­
10/16/16 - !...Payanam...!

* மிகவும் உயர்ந்ததும், சிரமத்தைக் கொடுக்கக் கூடியதுமானதும், மேடு பள்ளங்களுள்ளதும், கடினமாக உள்ளதுமான இடங்களிலும் இருக்கைகளிலும் உட...

<
* மிகவும் உயர்ந்ததும், சிரமத்தைக் கொடுக்கக் கூடியதுமானதும், மேடு பள்ளங்களுள்ளதும், கடினமாக உள்ளதுமான இடங்களிலும் இருக்கைகளிலும் உட்காரக் கூடாது. * மலம், சிறுநீர் உந்துதல்களை அடக்கக் கூடாது. கடுமையான அல்லது தனக்கு உகந்ததல்லாத உடற்பயிற்சி செய்யக் கூடாது. * மல்லாந்து படுத்துக் கொள்ளக் கூடாது. அதனால் தொப்புள் கொடி குழந்தையின் கழுத்தில் சுற்றிக் கொள்ளும். * அதிக காரம், சூடான வீர்யமுள்ள உணவுகளைப் பயன்படுத்தக் கூடாது. வயிற்றுக்குப் போதாமல் சாப்பிடக் கூடாது. இவற்றால் சில சமயம் குழந்தை இறக்க நேரிடலாம். அல்லது அகாலத்தில் நழுவலாம். * உடம்பை மூடிக் கொள்ளாமல் படுத்துக் கொண்டாலும், இரவில் சஞ்சாரம் செய்தாலும் சிசுவுக்குச் சித்த பிரமை உண்டாகும். * சண்டை, கலகங்களில் ஈடுபட்டால் சிசுவுக்குக் காக்கை வலிப்பு உண்டாகும். * எப்போதும் வருத்தப்பட்டுக் கொண்டிருந்தால் பயப்படும் சுபாவமுள்ள குழந்தை பிறக்கும். இவையனைத்தும் சுகப் பிரசவத்தைக் கெடுக்கும். ...

Read More

சினிமா படத்தில் என்றைக்குமே காதலுக்கு இடம் உண்டு. காதலை மையக் கருவாக கொண்ட படங்கள் தான் அப்போது இருந்து இப்போது வரை வந்துகொண்டிருக்கிறது....

சினிமா படத்தில் என்றைக்குமே காதலுக்கு இடம் உண்டு. காதலை மையக் கருவாக கொண்ட படங்கள் தான் அப்போது இருந்து இப்போது வரை வந்துகொண்டிருக்கிறது. படத்தில் நடிப்புக்காக வந்த காதல் நிஜவாழ்க்கையிலும் நிறைய பிரபலங்களுக்கு தொடந்ததுண்டு. இதுமட்டுமல்ல அவர்கள் காதல் உறவால் கரம் பிடித்து கணவன், மனைவியாக வாழ்கிறார்கள். இதை இன்று நாம் பார்க்க போவது அவ்வாறு காதல் செய்து திருமணம் கண்ட ரஜினிகாந்த் - லதா ஜோடியை பற்றி தான். சாதாரண பேருந்து நடத்துனராக இருந்த ரஜினிகாந்த் நிறைய முயற்சிகளுக்கு பிறகு பல படிகள் உயர்ந்து, இன்று அனைவரும் சூப்பர்ஸ்டார் என கொண்டாடும் முக்கிய நபர். அவர் தன் மனைவி லதாவை கரம் பிடித்த நிகழ்வே ஒரு சுவாரஸ்யம். லதா தன் கல்லூரி படிப்பின்போது ஒரு மாதிரி நேர்காணலுக்காக, தனது அக்காள் கணவரும், ரஜினியின் நண்பருமான ஒய்.ஜி.மகேந்திரன் மூலம் சூப்பர்ஸ்டாரை படப்பிடிப்பு தளத்தில் நேரில் சந்தித்தார். லதாவின் கேள்விகளுக்கெல்லாம்...

Read More

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உடல் நிலை சரியில்லாமல் கடந்த இருபது நாட்களுக்கு முன்னர் சென்னை அப்போலோ அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரின் உடல் ந...

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உடல் நிலை சரியில்லாமல் கடந்த இருபது நாட்களுக்கு முன்னர் சென்னை அப்போலோ அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரின் உடல் நிலை குறித்து முக்கிய அரசியல் தலைவர்களும் தொண்டர்களும் மருத்துவமனைக்கு சென்று விசாரித்து வரும் நிலையில் தமிழ் சினிமா சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இன்று திடீரென்று நேரில் சந்தித்து அவரின் ஆரோக்கியம் குறித்து கேட்டறிந்தார். உடன் அவரது மகள் ஐஸ்வர்யா தனுஷும் சென்றுள்ளார். ரசிகர்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் என பலருக்கும் ரஜினியின் வருகை மகிழ்ச்சியை தந்துள்ளது. ...

