசை நிறைவேறாமல் ஒருநாள் மரணித்தே விடுகிறார் அந்த நபரின் மனைவி. தன் மனைவியின் ஆசையை அவர் நிறைவேற்றாதபோதிலும், தாழ்த்தப்பட்ட மக்களுக்காக இறுதிவரை போராடினார்; அதில் வெற்றியும் பெற்றார். தாழ்த்தப்பட்ட மக்களுக்காகத் தன் இன்னுயிரையும் ஈந்த அந்த நபர் வேறு யாருமல்ல.. நம் சட்ட மாமேதை டாக்டர் அம்பேத்கர்தான். அவருடைய நினைவுதினம் இன்று. அவர் மறைந்து ஆண்டுகள் எத்தனை கடந்தால் என்ன? அவர் உதிர்த்துவிட்டுச் சென்ற கருத்துகள் இன்னும் பல அம்பேத்கர்களை உருவாக்கிக்கொண்டுதானே இருக்கின்றன.
‘‘ஆடுகளைத்தான் கோயில்களுக்கு முன்பாகப் பலியிடுவார்கள்... சிங்கங்களை அல்ல; நீங்கள் சிங்கங்களாய் இருங்கள்” - ஆம்... அம்பேத்கரைப்போன்று!
அறிஞர்கள் வாழ்வில் சுவையான சம்பவங்கள் - சர். ஐசக் நியூட்டன்
December 05, 2017அமெரிக்க விஞ்ஞானி சர். ஐசக் நியூட்டன் பூமிக்கு புவியீர்ப்பு சக்தி இருக்கிறது என்பதைக் கண்டுபிடித்துச் சொன்னவர். அவர் ஒரு சமயம் ஆராய்...
அமெரிக்க விஞ்ஞானி சர். ஐசக் நியூட்டன் பூமிக்கு புவியீர்ப்பு சக்தி இருக்கிறது என்பதைக் கண்டுபிடித்துச் சொன்னவர்.
அவர் ஒரு சமயம் ஆராய்ச்சி செய்து கொண்டிருந்த பொழுது அவரைப் பார்க்க நண்பர் ஒருவர் வந்திருந்தார். அவர் அங்கிருந்த அறைக் கதவில் பெரியதும் சிறியதுமாக இரண்டு துவாரங்கள் வட்டமாக இருந்ததைப் பார்த்தார்.
'அறைக் கதவில் இரண்டு துவாரங்கள் போட்டிருக்கின்றீர்களே அது ஏன்?' என்று நியூட்டனிடம் கேட்டார். அதற்கு நியூட்டன் சொன்னார்: நான் சிறியதும், பெரியதும் என்று இரண்டு பூனைகள் வளர்க்கின்றேன். வீட்டின் அந்த அறையைப் பூட்டிக் கொண்டு வெளியில் போய் விட்டால் பெரிய துவாரம் வழியாக பெரிய பூனையும், சிறிய துவாரம் வழியாக சிறிய பூனையும் அறைக்குள் வருவதற்காகவே இந்த இரண்டு துவாரங்களையும் போட்டிருக்கிறேன்' என்று.
அதற்கு இரண்டு துவாரங்கள் தேவையில்லையே? பெரிய துவரம் வழியாகவே இரண்டு பூனைகளும் வந்து விடலாமே' என்று நண்பர் கூறியதும், விஞ்ஞானி நியூட்டன் திடுக்கிட்டார். 'ஆமாம், நீங்கள் சொல்வது சரி தான். எனக்கு இந்த யோசனை தோன்றவில்லையே' என்று கூறியவர் சிறிய துவாரத்தையும் அடைக்கச் சொன்னார்.
அண்ணாதுரை அனைவருக்கும் பிடிக்கும். பார்க்கலாம்.
December 05, 2017இப்போதெல்லாம் படங்களுக்கு கடும் போட்டி உண்டு. போட்டிக்கு நடுவிலும் சில படங்களுக்கு சற்று எதிர்ப்பார்ப்பு அதிகம் உண்டு. நடிகர் என்பதால் மட்ட...
அப்படியாக விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியாகியுள்ள படம் தான் அண்ணாதுரை. சரி இந்த துரை என்ன சொல்கிறார் என பார்க்க படத்திற்குள் போவோமா...
கதைக்களம்
படத்தில் அண்ணாதுரை, தம்பிதுரையாக இருவரும் விஜய் ஆண்டனி தான். எளிமையான குடும்பம். அப்பா துணிக்கடை நடத்தி வருகிறார். அண்ணன் விஜய் ஆண்டனிக்கு பித்து பிடித்தது போல வேலையில்லாமல் குடியே குடி என இருப்பார். அவருக்கு ஒரு சோக பின்னணி இருக்கிறது.
