­
06/11/19 - !...Payanam...!

கிரேஸி மோகன் தமிழ் சினிமாவில் எத்தனையோ காமெடி படங்களில் வசனகர்த்தாவாக இருந்தவர். இவர் இன்று உடல்நலம் முடியாமல் இயற்கை எய்தினார். இதனால், ரச...

<
கிரேஸி மோகன் தமிழ் சினிமாவில் எத்தனையோ காமெடி படங்களில் வசனகர்த்தாவாக இருந்தவர். இவர் இன்று உடல்நலம் முடியாமல் இயற்கை எய்தினார்.இதனால், ரசிகர்கள் அனைவரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர், ரசிகர்கள் மட்டுமின்றி திரைப்பிரபலங்கள் பலரும் வருத்தத்தில் தான் உள்ளனர்.இந்நிலையில் இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் 'நான் ரஜினி, கமல் என முன்னணி நடிகர்களின் படங்களில் வேலை செய்து விட்டேன்.அஜித்துடன் இணைந்து பணியாற்ற விருப்பம், அந்த வாய்ப்பு ஏகன் படத்தின் மூலம் எனக்கு கிடைத்தது.ஆனால், ஒரு சில காரணங்களால் அந்த படத்தில் பணியாற்ற முடியவில்லை' என்று வருத்தத்துடன் கூறியுள்ளார். ...

Read More

வசனங்களுக்கு, குறிப்பாக நகைச்சுவை வசனங்களுக்கு பெயர் போனவர் கிரேஸி மோகன். சில தினங்களுக்கு முன்பு சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அவ...

<
வசனங்களுக்கு, குறிப்பாக நகைச்சுவை வசனங்களுக்கு பெயர் போனவர் கிரேஸி மோகன். சில தினங்களுக்கு முன்பு சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அவசர பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர் நேற்று காலை திடீர் மாராடைப்பால் இயற்கை எய்தினார்.இந்நிலையில் இவரது படங்கள் பலவற்றில் நடித்துள்ள டெல்லி கணேஷ் இவரை பற்றி பேசுகையில், கிரேஸி மோகனின் வசனங்கள் நகைச்சுவையாக இருந்தாலும் நிஜத்தில் அவர் மிகவும் அமைதியான மனிதர். நகைச்சுவைக்காக வசனம் எழுதி வந்தார், திடீரென ஒருநாள் இலக்கியத்திற்காக எழுத ஆரம்பித்தார். நான், எப்படி வெண்பா பற்றியெல்லாம் எழுதுகிறாய்? என கேட்டதற்கு மேலே கையை காட்டி எல்லாம் அவன் செயல் என கூறினார்.முதன்முதலில் தனது நண்பர்கள், சகோதர்களை எல்லாம் வைத்து சொந்தமாக கிரேஸி க்ரியேஷன் என்ற பெயரில் ஒரு நாடக ட்ரூப் ஆரம்பித்தார். அதிலிருந்து தான் அவரது பெயருடன் கிரேஸி என்ற பெயர் சேர்ந்து கொண்டது என புதிய தகவல்களை கூறினார், டெல்லி கணேஷ். ...

Read More

பிக் பாஸ் 3 நிகழ்ச்சி குறித்து வெளியான ஜிஃப் வீடியோவை பார்த்தவர்கள் வேண்டாம் பாஸ் தயவு செய்து மாத்துங்க என்று கோரிக்கை விடுத்துள்ளனர். பிக்...

<
பிக் பாஸ் 3 நிகழ்ச்சி குறித்து வெளியான ஜிஃப் வீடியோவை பார்த்தவர்கள் வேண்டாம் பாஸ் தயவு செய்து மாத்துங்க என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.பிக் பாஸ் 3 நிகழ்ச்சி வரும் 23ம் தேதி துவங்க உள்ளது. கடந்த சீசன்களை போன்று இல்லாமல் இந்த சீசன் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.முந்தைய சீசன்கள் இரவு 9 மணி முதல் ஒளிபரப்பானது. பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்கும் முன்பு ஏகப்பட்ட ப்ரொமோ வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களின் ஆவலை தூண்டுவார்கள். ஆனால் இம்முறை ஏன் ஒரேயொரு வீடியோவுடன் நிறுத்திக் கொண்டுள்ளார்கள் என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பினார்கள்.நடிகர் சங்க தேர்தல்: என் வேட்புமனு தள்ளுபடியா?- ரமேஷ் கண்ணா கொந்தளிப்புஇந்நிலையில் கமல் ஹாஸன் வெவ்வேறு முகபாவனைகள் காட்டும் ஜிஃப் வீடியோவை தற்போது வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோவில் நிகழ்ச்சியின் நேரத்தையும் குறிப்பிட்டுள்ளனர். அதை பார்த்த பிக் பாஸ் ரசிகர்களோ 8 மணி வேண்டாம் பழையபடி 9...