Read More

பகல் தான்... ஆனாலும், அந்த சுரங்கத்தினுள் ஒரு அடர்த்தியான இருள் சூழ்ந்திருக்கிறது. குறுகலான வழி. மெல்லிய பேட்டரி விளக்கு வெளிச்சத்தில் நடந்...

பகல் தான்... ஆனாலும், அந்த சுரங்கத்தினுள் ஒரு அடர்த்தியான இருள் சூழ்ந்திருக்கிறது. குறுகலான வழி. மெல்லிய பேட்டரி விளக்கு வெளிச்சத்தில் நடந்து, சில படிகளைக் கடந்தால் அந்த அகண்ட இடம் வருகிறது. இப்பொழுது விளக்குகளின் உதவியால் வெளிச்சம் கொஞ்சம் கூடுதலாகக் கிடைக்கிறது. துருப்பிடித்து, இரும்பு தோல்கள் உரிந்த நிலையில் நிறைய கார்கள். சில நீளமாகவும், சிலவை சிறியதாகவும் இருக்கின்றன. தார் சாலைகளையும், மண் மேடுகளையும், கடற்கரைகளையும் பார்த்து ஆவேசமாய், சமயங்களில் அமைதியாய் ஓடிக் களைத்த ஸ்கூட்டர்கள் மற்றும் பைக்குள். தோலுரிந்து வரலாற்றால் தூக்கி எறியப்பட்ட ஒரு நீல ஸ்கூட்டரின் பக்கவாட்டில்  சிகப்பு வண்ண சுருள் முடி கொண்ட ஒரு பெண்ணின் ஸ்டிக்கர். அவரின் கனவு நாயகியாக இருந்திருக்கக் கூடும். இன்னும்... அழுக்கடைந்த அடுப்புகள், கருப்படைந்த பானைகள், உருக்குலைந்த உணவுக் கோப்பைகள், நசுங்கி, நைந்து போயிருக்கும் குழந்தைகளின் குதூகல நடை வண்டிகள் என திரும்பும் திசையெல்லாம் வரலாறு துப்பி எறிந்த...

Read More

முன் ஒரு காலத்தில்,’பணக்காரர்களின் வியாதி’ என்று அழைக்கப்பட்டது சர்க்கரை நோய். ஆனால் இன்றோ, சர்க்கரை நோயாளிகள் இல்லாத வீடே இல்லை என்ற அளவ...

<
முன் ஒரு காலத்தில்,’பணக்காரர்களின் வியாதி’ என்று அழைக்கப்பட்டது சர்க்கரை நோய். ஆனால் இன்றோ, சர்க்கரை நோயாளிகள் இல்லாத வீடே இல்லை என்ற அளவுக்கு சர்க்கரை நோயின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதை ‘வாழ்க்கைமுறை நோய்’ என்று கூறுவர். சர்க்கரை நோய் எல்லோருக்கும் வரும் என்று இல்லை. அப்படியே வந்தாலும் தடுத்துவிடலாம். நாம் சாப்பிடும் உணவு, வாழ்க்கைமுறை, உடற்பயிற்சி, சுற்றுச்சூழல் போன்ற காரணிகள், சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பை முடிவு செய்கின்றன. ஆரோக்கியமான வாழ்க்கைமுறையை மேற்கொண்டால் சர்க்கரை நோயைத் தடுக்க முடியும். தற்போது கிட்டத்தட்ட ஆறரைக் கோடி இந்தியர்களுக்கு சர்க்கரை நோய் உள்ளது. 7.7 கோடி இந்தியர்கள், சர்க்கரை நோய் வருவதற்கான எல்லைக்கோட்டில் உள்ளனர். 2030-ல் இது 8.7 கோடியாக அதிகரித்துவிடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இனியாவது நாம் ஆரோக்கிய வாழ்வை மேற்கொண்டால் சர்க்கரை நோய் வராமல் காத்துக்கொள்ளலாம். சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை பெருகிவிட்டதால், இதைச் செய்யுங்கள், அதைச் செய்யுங்கள் என்று ஒவ்வொருவரும்...

Read More

சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் சந்தித்த அம்மணியின் வாழ்க்கையைப் பற்றி கேள்விப்பட்டு அதைப் படமாக்கியிருக்கிறார் லட்சுமி ராமகிருஷ்ணன். அ...

சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் சந்தித்த அம்மணியின் வாழ்க்கையைப் பற்றி கேள்விப்பட்டு அதைப் படமாக்கியிருக்கிறார் லட்சுமி ராமகிருஷ்ணன். அம்மணி (சுப்பலட்சுமி) பாட்டி குப்பைகளைப் சேகரித்து அதை விற்று சாப்பிடும் கடின உழைப்பாளி. அவருக்கு என எந்த சொந்தமும் கிடையாது. அவர் சாலம்மா (லட்சுமி ராமகிருஷ்ணன்) வீட்டில் குடியிருக்கிறார். சாலம்மாவுக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள். மூத்த மகன் ஒரு குடிநோயாளி, இரண்டாவது மகன் ஆட்டோ ஓட்டுநர், மகள் காதலித்து திருமணம் செய்து கொண்டு வீட்டைவிட்டு வெளியேறி தன் மகனை லட்சுமியின் வீட்டிற்கு அனுப்பி வைத்திருக்கிறாள். லட்சுமி ஒரு அரசு மருத்துவமனையில் துப்புறவு பணியாளராக வேலை செய்கிறார். சீக்கிரமே ஓய்வு பெறவும் போகிறார். இரண்டு மகன்கள், பேரன் மூவரும் குறி வைத்திருப்பது லட்சுமியின் ஓய்வூதியப் பணத்துக்கு. அந்தப் பணப் பிரச்சனை, சொத்துப் பிரச்சனை, கடன் பிரச்சனை எனப் பல பிரச்சனைகள் லட்சுமியை சுழற்றியடிக்கிறது. இதை எப்படி லட்சுமி சமாளிக்கிறார் என்பது தான்...

Read More

சித்தர்கள் கண்ட சிறுநீர்ப் பரிசோதனை முறை  காலைச் சிறுநீரை ஒரு கண்ணாடிக் கிளாசில் எடுத்து அதில் இரண்டு சொட்டு நல்லெண்ணையை விட்டுவிட்ட...

சித்தர்கள் கண்ட சிறுநீர்ப் பரிசோதனை முறை  காலைச் சிறுநீரை ஒரு கண்ணாடிக் கிளாசில் எடுத்து அதில் இரண்டு சொட்டு நல்லெண்ணையை விட்டுவிட்டு உற்றுக்கவனியுங்கள். எண்ணெய்த்துளி பாம்புபோல வளைந்து காணப்பட்டால் உங்கள் உடலில் வாதம் மிகுந்துள்ளது. மோதிரம் போல வட்டமாக இருந்தால் உங்களுக்கு பித்த நோய், முத்துப்போல நின்றால் உங்களுக்கு கபநோய், எண்ணெய்த்துளி வேகமாக பரவினால் நோய் விரைவில் குணமாகும். எண்ணெய்த்துளி அப்படியே இருந்தால் நோய் குணமாக தாமதமாகும். எண்ணெய்த்துளி சிதறினாலோ அமிழ்ந்துவிட்டாலோ நோயை குணப்படுத்த இயலாது. ...

Read More

கோவிலுக்கு நேர்த்திக் கடன் செலுத்தப் போவது போல கும்பல் கும்பலாக கிளம்பி வருகிறார்கள் ரசிகர்கள். தங்கள் போற்றுதலுக்குரிய தலைவனை நேரில் பார்த...

<
கோவிலுக்கு நேர்த்திக் கடன் செலுத்தப் போவது போல கும்பல் கும்பலாக கிளம்பி வருகிறார்கள் ரசிகர்கள். தங்கள் போற்றுதலுக்குரிய தலைவனை நேரில் பார்த்து ஒரு போட்டோ எடுத்துவிட்டால், ‘போதும்டா சாமீய் நம் குலப் பெருமை’ என்பதுதான் அவர்களது லட்சியம்! ரஜினியில் ஆரம்பித்து, நேற்று வந்த யோகிபாபுவின் ஆபிஸ் வரைக்கும் நீக்கமற நிறைந்திருக்கும் இந்தக் கூட்டம், அலை போல ஆர்ப்பரித்து கடல் போல பொங்கும் போதுதான் அரசியல் ஆசை துளிர்விடுகிறது ஹீரோக்களுக்கு! அப்படியொரு ஹீரோவாக தனுஷையும் ஆக்கிவிடுவார்கள் போலிருக்கிறது. ஏன்? ஏனென்றால் அப்படியொரு கூட்டம் அவரது ஆபிஸ் முன். விஜய் டி.வி. சிவகார்த்திகேயனின் அலுவலகம், இன்னும் சில முக்கியமான ஆடிட்டர்களின் ஆபிஸ் போன்றவை அமைந்திருக்கும் மிக பரபரப்பான சாலை அது. அங்குதான் நேற்று இரவு கூடியது பெரும் கூட்டம். “தலைவா…. தெய்வமே… ஏழைகளின் குல விளக்கே…” என்றெல்லாம் கோஷமிட்டுக் கொண்டு அவர் ஆபிசை கிட்டதட்ட முற்றுகையிடாத குறையாக சூழ்ந்து கொண்டார்கள் அவரது...