தம்பி விஜய் பள்ளிக்கூடத்தில் வாத்தியார். உடனே சைத்தான் படத்தை நினைத்து விடாதீர்கள். இவர் வேறு துறையில் வாத்தியார். இவருக்கு ஒரு காதல் பின்னணி. டயானாவுடன் போகிற போக்கில் வந்த காதல் தான்.
போலிஸ் பெண் ஒருவர் காம வக்ர புத்தி கொண்ட கயவர்கள் இடத்தில் மாட்டிக்கொள்கிறார். அவர்களிடம் இருந்து அப்பெண்ணை காப்பாற்றி வீடு சேர்க்கிறார். விஜய் ஆண்டனியின் அப்பா ஊரில் வியாபாரிகள் நல சங்க தலைவர்.
தன் நண்பன் காளி வெங்கட்க்காக கடன் வாங்கி கொடுத்து உதவி செய்ய போய் கந்து வட்டி கும்பலிடம் சிக்குகிறார். ஆனால் அந்த கும்பல் வேறு விதத்தில் காய் நகர்த்துகிறது. எதிர்பராத விதமாக அண்ணா மீது கொலை பழி விழுகிறது.
இதற்கிடையே குடும்பத்திற்குள் சிக்கல், போலிஸ் வலை வீச்சு, எதிர்பாராத சோகங்கள், தம்பியின் திருமணம் என எல்லாம் கேள்விக்குறியாகி இருக்கிறது. அண்ணன் விஜய் என்ன ஆனார், அவரின் குடும்பம் என்ன ஆனது. அண்ணாதுரை பித்தன் போல் இருப்பதன் பின்னணி என்ன என்பது தான் கதை.
படத்தை பற்றிய அலசல்
விஜய் ஆண்டனியின் படங்கள் என்றால் மக்கள் மத்தியில் இடம் பிடிக்கும் என்ற நம்பிக்கை சினிமாவில் உள்ளது. கதையின் தாக்கம் நாட்கள் நகர்ந்தாலும் நிற்கும் என சொல்லலாம். அப்படியாக அவரின் பிச்சைக்காரன் இடம் பிடித்தது. இந்த அண்ணாதுரை அரசியல் படமாக இருக்கும் என செவி வழி செய்தியாக சொல்லப்பட்டது.
ஆனால் இப்படத்தில் எதிர்பாராத ட்விஸ்ட் வைத்திருக்கிறார். அவரின் நடிப்பு எப்போது எதார்த்தம் என்பதை இப்படமும் சொல்லியிருக்கிறது. படத்தில் நடிகர் காளி வெங்கட் உடன் இயல்பான காமெடி.
கதைக்குள் தான் காமெடி என்ற லாஜிக்கை சரியாக காண்பித்திருக்கிறார் இயக்குனர். அண்ணன் விஜய்யின் ஆண்டனி மீது ஜீவல் மேரியின் காதல் காளி வெங்கட்க்கு ஷாக். ஏன் என்பதை படத்தில் பாருங்கள். ஓகே.
சில இடங்களில் தானாக சிரிப்பு வந்து விடும். தம்பியாகவும் அண்ணாகவும் இவர் டூயல் ரோலில் காண்பித்ததில் கூர்மையாக கவனித்தால் தான் வித்தியாசம் புரியும் என சொல்லுமளவுக்கு நடித்திருக்கிறார்.
விஜய் ஆண்டனியின் படத்தில் வரும் ஹிரோயின்கள் எங்கிருந்தாவது வருவார்கள் என்பது போல இங்கே வந்திருக்கும் தியானா தன்னுடைய ரோலை சரியாக அவருக்கு ஈடுகொடுத்திருக்கிறார்.
படத்தில் ஸ்டோரிக்கேற்ற பிஜிஎம். ஜி.எஸ்.டி டூயட் பாடல் என சில விசயங்கள் நினைவில் நிற்கும். முன் பாதி மெதுவாக நகர்ந்தாலும் இரண்டாம் பாதி ஜூட் ஆகிறது.
கிளாப்ஸ்
விஜய் ஆண்டனியின் ரியாக்ஷன் இரண்டு ரோலிலும் குட். நூலிழையில் தான் வித்தியாசம்.
கதையை தேர்வு செய்த விதம் ஓகே. அவருக்கான படம் இது என நினைவூட்டுகிறார்.
இயக்குனர்கள் காட்சிகளை கனெக்ட் செய்தவிதம் ஓகே. ட்விஸ்ட் ரிவீல் ஒர்க்கவுட் செட்டானது.
