February 04, 2018
நம்ம ஊர் ஹோட்டல்களில் எப்படி எல்லாம் டுபாக்கூர் வேலை நடக்குது என்று அந்தக் கடைக்காரர்களிடமே போட்டு வாங்கிய தகவல்கள்.. . இட்லி: பொதுவா இட்லி மெத்துனு இருக்கணும்னா, ஒரு டம்ளர் இட்லி அரிசிக்கு கால் டம்ளர் உளுந்து தேவை. இரண்டையும் தனித்தனியா ஊறவெச்சு, தனித்தனியாதான் அரைக்கணும். அஞ்சு மணி நேரம் புளிக்கவெச்சு, சுட்டீங்கன்னா பஞ்சு மாதிரி இட்லி தயார். ஆனா, என்ன நடக்குது இங்க? கடை இட்லி அரிசி கால் பங்கு, ரேசன் அரிசி முக்கால் பங்கு, உளுந்து கால் பங்கு, ஜவ்வரிசி முக்கால் பங்கு, நைட்டு ஊறவெச்ச பழைய சாதம் கொஞ்சம், சோடா உப்பு எக்கச்சக்கமா... எல்லாத்தையும் அரைச்சு, மூணு மணி நேரம் வெயில்ல வெச்சுட்டு எடுத்து சுட்டால், கும்முன்னு குஷ்பு இட்லி தயார். அந்த இட்லியும் மீந்துருச்சின்னா, அப்பவும் பிரச்னை இல்லை. அடுத்த நாள் அரைக்கிற மாவுல மீந்துபோன இட்லியைப் போட்டு அரைச்சிடுவாங்க! சோறு: தரமான...
February 04, 2018
பாய் போட்டு படுத்தால் நோய் விட்டுப் போகும்!
February 04, 2018படுக்கைகள் பலவிதம். எத்தகைய படுக்கையில் படுத்து உறங்கினால் என்ன பலன் ஏற்படும் என்பதை "மருத்துவ திறவுகோல்' என்னும் சித்த மருத்...
படுக்கைகள் பலவிதம். எத்தகைய படுக்கையில் படுத்து உறங்கினால் என்ன பலன் ஏற்படும் என்பதை "மருத்துவ திறவுகோல்' என்னும் சித்த மருத்துவ நூல் விளக்கியுள்ளது. கம்பளிப் படுக்கை- குளிருக்கு இதம். குளிர் சுரம் நீங்கும். கோரைப்பாய்- உடல் சூடு, மந்தம், காய்ச்சல் போக்கும், உடலுக்குக் குளிர்ச்சியும், உறக்கமும் ஏற்படும். பிரம்பு பாய்- சீதபேதி, சீதளத்தால் வரும் காய்ச்சல் நீங்கும். ஈச்சம்பாய்- வாதநோய் குணமாகும். உடல் சூடு, கபம் இவை அதிகரிக்கும். மூங்கில் பாய்- உடல் சூடும், பித்தமும் அதிகரிக்கும். தாழம்பாய்- வாந்தி, தலை சுற்றல், பித்தம் நீங்கும். பேரீச்சம்பாய்- வாதகுன்மநோய், சோகை நீங்கும். ஆனால் உடலுக்கு அதிக உஷ்ணம் தரும். இலவம்பஞ்சு படுக்கை- உடலில் ரத்தம், தாது பலம் பெறும். தலை முதல் பாதம் வரையிலான அனைத்து நோய்களும் நிவாரணம் பெறும். மலர்ப்படுக்கை- ஆண்மை அதிகரிக்கும். நன்றாகப் பசியெடுக்கும். இரத்தினக் கம்பளம்- நஞ்சுகளின் பாதிப்பால் ஏற்படும் நோய்களை நீக்கும். ...