Read More

“என்னடா… அந்த கேள்வியை பாண்டே கேட்காமல் விட்டுவிடுவாரோ?” என்று யோசித்த ஒரு கேள்வி. சரியான நேரத்தில் கேட்டேவிட்டார் அதை. தந்தி டி.வி யில் அர...

<
“என்னடா… அந்த கேள்வியை பாண்டே கேட்காமல் விட்டுவிடுவாரோ?” என்று யோசித்த ஒரு கேள்வி. சரியான நேரத்தில் கேட்டேவிட்டார் அதை. தந்தி டி.வி யில் அரசியல்வாதிகளின் விலா எலும்பு வலிக்கிற அளவுக்கு கேள்வி கேட்டு அவர்களை தெறிக்க விடும் ரங்கராஜ் பாண்டே, நேற்று சிவகார்த்திகேயனையும் பேட்டியெடுத்தார். குழந்தையின் தொட்டிலை இதமாக ஆட்டுகிற மாதிரியான தாலாட்டுதான் அந்த முழு பேட்டியுமே! பாண்டேவின் அடிக்கெல்லாம் சிவா தாங்க மாட்டார் என்பதை ஊர் உலகமே அறியும். அதை மனதில் கொண்டே சாதுவாக கேள்வி கேட்டு சமர்த்துப் பிள்ளையாக அனுப்பி வைத்தார் சிவகார்த்திகேயனை. அவர் ஏன் அழுதார் என்பதுதான் அந்த பேட்டியின் பிரதான கேள்வி. ஆனால் சாமர்த்தியமாக அதை கடந்தார் சிவா. ஆனால் கமல் ரசிகர்களால் தாக்கப்பட்ட விவகாரத்திற்கு அவர் சொன்ன பதில், சிவாவுக்குள்ளிருக்கும் ஒரு மனிதாபிமானியை அடையாளம் காட்டியது. “அந்த சம்பவம் நடந்த பிறகு நான் காவல் துறையில் புகார் கொடுத்திருக்கலாம். ஆனால் நான்...

Read More

சூப்பர் ஸ்டார் ரஜினியின் 2.0 படத்தின் வேலைகள் அனைத்தும் மும்முரமாக நடந்து வருகிறது. இப்படத்திற்கான படப்பிடிப்பு கூட அண்மையில் தான் முடிவடைந...

சூப்பர் ஸ்டார் ரஜினியின் 2.0 படத்தின் வேலைகள் அனைத்தும் மும்முரமாக நடந்து வருகிறது. இப்படத்திற்கான படப்பிடிப்பு கூட அண்மையில் தான் முடிவடைந்தது. இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வரும் நவம்பர் மாதம் 20ம் தேதி வெளியாக இருப்பதாக தயாரிப்பு குழு தெரிவித்திருந்தனர். நவம்பர் 20ம் தேதி மும்பையில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளதாம். மேலும் நிகழ்ச்சியில் கோலிவுட், பாலிவுட் பிரபலங்கள் கலந்து கொள்வார்கள் என்று கூறப்படுகிறது. ...

Read More

சிவகார்த்திகேயனின் நேற்றைய பேட்டி தான் ஹாட் டாபிக். பல சர்ச்சைகளுக்கு விளக்கம் கொடுப்பார் என்று எதிர்ப்பார்த்தால் மிகவும் சாமர்த்தியமாகவே அ...

சிவகார்த்திகேயனின் நேற்றைய பேட்டி தான் ஹாட் டாபிக். பல சர்ச்சைகளுக்கு விளக்கம் கொடுப்பார் என்று எதிர்ப்பார்த்தால் மிகவும் சாமர்த்தியமாகவே அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளித்தார். இதில் தொகுப்பாளர் ஒரு நடிகர் தான் உங்கள் வளர்ச்சி பிடிக்காமல் இதை செய்கிறாரா? என திரும்ப, திரும்ப கேட்டார். அதற்கு சிவகார்த்திகேயன் ‘என் வளர்ச்சியை தடுத்து என்ன பலன் யாருக்கு இருக்கின்றது, என்னை பலரும் ஏணியாக நின்று வளர்த்துவிட்டனர். அவர்களே என் வளர்ச்சியை ஏன் கெடுக்க வேண்டும்? அப்படி இருந்தாலும் அதை பற்றி நான் சொல்ல முடியாது’ என்பது போல் ஒரு பதில் கூறினார். பலரும் வழக்கம் போல் அந்த நடிகர் தானா? என கிசுகிசுக்க தொடங்கி விட்டனர். ...

Read More

Search This Blog

Blog Archive

About