November 05, 2016
November 05, 2016
விடுமுறைக்குப் பின் கர்ப்பப் பரிசோதனை அவசியம்! அதிர்ச்சியளிக்கும் பள்ளி நிபந்தனை
November 05, 2016விடுமுறைக்கு சென்று திரும்பினால் மருத்துவப் பரிசோதனை.... மாதவிலக்கு தள்ளிப் போனால் கர்ப்பப் பரிசோதனை.... - பள்ளிக் குழந்தைகள் அனுபவிக்...
விடுமுறைக்கு சென்று திரும்பினால் மருத்துவப் பரிசோதனை....
மாதவிலக்கு தள்ளிப் போனால் கர்ப்பப் பரிசோதனை....
- பள்ளிக் குழந்தைகள் அனுபவிக்கிற கொடுமைகள்!
ஒரு பெண் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதை உறுதி செய்ய சிறுநீர் பரிசோதனையோ, அவளது மாதவிலக்கு தேதிகளோ உதவாது. ஆனாலும் இந்த இரண்டும் பள்ளிக்குழந்தைகளுக்குக் கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்துக் கொண்டிருக்கிற நிலையில், இப்படியொரு வழக்கம் பல வருடங்களாகத் தொடர்ந்து கொண்டிருக்கிற செய்தி, அதிர்ச்சியைக் கிளப்பியிருக்கிறது.
மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள பழங்குடியின விடுதிப் பள்ளிகளை 'ஆஷ்ரம்ஷாலா' என அழைக்கிறார்கள். ஆஷ்ரம்ஷாலாக்களில் தொடர்ச்சியாக மர்ம மரணங்கள்...அவற்றின் பின்னணியில் பாலியல் வன்கொடுமைதான் காரணமாக இருக்கும் என்கிற யூகத்தைத் தொடர்ந்து, 2 வாரங்களுக்கு முன்பு, மகாராஷ்டிரா ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் அறிக்கை ஒன்றை அளித்திருக்கிறது டாக்டர் சலுங்கே கமிட்டி. ஆஷ்ரம்ஷாலாக்களில் இதுவரை நடந்துள்ள 1077 மரணங்களில், 31 தற்கொலைகள். 67 சதவிகித மரணங்களுக்கு காரணங்கள் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனாலும் பள்ளி மாணவிகளிடம் நடத்தப்படுகிற பாலியல் அத்துமீறல்களே அவர்களது அகால மரணங்களுக்கான முக்கிய காரணங்களாக இருக்கலாம் என்கிற சந்தேகமும் எழுப்பப்பட்டிருக்கிறது.
இதையடுத்து 2 நாட்களாக இருந்தாலும் விடுதியை விட்டு வீட்டுக்குச் சென்று திரும்புகிற பெண் குழந்தைகள், திரும்ப வரும்போது கர்ப்பமில்லை என்பதை உறுதி செய்கிற மருத்துவப் பரிசோதனை அறிக்கையுடன் வர வேண்டுமாம்.
மகாராஷ்டிராவில் உள்ள ஆஷ்ரம்ஷாலா பள்ளிகள் அனைத்திலும் இதுவே நடைமுறையாம். அது மட்டுமல்ல, விடுதியில் தங்கியிருக்கிற பெண்களில் யாருக்காவது 2, 3 நாட்கள் மாதவிலக்கு தள்ளிப் போனால், அருகில் இருக்கும் ஆரம்ப சுகாதார மையத்தை அணுகி கர்ப்பத்தை உறுதி செய்கிற பரிசோதனையையும் மேற்கொள்ள வேண்டுமாம்.
கர்ப்பப் பரிசோதனை
இவை எல்லாம் பெண்களின் உரிமைகளுக்கு எதிரான செயல்கள் என்பது தெரிந்தாலும் பத்து வருடங்களுக்கும் மேலாக பள்ளிகளில் தொடர்ந்து கொண்டிருக்கிற நடைமுறை என்பதையும் ஒப்புக் கொள்கிறார்கள் பள்ளி நிர்வாகத்தினர். பள்ளிகளுக்கு ஆய்வுத் துறையினர் வரும்போது இந்த மருத்துவ ஆதாரங்கள் எதுவும் அவர்களிடம் காட்டப்படுவதில்லை என்கிறது டாக்டர் சலுங்கே கமிட்டியின் அறிக்கை.
