June 30, 2019
3000 கோடி போச்சா: மழையை தாங்காத ஒற்றுமைக்கான சிலை
June 30, 2019<
இந்தியாவின் இரும்பு மனிதர்' என்று அழைக்கப்பட்டவர் சர்தார் வல்லபாய் பட்டேல். குஜராத் மாநிலத்தில் பிறந்த இவர், இந்தியாவின் முதல் துணைப் பிரதமர் மற்றும் முதல் உள்துறை அமைச்சர் என்னும் பெருமைக்குச் சொந்தக்காரர். சர்தார் படேலுக்கு குஜராத் மாநிலத்தின் நர்மதா ஆற்றின் நடுப்பகுதியில் சர்தார் சரோவர் டேமிலிருந்து 3.2 கி.மீ தொலைவில் ‘சாதுபெட்' என்ற இடத்தில் 182 மீட்டரில் பிரமாண்ட சிலை அமைக்க கடந்த 2013-ம் ஆண்டு அப்போதைய குஜராத் முதல்வர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். உலகிலேயே உயரமான சிலையாக இது அமையும் என்றும் அப்போது தெரிவிக்கப்பட்டது. இதற்காக ரூ.3,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பிரபல கட்டுமான நிறுவனமான எல் அண்ட் டி அதற்கான பணிகளைச் செய்தது. இந்நிலையில் ஒற்றுமைக்கான சிலையில் பார்வையாளர்களுக்கான இடத்தில் உள்ள கூரையில் மழை பெய்யவும் ஒழுகத் தொடங்கியுள்ளது. இதுகுறித்த வீடியோ காட்சியும் ஏஎன் ஐ நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. நர்மதா மாவட்ட ஆட்சியர்...