பல்பஸ்
அண்ணன் விஜய்யை காண்பித்திருக்கும் போது திடீரென தம்பிக்கு இண்ட்ரோ கொடுப்பது மிஸ் மேட்சிங்.
முதல் பாதி மென்மையாக போய் மெதுவாக இண்டர்மிஷன் கொடுப்பது சம்திங் டிஃப்ரண்ட்.
படத்தை இன்னும் கொஞ்சம் கிரிஷ்ப் ஆக்கியிருக்கலாம். பாடல்கள், காமெடி என கூடுதல் கவனம் இல்லை.
மொத்தத்தில் அண்ணாதுரை அனைவருக்கும் பிடிக்கும். பார்க்கலாம்.
திரைவிமர்சனம் -திருட்டு பயலே-2 - அறிமுகம் இல்லாத நபர் யார் கொஞ்சம் உரிமை எடுத்து நம்மிடம் பேசினாலும் ஒரு நொடி திருட்டு பயலே-2 நினைவிற்கு வரும்.
December 05, 2017தமிழ் சினிமாவில் ஒரு படம் ஹிட் ஆனால், அதன் இரண்டாம் பாகம் வருவது தான் ட்ரெண்ட். இவை ஹாலிவுட்டில் மட்டும் இத்தனை நாட்கள் நிகழ்ந்து வர தற்போத...
கதைக்களம்
பாபி சிம்ஹா காவல்துறையில் நேர்மையாக ஒரு நபராக தன் வாழ்க்கையை ஆரம்பிக்கின்றார். தன் பணியில் என்றும் நேர்மையாக உள்ளதால் பல ஊர்களுக்கு மாற்றுகின்றனர், காரைக்குடியில் இருக்கும் அமலா பாலை காதலித்து திருமணம் செய்து சந்தோஷமாக வாழ்கின்றார்.
அப்போது பெரிய மந்திரி, முக்கிய பிரமுகர்கள் செய்யும் திருட்டு வேலையை கண்டுபிடிக்க பாபி சிம்ஹாவை ஒரு ரகசிய வேலையை செய்ய சொல்கின்றனர். அதாவது அவர்கள் பேசும் போன் கால்களை ஒட்டு கேட்கும் வேலை.
அப்படி பாபி சிம்ஹா ஒட்டு கேட்கும் போது அதில் பிரசன்னா பல திருமணம் ஆன பெண்களை மயக்கி பேசி வருவது தெரிகின்றது. ஒரு நாள் யதார்த்தமாக அந்த போன் காலில் அமலா பால் வாய்ஸ் கேட்க, அதை தொடர்ந்து பாபி சிம்ஹாவிற்கும், பிரசன்னாவிற்கும் நடக்கும் ஆடுபுலி ஆட்டமே மீதிக்கதை.
படத்தை பற்றிய அலசல்
பாபிசிம்ஹா தன் திரைப்பயணத்தில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியுள்ளார் போல, கருப்பனை தொடர்ந்து இதிலும் தனக்கான கதாபாத்திரத்தில் நன்றாக நடித்துள்ளார். ரொமான்ஸில் கொஞ்சம் முன்னேற்றம் அடைந்துள்ளார், ஆனால், இன்னும் சில இடங்களில் சொதப்பல் தெரிகிறது.
பிரசன்னா இவரை இதுபோல் ஒரு சில படங்களில் பார்த்திருப்போம், ஆனால், ஒரு சாப்ட்வேர் இன்ஜினியராக இருந்துக்கொண்டு பல பெண்களை இவர் மயக்குவது, பாபிசிம்ஹாவிடம் மாட்டிக்கொண்டு கூட அவர் அலட்டிக்கொள்ளாமல் அவரிடமே டீல் பேசுவது என மிரட்டியுள்ளார். இன்னமும் பிரசன்னாவை தமிழ் சினிமா எப்போது தான் நன்றாக பயன்படுத்துமோ? என்று கேட்க தோன்றுகின்றது.
முதல் பாகத்தில் அப்போது பேமஸாக இருந்த வீடியோ மூலம் பணம் பறிக்கும் வேலையை காட்டிய சுசி, இந்த படத்தில் அட்வான்ஸ் டெக்னாலஜி மொபைலை கையில் எடுத்திருப்பது சூப்பர். அதிலும் அறிமுகம் இல்லாத நபர்கள் எப்படி ஒரு பெண்ணை மயக்க திட்டம் போடுகின்றார்கள், பேஸ்புக்கில் எப்படியெல்லாம் வேலை செய்கின்றார்கள் என்று காட்டிய விதம் பலருக்கும் அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் கொடுக்கலாம், ஒரு சிலர் உஷார் ஆகி திருந்த கூட செய்யலாம்.