ஒரு பெண் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதைக் கண்டுபிடிக்க சிறுநீர் பரிசோதனையோ, மாதவிலக்கு கேலண்டரோ ஆதாரங்களாக இருக்க முடியாது. தவிர சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு கவுன்சலிங் கொடுக்காமலும், பெற்றோரின் சம்மதம் இல்லாமலும் இது போன்ற பரிசோதனைகளை செய்யக்கூடாது என்பதையும் அந்த அறிக்கை வலியுறுத்துகிறது.
பள்ளி வளாகங்களில் குழந்தைகளின் பாதுகாப்பு கண்காணிக்கப்படவும் பலப்படுத்தப்படவும் வேண்டியதன் அவசியத்தையும் அறிக்கை முன்வைத்திருக்கிறது. பள்ளி வளாகங்களில் பெண் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்கொடுமைகளை உடனடியாக தடுத்து நிறுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என உத்தரவிட்டிருக்கிறார் கவர்னர். தவிர, மேற்கூறிய மருத்துவப் பரிசோதனைகள் தொடர்பான சர்ச்சைக்கும் 3 வாரங்களில் பதில் அளிக்கவும் கெடு விதித்திருக்கிறார்.
November 05, 2016
நவதானிய அறக்கட்டளையின் தலைவரும் சுற்றுச்சூழல் ஆர்வலருமான வந்தனா சிவா
November 05, 2016சுற்றுச்சூழல் பாதுகாப்பாளர், சமூக நீதிக்காக போராடுபவர், நூல் ஆசிரியர், விஞ்ஞானி என பல்வேறு துறைகளிலும் பெயர் எடுத்தவர் வந்தனா சிவா.நமது மூல...

பறிபோன காப்புரி மையை மீட்பதற்கும் போராடி வருபவர். ரசாயன கலப்பில்லாமல் பயிர் வளர்ப்பு முறைக்கு ஆதரவாக பிரசாரம் செய்பவர். அரிய பயிர்களின் விதைகளை காப்பதற்காக, “நவதான்யா’ என்ற பெயரில் அறக்கட்டளை நடத்தி வருகிறார். பனி சிகரங்கள் உருகி கரைவது குறித்தும், சில தாவரங்களும், உயிரினங்களும் அழிந்து போவது குறித்தும் இவைகளை காப்பது குறித்து சர்வதேச அளவில் பிரசாரம் செய்து வருகிறார்.இது குறித்து நூற்றுக் கணக்கான கட்டுரைகளை அவர் எழுதியுள்ளார். தண்ணீர், தனியார் மையம், சுற்றுச் சூழல் என்ற தலைப்புகளில் ஏராளமான புத்தகங்கள் எழுதியுள்ளார்.
நதிகளில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீர் பாட்டிலில் அடைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதை கண்டு மனம் வெதும்பி இவர் எழுதிய, “வாட்டர் வார்’ என்ற நூல் பிரபலமானது.டேராடூனில் சுரங்கங்கள் குறித்து அறிக்கை அளிக்கும்படி வந்தனாவை மத்திய அரசு, 1981ம் ஆண்டு கேட்டது. இவர் அளித்த அறிக்கையின் பேரில் டூன் பள்ளத்தாக்கில் 1983ம் ஆண்டு சுரங்கங்களுக்கு சுப்ரீம் கோர்ட் தடை விதித்தது. காஷ்மீரின் லடாக் பகுதியில் வெப்பம் அதிகரித்ததால் பனி சுரங்கங்கள் உருகுவதையும் இவர் வெளி உலகுக்கு தெரிய செய்தார்.கடந்த 1981ம் ஆண்டிலிருந்து பொது வாழ்வில் ஈடுபட்டு வரும் வந்தனாவின் சேவையை பாராட்டி உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் பல விருதுகள் அளிக்கப்பட்டுள்ளன.நோபல் பரிசுக்கு இணையான, “ரைட் லைவ்லிஹூட்’ விருதையும் இவர் பெற்றுள்ளார்.
