May 01, 2018
கோவை ஆவின் தயிர் பாக்கெட்களில் மலையாள எழுத்துகள்..!
May 01, 2018கோவையில் விற்கப்படும் ஆவின் தயிர் பாக்கெட்டுகளில் மலையாள எழுத்து அச்சிடப்பட்டிருப்பது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. ஆவின் தயிர் மலையாளம் தமிழ...
கோவையில் விற்கப்படும் ஆவின் தயிர் பாக்கெட்டுகளில் மலையாள எழுத்து அச்சிடப்பட்டிருப்பது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
ஆவின் தயிர் மலையாளம்
தமிழக அரசின் ஆவின் நிறுவனம், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம், 25 ரூபாய்க்கு அரைலிட்டர் தயிர் பாக்கெட்டை அறிமுகப்படுத்தியது. பல்வேறு கட்ட ஆலோசனைக்குப் பிறகு, இந்த அரைலிட்டர் தயிர் பாக்கெட் கடந்த பிப்ரவரி மாதம், கோவையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நிலையில், அந்த பாக்கெட்டில் ஆவின் தயிர் என்று தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் அச்சிடப்பட்டுள்ளது.
இதுதவிர, கெட்டித் தயிர் என்று மலையாளத்திலும் அச்சிடப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் முதலே, கோவையில் விற்கப்படும் அரை லிட்டர் ஆவின் தயிர் பாக்கெட்டுகளில் மலையாள எழுத்துகள் அச்சிடப்பட்டுள்ளது. ஆனால், ஆவினின் மற்ற எந்தப் பொருள்களிலும் மலையாள எழுத்துகள் இல்லை. முக்கியமாக, தமிழகத்தின் மற்ற எந்த மாவட்டங்களிலும், ஆவின் பொருள்களில் மலையாள எழுத்துகள் அச்சிடப்படுவது இல்லை என்றே கூறப்படுகிறது.
இது குறித்து ஆவின் வட்டாரத்தில் விசாரித்தபோது, “ஆவினின் அரைலிட்டர் பாக்கெட்டில் மட்டும்தான் மலையாள எழுத்துகள் அச்சிடப்பட்டுள்ளன. இதை உற்பத்தி செய்யும் டி.ஜி.எம் ஒரு மலையாளி. இதனால்கூட மலையாள எழுத்து அச்சிடப்பட்டிருக்கலாம்” என்றனர்.
இதுகுறித்து கோவை ஆவின் நிர்வாகத்தை தொடர்பு கொண்டபோது, “கோவையில் கேரள மக்கள் அதிகம் பேர் வசிக்கின்றனர். அவர்களைக் கவரத்தான் மலையாளத்தை அச்சிட்டுள்ளோம். குறிப்பாக, கேரளாவில் பால் பொருள்களுக்கு டிமாண்ட் அதிகம். எனவே, ஆவின் பொருள்களை அங்கு விற்பனை செய்யவும் திட்டமிட்டுள்ளோம். இதனால், முதல்கட்டமாக, கோவையில் விற்பனையாகும், அரைலிட்டர் ஆவின் தயிர் பாக்கெட்டுகளில் மலையாள எழுத்துகளை அச்சிட்டுள்ளோம். அடுத்தகட்டமாக, மற்ற ஆவின் பொருள்களிலும் மலையாள எழுத்துகளை அச்சிடுவோம்” என்றனர்.