Read More

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அடுத்துள்ள திருப்பனந்தாள் கடைவீதியில் நீலப்புலிகள் இயக்கத்தின் நிறுவனர் டிஎம் மணி என்கிற உமர்பருக்கின் நினைவு நாள...

<
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அடுத்துள்ள திருப்பனந்தாள் கடைவீதியில் நீலப்புலிகள் இயக்கத்தின் நிறுவனர் டிஎம் மணி என்கிற உமர்பருக்கின் நினைவு நாள் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் திரைப்பட இயக்குநர் ரஞ்சித் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசினார்.தனது பேச்சில், “தமிழகத்தில் சாதியக் கொடுமைகள் அதிகமாக நிகழ்ந்ததும், புரையோடிக்கிடப்பதும் இந்த பகுதியில்தான். ஒருங்கிணைந்த இந்த தஞ்சை டெல்டா பகுதியில்தான். அதற்கு காரணம் நிலங்கள்தான்.ராஜராஜ சோழன் காலம்தான் பொற்காலம் என்பார்கள். ஆனால் ராஜராஜ சோழன் ஆண்ட காலம்தான் தமிழகத்தின் இருண்ட காலம். எத்தனையோ பேர் சொல்றாங்க ராஜராஜ சோழன் எங்க சாதி என்று. இங்குள்ள பறையர்கள் சிலர்கூட சொல்கிறார்கள் ராஜராஜ சோழன் எங்க சாதி என்று.சத்தியமாக சொல்கிறேன் ராஜராஜ சோழன் என்னுடைய சாதியாக இருக்கவே முடியாது. இருக்கவேண்டிய அவசியமுமில்லை. மிகப்பெரிய சூழ்ச்சியின் அடிப்படையில் எங்களது நிலங்கள் முழுவதும் பறிக்கப்பட்டது ராஜராஜ சோழன் ஆட்சிக் காலத்தில்தான்.சாதி ரீதியாக மிகப்பெரிய ஒடுக்குமுறை ஆரம்பிக்கப்பட்டது ராஜராஜ சோழன்...

Read More

கும்பகோணம் அருகில் உள்ள திருப்பணந்தாள் கடை வீதியில் நீலப் புலிகள் இயக்க நிறுவனர் உமர் பாரூக் நினைவு நாளில் இயக்குநர் ரஞ்சித் பேசியது பெரும்...

<
கும்பகோணம் அருகில் உள்ள திருப்பணந்தாள் கடை வீதியில் நீலப் புலிகள் இயக்க நிறுவனர் உமர் பாரூக் நினைவு நாளில் இயக்குநர் ரஞ்சித் பேசியது பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. உண்மையில் ராஜராஜ சோழன் பற்றி அவர் பேசியது சில வார்த்தைகள்தான். அதைவிட பெரிதாக அவர் பேசியது மடங்களின் வசமுள்ள நில மீட்பு பற்றியதுதான். இதனால்தான் இந்து அமைப்புகள் பலவும் ரஞ்சித் மீது போலீசில் புகார் கொடுத்துள்ளன.“15 லட்சம் ஹெக்டேர் பாசன நிலங்களைக் கொண்ட டெல்டா பகுதியில் தலித்கள் மட்டுமல்ல, உழைக்கும் மக்கள், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் ஏன் நிலமற்றவர்களாக ஆனார்கள் என்பது முக்கியமான கேள்வியாக உள்ளது. நில உச்ச வரம்புச் சட்டம் எல்லாரையும் கட்டுப்படுத்தியது. ஆனால் இங்குள்ள மடங்களை மட்டும் கட்டுப்படுத்தவில்லை. இங்குள்ள மடங்களிடம் மட்டுமே 40000 ஏக்கர் நிலங்கள் உள்ளன. இந்த நிலங்கள் யாருக்குப் பாத்தியதை? யார் பயன்படுத்துகிறார்கள்? நாம் ஏன் நிலமில்லாமல் போனோம்?இங்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவிலும் உள்ள...

Read More

Search This Blog

Blog Archive

About