November 18, 2017
சினிமாவுக்கு வந்த எருமசாணி
November 18, 2017 இளைஞர் பட்டாளத்தை கவர்வது என்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. அதற்கு காரணம் அவர்களின் எதிர்பார்ப்புகளும், ரசனையும் வேறொரு பரிமாணத்தில் இருக்கின்றது என்பது தான். ஆனால் தங்களின் புதுமையான நகைச்சுவை காணொளிகள் மூலம், இளம் ரசிகர்களின் பாராட்டுகளை மிக எளிதாக பெற்று வருகின்றனர் – யு டியூப் சமூக வலைத்தளத்தில் கலக்கி கொண்டு இருக்கும் “ எரும சாணி குழுவினர் “இவர்கள் தற்போது கிளாப்போர்டு தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் வி சத்யமூர்த்தி தயாரிக்கும் “ ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது “ திரைப்படத்தில் பணியாற்ற இருக்கின்றனர். ‘எரும சாணி’ காணொளிகளின் இயக்குநர் ரமேஷ் வெங்கட், இந்த ‘ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது’ திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குநராக அடியெடுத்து வைப்பது குறிப்பிடத்தக்கது.வி. சத்யமூர்த்தி முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது’ திரைப்படத்தில் ‘எரும சாணி’ புகழ் விஜய் – ஹரிஜா, ஆர் ஜே விக்கி,...