December 06, 2016
அம்மா வளர்த்த ஈமுக் கோழி! ஜெ. பற்றி சுவாரஸ்யமான தகவல்கள்!
December 06, 2016 கோமளவள்ளி என்ற பெயரை அவரே மறந்திருப்பார். பிறந்ததும் ஜெ.வுக்கு சூட்டிய பெயர் அது. ஆனால் சில காலங்களுக்கு பின் ஜெயலலிதா ஆனார். ஜெயா, ஜெய், லில்லி எனப் பல பெயர்களில் பள்ளித்தோழிகளால் அழைக்கப்பட்டவர். ஆனால், அவரது அம்மாவுக்கு “அம்மு”. அதிமுகவினருக்கு மட்டுமல்ல, எதிர்க்கட்சி தலைவர்களுக்குக் கூட “அம்மா”. சர்ச் பார்க் பள்ளி மாணவி என்றுதான் பலருக்கும் தெரியும். ஆனால்,மாம்பலம் ஹோலி ஏஞ்சல்ஸ் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரை படித்துவிட்டுத்தான் மெட்ரிக் வரை சர்ச் பார்க்கில் படித்தார். “இன்னொரு வாய்ப்பு கிடைத்தால் சர்ச் பார்க்கில் படிக்க வேண்டும்” என்பதை தனது ஆசையாகச் சொல்லியிருந்தார். போயஸ் கார்டன், சிறுதாவூர், ஹைதராபாத் திராட்சைத் தோட்டம், ஊட்டி கொடநாடு எஸ்டேட் ஆகிய நான்கும் ஜெ. மாறி மாறி தங்கும் இடங்கள். சமீபகாலங்களாக ஹைதராபாத் செல்வதை நிறுத்தியிருந்தார். திடீர் ஓய்வுக்கு சிறுதாவூர். மாதக்கணக்கில் ஓய்வென்றால் கோத்தகிரியில் உள்ள கோடநாடுதான் அவரது விருப்பம். சினிமா காலத்தில் இருந்தே...