December 07, 2016
மறைந்த பின்பும் அடங்காத ஆத்திரம்! கமலின் கல்நெஞ்ச இரங்கல் பின்னணி இதுதான்!
December 07, 2016எத்தனை ஆத்திரம் வந்தாலும், ஆள் செத்த பின்பு கொள்வது சரியல்ல! இதுதான் நம் முன்னோர் பண்பாடு. ஆனால் முன்னோர் பெருமை முற்றாக அறிந்த கமல், அப்...

ஆனால் முன்னோர் பெருமை முற்றாக அறிந்த கமல், அப்படி நடந்து கொள்ளவில்லையே என்பதுதான் அதிமுக வினரின் வருத்தமும் கவலையும்! தற்போது அமெரிக்காவிலிருக்கும் கமல், ஜெயலலிதாவின் மறைவுக்கு வந்திருக்க முடியாதுதான். ஆனால் ட்விட்டரில் தன் இரங்கலை முறையாக தெரிவித்திருக்கலாமே என்பதுதான் பலரது வேதனை. 5 ந் தேதி நள்ளிரவில் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட ஜெயலலிதாவுக்கு, மறுநாள் தனது இரங்கலை ட்விட்டர் மூலம் தெரிவித்தார் கமல். அதில், சார்ந்தோர் அனைவர்க்கும் ஆழ்ந்த அனுதாபங்கள் என்று ஒரு வரியோடு முடித்துக் கொண்டார்.
இப்படி பட்டும் படாமலும், படிப்பவர் உள்ளங்களை தொட்டும் தொடாமலும் ஒரு ட்விட் தேவையா? என்று முகம் சுளித்தது தமிழகம்.
விஸ்வரூபம் படம் வெளியாகிற நேரத்தில் அதற்கு தடை விதித்தது தமிழக அரசு. அப்போது நான் இந்தியாவை விட்டே வெளியேறுவேன் என்றார் கமல். எப்படியோ? அந்தப்படம் வந்தது. வென்றது. அந்த வெற்றிக்கு காரணம் படத்திலிருந்த சுவாரஸ்யம் அல்ல. ஜெ அரசு விதித்த தடைதான். ஒருவேளை அந்த பரபரப்பு இல்லையென்றால், அந்தப்படம் கமலின் தோல்விப்பட வரிசையில் ஒன்றாகியிருக்கும் என்பதை கமலே கூட ஒப்புக் கொள்வார். நியாயமாக இந்த தடைக்காக அவர் தனியாக ஜெ.வை சந்தித்து ஒரு பொக்கே அல்லவா கொடுத்திருக்க வேண்டும்?
அதற்கப்புறம், பாபநாசம் படத்திற்கு வரிவிலக்கு மறுக்கப்பட்டது. முதலில் அதிர்ச்சியாக இருந்தாலும், அரசின் இந்த முடிவை வரவேற்பதாக அறிவித்தார் கமல். என்னடா இப்படி இவரே வரவேற்கிறாரே? என்று ஊர் உலகமே சரக்கடிக்கிற நிலைக்கு ஆளானது. சினிமா நூற்றாண்டு விழா மேடையில் ரஜினி, இளையராஜா, போன்ற ஜாம்பவான்களை நிற்க வைத்துவிட்டு, நேற்று வந்தவர்களுக்கு நாற்காலி வழங்கப்பட்டது. ரஜினி இளையராஜாவோடு வேறு வழியின்றி நின்ற ஜாம்பவான்களில் ஒருவர் கமல். அந்தக் கோபத்தை கூட இப்போது வலிய வலிய தன் நினைவுக்கு கொண்டு வந்தாரோ என்னவோ?
நமது டவுட்டெல்லாம் இதுதான். உங்களோடு அங்கு நின்ற ரஜினியும், இளையராஜாவுமே நேரில் வந்து அஞ்சலி செலுத்தி, பெருங்கருணை கொண்ட போது, உங்களுக்கு மட்டும் ஏன் கமல் இப்படி? ட்விட்டரில் 140 வார்த்தைகளுக்கு மேல் கூடாது என்கிற சட்டத்தை அந்த நிறுவனமே தளர்த்திவிட்டதே சார்?