December 06, 2017
சர்ச்சையை கிளப்பிய பட போஸ்டர் !
December 06, 2017 ஒரு படத்தின் வெற்றிக்கு சர்ச்சை மிக அவசியம் என கருதப்படும் இந்த காலத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தீவிர ரசிகன் பற்றிய ’12-12-1950′ என்ற தலைப்பை கொண்ட படத்தின் சமீபத்தில் வெளியிடப்பட்ட போஸ்டர் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இப்படம் வரும் டிசம்பர் 8 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது.ஜெயில் ‘பரோல்’ என்பதை மையமாக வைத்து பின்னப்பட்டுள்ள இப்படத்தின் சமீபத்தைய போஸ்டரில் இப்படத்தின் ரிலீஸ் தேதி பற்றியும் பரோல் பற்றியும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதில் ‘பரோல்’ என்ற வார்த்தையை விரும்பாத சிலர் இப்பட தயாரிப்பாளர்களை தொடர்பு கொண்டு தங்கள் கோபத்தை வெளிப்படுத்தி மிரட்டியுள்ளனர்.இதே போல், சில தினங்களுக்கு முன்பு இப்படத்தின் இன்னொரு போஸ்டரில், தமிழ் திரையுலம் மூலம் தமிழ் நாட்டின் முதலமைச்சரான நபர்களின் பெயரை குறிப்பிட்டு, அந்த வரிசையில் இப்பட தலைப்பான ’12-12-1950′ யையும் குறிப்பிடப்பட்டது. இந்த போஸ்டரும் பெரும் வரவேற்பை பெற்று பேசப்பட்டது. ஒரு படம் வெற்றி பெற தேவைப்படும் சர்ச்சைகள் ’12-12-1950′...