August 01, 2018
நல்ல குடும்பத்தின் வெளிப்பாடுதான் நல்ல சமூகம்! ஆண் தேவதை அட்வைஸ்!
August 01, 2018<
ஒரு படம் ‘மாஸ்டர் பீஸ்’, ‘ஆர்ட் ஃபிலிம்’ அல்லது ‘பிலிம் ஃபெஸ்டிவல் திரைப்படம்’ என்று மட்டுமே சொல்லப்பட்ட காலங்கள் வழக்கொழிந்து போய்விட்டன. சமகால பார்வையாளர்கள் “ஆண் தேவதை’ போன்ற யதார்த்தமான திரைப்படங்களை திறந்த மனதுடன் வரவேற்கிறார்கள். இந்த படத்தின் ப்ரோமோ வீடியோக்களே பெரும் பாராட்டுக்களை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இப்போது “ஆண் தேவதை” தமிழ்நாடு திரையரங்க உரிமையை புகழ்பெற்ற நிறுவனம் ஒன்று கைப்பற்றியிருப்பது கூடுதல் மகிழ்ச்சி ஏற்படுத்தியிருக்கிறது.“வழக்கமான கமெர்சியல் விஷயங்கள் இன்றி நல்ல தரமான திரைப்படங்களை தயாரிப்பது அல்லது வெளியிடுவது என்பது வெறும் சுய திருப்திக்காக செய்த காலங்கள் உண்டு. ஆனால் தற்போது காலம் மாறி விட்டது. ரசிகர்கள் இந்த மாதிரி படங்களுக்கு வரவேற்பு கொடுப்பதோடு, பாக்ஸ் ஆபிஸிலும் வெற்றி பெறச் செய்கிறார்கள்” என்கிறார் “ஆண் தேவதை” தமிழ்நாடு உரிமையை வாங்கியுள்ள New RSM ஃபிலிம் புரொடக்ஷன்ஸ் எம். மாரிமுத்து. அவர் மேலும் கூறும்போது, “ஒரு இயக்குனராக, தயாரிப்பாளராக,...