சர்வதேச மகளிர் தினத்தின் நூறாவது ஆண்டை முன்னிட்டு, பெண்களுக்கு முன்னுதாரணமாகவும், பெண்கள் முன்னேற்றத்துக்குத் தூண்டுதலாகவும் இருக்கும்100 பெண்கள் கொண்ட பட்டியலைத் தி கார்டியன் பத்திரிகை வெளியிட்டது. அதில் இடம்பெற்ற 5 இந்தியப் பெண்களில் ஒருவர் வந்தனா சிவா.உலகம் அறிந்த சூழலியல் பெண்ணியலாளரான முனைவர் வந்தனா சிவா, அத்துறையின் முன்னோடியாகக் கருதப்படுகிறார். இது சார்ந்து அவர் எழுதிய உயிரோடு உலாவ (Staying Alive: Women, Ecology and Survival) என்ற நூல் சர்வதேச அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியது. தமிழிலும் அது மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அவரது சூழலியல் பார்வை காந்தியத்தை அடிப்படையாகக் கொண்டது. ஆனால், வந்தனா சிவா முனைவர் பட்டம் பெற்றது எந்தத் துறையில் தெரியுமா? கனடாவில் உள்ள மேற்கு ஆண்டாரியோ பல்கலைக்கழகத்தில், குவான்டம் தியரியில். 1970களில் புகழ்பெற்ற சிப்கோ இயக்கத்தின் ஒரு பகுதியாகப் பல்லுயிர்ப் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட ஆரம்பித்தார். பல்லுயிர் பாதுகாப்பு என்பது தனித்து இயங்கும் ஒன்றல்ல, பண்பாட்டு பன்மயம், அறிவு பன்மயத்துடன் நெருக்கமான தொடர்புகொண்டது என்பதைப் புரிந்து கொண்டார்.
அந்த இயக்கத்தால் உத்வேகம் பெற்று, நவதான்யா என்ற முன்னோடி இயற்கை வேளாண் இயக்கத்தின் அமைப்பை உருவாக்கினார். இன்றைக்கு விதை சேகரிப்பாளர்கள், இயற்கை வேளாண் உற்பத்தியாளர்கள், பாரம்பரிய விதை காப்பாளர்கள் அடங்கிய இந்தியாவின் மிகப் பெரிய அமைப்பாக அது திகழ்கிறது.
1982ஆம் ஆண்டு முனைவர் பட்டம் பெற்ற இயற்பியல் துறையைத் துறந்துவிட்டு, தனது சொந்த ஊரான டெராடூனில் அறிவியல், தொழில்நுட்ப, சூழலியல் ஆராய்ச்சி அறக்கட்டளையை (Research Foundation for Science, Technology and Ecology (India) – RFSTE) தொடங்கினார். சுற்றுச்சூழல் போராட்டங்களுக்கு ஆதரவளிக்கும் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் ஆராய்ச்சியாளர்களின் முறைசாராத அமைப்பாக அந்த அறக்கட்டளை செயல்படுகிறது. மக்கள் அறிவையும் அது கணக்கில் எடுத்துக் கொள்கிறது.
அந்த அமைப்பு தீவிரமாகச் செயல்பட ஆரம்பித்த பின், பசுமைப் புரட்சியின் கடுமையான விமர்சகர் ஆனார் வந்தனா. அடிப்படையில் ஒரு அறிவியலாளர் என்பதால், இந்திய வேளாண்மை, சூழலியல் பிரச்சினைகள் சார்ந்த அவரது வாதங்கள் வலுவாக வெளிப்பட்டன. நாடே பசுமை புரட்சியைக் கொண்டாடிக்கொண்டிருந்த வேளையில், வேளாண்மையில் கட்டுமீறிப் பயன்படுத்தப்படும் உரங்கள், பூச்சிக்கொல்லிகள், வீரிய விதைகள், நவீன கருவிகளின் பயன்பாட்டைக் கேள்விக்கு உட்படுத்தினார். உணவு உற்பத்தியைக் கட்டுப்படுத்துவதன் மூலம் ஒட்டுமொத்தச் சமூகத்தையும் கட்டுப்படுத்தும் அதிகாரத்தைக் கட்டமைக்க, இந்த நவீனத் தொழில்நுட்பம் எப்படி முனைகிறது என்பதை வெளிப்படுத்தினார். அறிவியலால் இயற்கையை வெல்ல முடியாது, குறுகிய காலப் பலன்களை மட்டுமே தர முடியும். இறுதியில் நவீன அறிவியல் தோல்வியைத் தழுவும் என்பதே வந்தனாவின் முடிவு. இதை அவரது ‘பசுமைப் புரட்சியின் வன்முறை’ நூலில் அறியலாம். அமெரிக்காவில் ரேச்சல் கார்சன் முன்வைத்த கேள்விகளைப் போல, இந்திய வேளாண்மைத் துறைக்குள் புகுத்தப்பட்ட நவீனத்துவத்தின் அடிப்படைகளை அவரது வாதம் அசைத்தது.