February 04, 2018
மதுரவீரன் திரை விமர்சனம்
February 04, 2018விஜயகாந்த் ஒரு காலத்தில் ரஜினி, கமலுக்கு போட்டியாக இருந்த நடிகர், தீவிர அரசியலால் நடிப்பில் இருந்து விலகினார். இந்த நிலையில் தன் மகன் சண்மு...
விஜயகாந்த் ஒரு காலத்தில் ரஜினி, கமலுக்கு போட்டியாக இருந்த நடிகர், தீவிர அரசியலால் நடிப்பில் இருந்து விலகினார். இந்த நிலையில் தன் மகன் சண்முகபாண்டியனை விஜய்காந்த் சகாப்தம் படத்தின் மூலம் களம் இறக்கினார். ஆனால், அப்படம் பெரும் தோல்வியடைய அதை தொடர்ந்து மதுரவீரனாக மீண்டும் சண்முகபாண்டியன் களம் கான, இந்த மதுரவீரன் சகாப்தம் படைத்தாரா? பார்ப்போம்.கதைக்களம்சமுத்திரக்கனி ஊரில் எல்லோரும் மதிக்கும்படி இருக்கும் ஒரு நபர். ஜல்லிக்கட்டில் மேல் ஜாதி, கீழ் ஜாதி இருக்க கூடாது எல்லோரும் இறங்கி மாடுபிடிக்க வேண்டும் என்பதே அவரின் விருப்பம்.ஒரு கட்டத்தில் சமுத்திரக்கனியையே ஒரு கும்பல் கொல்ல, தன் அப்பாவை கொலை செய்தது யார் என்று கண்டுப்பிடிக்க, சண்முகபாண்டியன் மலேசியாவிலிருந்து தன் சொந்த ஊருக்கு வருகின்றார்.வந்த இடத்தில் தன் தந்தை ஜல்லிக்கட்டிற்காக தான் போராடினார் என அவரின் நோக்கம் அறிந்து ஜல்லிக்கட்டையும் நடத்த வேண்டும், அதே சமயம், தன் அப்பாவை கொன்றவனையும் பிடிக்க வேண்டும்,...
February 04, 2018
படை வீரன் திரை விமர்சனம்
February 04, 2018இப்போது இளம் ஹீரோக்கள் பலர் கதாநாயகர்களாக படையெடுத்து வருவது தொடர்கிறது. இதற்கிடையில் பிரபல பாடகரான விஜய் யேசுதாஸ் படைவீரன் மூலம் ஹீரோவாக ப...
இப்போது இளம் ஹீரோக்கள் பலர் கதாநாயகர்களாக படையெடுத்து வருவது தொடர்கிறது. இதற்கிடையில் பிரபல பாடகரான விஜய் யேசுதாஸ் படைவீரன் மூலம் ஹீரோவாக படையெடுத்திருக்கிறார்.படை வீரனாக அவர் எதை நோக்கி படைஎடுக்கிறார் என பார்க்கலாம்.கதைக்களம்அழகான அய்யனார்பட்டி கிராமம். வறட்சியில்லாமல் இருக்கும் நல்ல பூமி. வாழ்வாங்கு வாழும் மனிதர்கள். ஆனால் மனிதர்கள் மனமோ வறண்டு கிடக்கிறது. அம்மக்களுக்கிடையில் ஒரு எளிமையான குடும்பத்தில் இருக்கிறார் நம்ம ஹீரோ விஜய்.கிராமத்து இளைஞர் அதிலும் ஊரில் முக்கிய ஆள் என்றால் சொல்லவா வேண்டும். தன் நண்பர்களுடன் ஆடல், பாடல் கொண்டாட்டம் தான். வேலையில்லாமல் ஜாலியாக பொழுதை போக்கி வரும் இவருக்கு திடீரென போலிஸ் ஆகவேண்டும் என்ற ஆசை வருகிறது.எப்படியோ அதற்கான முயற்சிகள் எடுத்து உள்ளே நுழைய நடப்பதோ வேறு. ஒரு பக்கம் உறவினர் முறையான ஹீரோயினை சகஜமாக வம்பிழுத்து விளையாட அடுத்து எதிர்பாராத விதமாக காதலாய் பற்றுகிறது. ஆனால் ஒரு விசயத்தால் இதுவும் கேள்விக்குறி தான்.இதற்கிடையில்...
