June 20, 2017
'அரசியலுக்கு வருகிறார் ரஜினி: திட்டங்கள், கொள்கைகள் தயாரிப்பில் தீவிரம்'
June 20, 2017<
இந்த முறை ரஜினி அரசியலுக்கு வருவதை கடவுள் தீர்மானித்துவிட்டார். போர் வரும் வரை எல்லாம் காத்திருக்க வேண்டாம் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள். மே 15- 19-ம் தேதி வரை ரஜினி ரசிகர்களோடு நடத்திய சந்திப்பும், அதில் ரஜினி பேசிய பேச்சும் தமிழக அரசியல்வாதிகள் மத்தியில் இன்றளவும் பேசு பொருளாக இருந்துவருகிறது. "ஜனநாயகம் கெட்டுப் போய் இருக்கிறது. அரசியல் பற்றி, ஜனநாயகம் பற்றி மக்களின் மன ஓட்டமே மாறி இருக்கிறது. முதலில் ஜனநாயகத்தை மாற்ற வேண்டும். மக்களின் மனநிலையை மாற்ற வேண்டும். அப்போதுதான் நாடு உருப்படும். அது அனைவருமே சேர்ந்து செய்ய வேண்டியது. எனக்கும் கடமைகள், தொழில் மற்றும் வேலை இருக்கிறது. உங்களுக்கும் கடமைகள், தொழில் மற்றும் வேலை இருக்கிறது. உங்களுடைய கடமைகளைச் செய்துகொண்டே இருங்கள். போர் வரும் போது பார்த்துக் கொள்வோம். ஆண்டவன் இருக்கிறான்" என்று ரசிகர்களுடனான இறுதிநாள் சந்திப்பில் ரஜினி பேசியது ஹைலைட்டாக இருந்தது. ரசிகர்களுடனான சந்திப்பு...