அபூர்வ சகோதரர்கள் இந்திய சினிமாவில் பிரமாண்ட வெற்றியை பெற்ற படம். இப்படம் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தியிலும் செம்ம ஹிட் அடித்தது. இந்...
அபூர்வ சகோதரர்கள் இந்திய சினிமாவில் பிரமாண்ட வெற்றியை பெற்ற படம். இப்படம் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தியிலும் செம்ம ஹிட் அடித்தது.
இந்நிலையில் இப்படம் ஏன் உருவானது என்ற கதையை கமலே சமீபத்தில் கூறினார், இதில் ‘நான் பாலிவுட்டில் நடித்த போது பலரும் நீங்கள் அமிதாப் பச்சன் போல் உயரமாக இருந்திருக்க வேண்டும்.
அல்லது இன்னும் கொஞ்சம் உயரமாக இருந்திருந்தால் கூட பாலிவுட்டில் நீங்கள் தான் சூப்பர் ஸ்டார் என்று ஒரு சிலர் சொன்னார்கள். அது என்னை மிகவும் பாதித்தது.
அப்போது தான் எனக்கு ஒன்று தோன்றியது, திறமை இருக்க உயரம் ஒரு தடையா, அதன் காரணமாக இன்னும் உயரத்தை குறைத்து அபூர்வ சகோதரர்கள் படத்தில் நடித்தேன்’ என்று கமல் கூறினார்.