February 04, 2018
இனிமேல் என்னை நீங்கள் பார்க்க முடியாது! உறைய வைத்த ராக் ஸ்டார் ரமணியம்மா
February 04, 2018ராக் ஸ்டார் ரமணியம்மா யார் என்பது பலருக்கும் தெரிந்திருக்கும். பிரபல சானலில் பாட்டு நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் இவர். நாடு கடந்து பலரும் இவ...
ராக் ஸ்டார் ரமணியம்மா யார் என்பது பலருக்கும் தெரிந்திருக்கும். பிரபல சானலில் பாட்டு நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் இவர். நாடு கடந்து பலரும் இவருக்கு ரசிகர்களாக இருக்கிறார்கள்.சமீபத்தில் இவரை அந்த நிறுவனம் சிங்கப்பூர் வரை விமானத்தில் அழைத்து சென்றுள்ளது. இது குறித்து மேடையில் பேசியவர் இந்த புகழ் எனக்கு போதும். இனி கூடுதல் காசுக்காக நான் வேறெந்த சானலுக்கும் போக போவதில்லை.என்னை வேறு டிவியில் இனிமேல் நீங்கள் பார்க்க முடியாது. நான் என் பழைய வாழ்க்கையை மறக்க மாட்டேன். வெற்றி, தோல்வியையும் தாண்டி என் பழைய பாதையிலேயே போய் விடுவேன் என கூறினார்.உடனே நடுவர்கள் நீங்கள் மற்ற இடங்களுக்கும் போக வேண்டும். வாய்ப்பை பயன்படுத்த வேண்டும் என கூறினார். ...
February 04, 2018
ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் திரை விமர்சனம்
February 04, 2018படம் எப்படி இருக்கின்றது, இல்லை என்பதை தாண்டி அட, இது விஜய் சேதுபதி படம் என்று நம்பி போகும் இடத்திற்கு சேதுபதி வளர்ந்துவிட்டார். அவரின் தரம...
படம் எப்படி இருக்கின்றது, இல்லை என்பதை தாண்டி அட, இது விஜய் சேதுபதி படம் என்று நம்பி போகும் இடத்திற்கு சேதுபதி வளர்ந்துவிட்டார். அவரின் தரமான பட வரிசையில் இந்த வாரம் திரைக்கு வந்துள்ள படம் தான் ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன், இந்த படமும் அந்த வரிசையில் சேர்ந்ததா? பார்ப்போம்.கதைக்களம்எமசிங்கபுரம் இது தான் கதைக்கு அடித்தளம். ஊரின் இளவரசராக விஜய் சேதுபதி. மன்மதன் போல ஒரு தனி பிரதேசத்தில் ராஜாங்கம் செய்து வரும் இவரது குடும்பத்தில் ஒரு விசயம் நடந்து போக, எடுத்த சபதத்தை முடிக்க சென்னை நகரத்திற்கு தன் நண்பர்களுடன் பயணிக்கிறார்.சென்னையில் வித்தியாசமான தோற்றங்களில் தன் கொள்கையை அடைவதற்காக மாறுகிறார். படத்தின் ஹீரோயின் நிகாரிகாவை பிளான் போட்டு கடத்தி தன் எல்லைக்கு கொண்டு செல்கிறார்.இதற்கிடையில் கல்லூரியில் படிக்கும் ஹீரோயினின் விசயத்தில் கௌதம் கார்த்திக் உள்ளே நுழைகிறார். நண்பராகிறார். விளையாட்டாய் ஒன்றை செய்ய அது விவகாரமாய்...
Search This Blog
Blog Archive
- ▼ 2018 (454)