நிகழ்காலத்தில் நம் வாழ்க்கையில் பயன்படுத்தும் டெக்னாலஜிகளின் ஆபத்தை காட்டியதற்காகவே பாராட்டலாம். அதே சமயத்தில் திருட்டு பயலே முதல் பாகத்தில் ஒரு எளிமை, யதார்த்தம் இருந்தது, அந்த விஷயத்தில் திருட்டு பயலே 2 கொஞ்சம் செயற்கை மிஞ்சி உள்ளது. படத்தின் முதல் பாதி பிரசன்னா அறிமுகம் வரை மெதுவாகவே நகர்கின்றது.
வித்யாசாகர் நீண்ட இடைவேளைக்கு பிறகு கலக்கியுள்ளார், அதிலும் பின்னணி இசையில் ஒலிக்கும் அந்த திருட்டு பயலே பாடல் ரசிக்க வைக்கின்றது, செல்லத்துரை ஒளிப்பதிவும் சிறப்பு.
க்ளாப்ஸ்
இன்றைய தலைமுறைகள் சந்திக்கும் பிரச்சனையை அழகாக எல்லோருக்கும் புரியும் படி திரைக்கதை அமைத்து எடுத்தது.
பிரசன்னாவின் நடிப்பு, சைக்கோத்தனமாக அவர் செய்யும் வேலைகள், நிதானமாக பாபி சிம்ஹாவை டீல் செய்து அலையவிடும் இடம் என கலக்கியுள்ளார்.
பாபிசிம்ஹா, அமலா பால், பிரசன்னா மூவரும் ஒரு இடத்தில் சந்தித்து ஒருவரை ஒருவர் ஏமாற்றுவதாக நினைத்து நடிக்கும் காட்சி விசில் பறக்கின்றது.
பல்ப்ஸ்
முதல் பாதி திரைக்கதை கொஞ்சம் மெதுவாக செல்கின்றது.
கிளைமேக்ஸ் இன்னமும் அழுத்தமாக இருந்திருக்கலாம்.
மொத்தத்தில் அறிமுகம் இல்லாத நபர் யார் கொஞ்சம் உரிமை எடுத்து நம்மிடம் பேசினாலும் ஒரு நொடி திருட்டு பயலே-2 நினைவிற்கு வரும்.
விஷாலின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதன் பின்னணி! நடந்தது என்ன
December 05, 2017நடிகர் விஷால் சென்னை ராதாகிருஷ்ணன் நகர் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து மனுதாக்கல் செய்திருந்தார். மாலை 5 மணியளவில் எடுத்துக்கொள்ள...
மேலும் காவல் துறையால் கைது செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து தரப்பில் சில விசயங்கள் வெளியாகியுள்ளது. இதன் படி வேட்பு மனுவில் விஷாலுக்கு ஆதரவாக முன்மொழிந்தவர்களில் இருவரின் கையெழுத்து போலி என கூறப்பட்டுள்ளது. மேலும் அந்த இருவர் நேரில் வந்து இது தங்கள் கையெழுத்து அல்ல என கூறினார்களாம்.
மேலும் விஷால் பல்வேறு வங்கிகணக்குகளை மறைத்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இதனால் அவர் மீது வழக்கு பாயும் நிலை உள்ளது
Search This Blog
Blog Archive
- ► 2018 (454)
-
▼
2017
(521)
-
▼
December
(32)
-
▼
Dec 05
(9)
- என்னை நிற்கவிடவில்லை, ஆனால் இவரை ஜெயிக்க வைப்பேன் ...
- கையெடுத்து கும்பிட்டு கெஞ்சும் விஷால்- உள்ளே நடந்த...
- விஜய் சேதுபதியின் ரூ 200 கோடி பட்ஜெட் படத்தின் படப...
- விஜய் ஆண்டனிக்கு முதன் முறையாக வந்த சோகம்
- மனைவியின் ஆசையை நிறைவேற்றாத அம்பேத்கர்! நினைவு தின...
- அறிஞர்கள் வாழ்வில் சுவையான சம்பவங்கள் - சர். ஐசக் ...
- அண்ணாதுரை அனைவருக்கும் பிடிக்கும். பார்க்கலாம்.
- திரைவிமர்சனம் -திருட்டு பயலே-2 - அறிமுகம் இல்லாத ந...
- விஷாலின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதன் பின்னணி! ந...
-
▼
Dec 05
(9)
-
▼
December
(32)