மரபணுப் பொறியியலை அடிப்படையாகக் கொண்ட இரண்டாவது பசுமைப் புரட்சியையும் வந்தனா கடுமையாக எதிர்க்கிறார். மரபணுப் பொறியியல், அது உருவாக்கிய மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்கள் (genetically modified organisms) ஏற்படுத்தும் சூழலியல் பாதிப்புகள், நெறிமுறை மீறல்கள் தொடர்பாகக் கவனப்படுத்தி வருகிறார். பி.டி கத்தரிக்கு எதிரான போராட்டங்கள் அதற்கு உதாரணம். இதன் மூலம் பன்னாட்டு வேளாண் நிறுவனங்கள் செலுத்தும் ஏகபோகம், ஏழைகளின் வாழ்வாதாரத்தைப் பறிக்கும் என்கிறார்.
இதற்கு மாற்றாகப் பாரம்பரிய அறிவுச் செல்வங்களை (எ.கா. வேம்பு, மஞ்சள் போன்ற மருத்துவக் குணங்கள்) தமதாக்கிக் கொள்ள முனையும் வெளிநாட்டு காப்புரிமை தாக்குதலுக்கு எதிராகவும் அவர் போராடிவருகிறார்.நீர், நிலம், காடு, பல்லுயிரியம், வேளாண்மை போன்ற இயற்கை வளங்கள் மீதான மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கப் போராடியதற்காக மாற்று நோபல் பரிசு என்று அழைக்கப்படும் வாழ்வாதர உரிமை விருதை (Right to Livelihood) வந்தனா 1993ஆம் ஆண்டு பெற்றார்.
உத்தரகண்ட் மாநிலத்தின் டேராடூனில் பிறந்தவர் வந்தனா. இவருடைய தந்தை வனப் பாதுகாவலராக இருந்தவர். இவரது தாய், இயற்கையை ரசிப்பவர். இதனால் இவருக்கும் இயற்கை மீது மாறாத காதல் ஏற்பட்டு விட்டது. இவர் படித்தது அணு இயற்பியல். ஆனால், இவருக்கு பிடித்ததெல்லாம் பசுமை மீது தான். 57 வயதான வந்தனாவுக்கு சுற்றுச் சூழலையும், தண்ணீரையும் மாசுபடாமல் பாதுகாக்க வேண்டும் என்ற குறிக்கோள் உள்ளது.
வந்தனா சிவா பிறந்த நாள் – நவம்பர் 5
November 05, 2016
குஷ்பு, ராதிகா, சுஹாசினி, ஊர்வசி இணையும் 'ஓ! அந்த நாட்கள்'
November 05, 2016ஜேம்ஸ் வசந்தன் இயக்கத்தில் குஷ்பு, ராதிகா சரத்குமார், சுஹாசினி மணிரத்னம் மற்றும் ஊர்வசி நடித்து வரும் படத்துக்கு 'ஓ! அந்த நாட்கள்...
ஜேம்ஸ் வசந்தன் இயக்கத்தில் குஷ்பு, ராதிகா சரத்குமார், சுஹாசினி மணிரத்னம் மற்றும் ஊர்வசி நடித்து வரும் படத்துக்கு 'ஓ! அந்த நாட்கள்' என தலைப்பிட்டு இருக்கிறார்கள்.
1980 - 90களில் முன்னணி நடிகைகளாக வலம் வந்தவர்கள் குஷ்பு, ராதிகா, சுஹாசினி மற்றும் ஊர்வசி. நடிகைகள் என்பதைத் தாண்டி நெருங்கிய நண்பர்களாகவும் வலம் வந்தார்கள். தற்போது இவர்கள் நால்வரும் இணைந்து ஒரு படத்தில் நடித்து வருகிறார்கள்.
