April 28, 2018
ஏண்டா… இன்னும் எவ்வளவு நாளைக்குதான் கோச்சடையான வச்சு கொல்லுவீங்க
April 28, 2018<
ரஜினி போட்ட கெட்டப்பிலேயே, அவரை ஷட்டப் பண்ணிய கெட்டப் ஒன்று உண்டென்றால் அந்த ‘கோச்சடையான்’ கெட்டப்புதான்! ‘அவுத்துப் போட்ட தலைமுடியில் அரை முடி, கால் முடியெல்லாம் கூட பன மரம் சைசுக்கு சிலுத்துக்கிட்டு நிக்குதே…?’ என்று கவலை மீறிக் கிடக்கிறார் ரஜினி இப்பவும்.ரஜினி படங்கள் வரும்போதெல்லாம் எனக்கு கோச்சடையான் பாக்கி என்று யாராவது ஒருவர் கோர்ட் படியேறுவது வாடிக்கையாகி வருகிறது. இன்றளவும், வாங்குன கடனை கொடுத்துருங்கம்மா என்று நீதிமன்றம் லதா ரஜினிக்கு உத்தரவிட்டு வருவதும் வாடிக்கையாகி விட்டது.இப்போது காலா முறை. ஜுன் 15 வாக்கில் காலாவை திரைக்குக் கொண்டுவர முயற்சி நடக்கிறதாம். ஆனால், போகிற போக்கை பார்த்தால் அதற்கு வாய்ப்பு இல்லை என்கிற நிலைமைதான் இப்போது. ஆந்திராவில் கோச்சடையான் பஞ்சாயத்து இன்னும் நிலுவையில் இருப்பதால், ‘அந்த நஷ்டத்தை செட்டில் பண்ணிட்டு காலாவை வெளியிடுங்க’ என்று கடுமையாக கூறிவிட்டது அந்த ஊர் விநியோகஸ்தர் சங்கம்.இந்தப்பக்கம் கர்நாடகா. காவேரி விவகாரத்தில் ரஜினி...