முழுக்க ஆஸ்திரேலியாவில் படமாக்கப்பட்டு வரும் இப்படத்தை ஜேம்ஸ் வசந்தன் இயக்கி வருகிறார். ஒரே கட்டமாக மொத்த படப்பிடிப்பையும் ஆஸ்திரேலியாவிலேயே முடித்து திரும்பியிருக்கிறது படக்குழு.
முழுக்க நட்பை பின்புலமாகக் கொண்டு இப்படத்தின் கதையை உருவாக்கி இருக்கிறார் ஜேம்ஸ் வசந்தன். தற்போது இப்படத்துக்கு 'ஓ! அந்த நாட்கள்' என தலைப்பிட்டு இருக்கிறார்கள். இப்படத்தின் இறுதிகட்ட பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கௌதமியை போல மற்றொரு நடிகை Living Together வாழ்க்கைக்கு டாடா
November 05, 2016தமிழ் சினிமாவில் அண்மை காலமாக ரொம்பவும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் விஷயம் கமல், கௌதமி விவாகரத்து விஷயம் தான். இந்நிலையில் கௌதமியை போல Liv...
தமிழ் சினிமாவில் அண்மை காலமாக ரொம்பவும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் விஷயம் கமல், கௌதமி விவாகரத்து விஷயம் தான்.
இந்நிலையில் கௌதமியை போல Living Together வாழ்க்கையில் இருந்த நடிகை சீதா விலக இருப்பதாக செய்திகள் வந்துள்ளது.
சீதா, நடிகர் பார்த்திபனை விவாகரத்து செய்த பின் டிவி நடிகர் சதீஷ் என்பவருடன் Living Together வாழ்க்கை வாழ்ந்து வந்தார்.
ஏனெனில் நடிகை சீதாவிடம் சதீஷ் பண மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இதனால் தான் சீதா இப்படி ஒரு முடிவை எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

ஜெயலலிதா டிஸ்சார்ஜ் ஆவதில் ஏன் தாமதம்?
November 05, 2016கடந்த நவம்பர் 2-ம் தேதியன்று ஜெயலலிதா ஸ்பெஷல் வார்டுக்கு மாறுகிறார் என்று அப்போலோ மருத்துவமனை வட்டாரத்தில் பேச்சு எழுந்தது. அவருக்காக சிறப்...
கடந்த நவம்பர் 2-ம் தேதியன்று ஜெயலலிதா ஸ்பெஷல் வார்டுக்கு மாறுகிறார் என்று அப்போலோ மருத்துவமனை வட்டாரத்தில் பேச்சு எழுந்தது. அவருக்காக சிறப்பு மருத்துவ வசதிகளுடன் கூடிய அறையும் ரெடியானது. எந்த நேரத்திலும் இந்த அறைக்கு ஜெயலலிதா வருவார் என்றே எதிர்பார்க்கப்பட்டது. அன்று காலை, மாலை, இரவு... என்று வெவ்வேறு நேரம் சொல்லப்பட்டது. ஆனால், வார்டு மாற்றப்படவில்லை. அப்போலோ மருத்துவமனை ஊழியர்கள் குழப்பம் அடைந்தனர். டாக்டர்கள் கிளியரன்ஸ் தரவில்லை என்று தெரிந்தது. இதற்கு பின்னணி காரணம்? ஜெயலலிதாவுக்கு கழுத்தில் (tracheostomy) மூச்சுக்குழாய் அப்படியே இருக்கிறது. அதேபோல், செயற்கை சுவாசத்துக்காக பொருத்தப்பட்ட 'வென்டிலேட்டர்' சில நிமிடங்கள் எடுத்து, இயற்கையாக ஜெயலலிதாவால் சுவாசிக்க முடிகிறதா? என்று செக் செய்தார்கள். ஆனால், அதுவும் சரிபட்டு வரவில்லை. இப்படியிருக்க.. ஜெயலலிதாவின் உடல்நிலை நவம்பர் 5-ம் தேதி நிலவரப்படி என்ன என்று விசாரித்தோம்! மருத்துவமனை வட்டாரத்தில் 'Hypoxia' என்கிற மெடிக்கல் வார்த்தையை உச்சரிக்கிறார்கள். அது என்ன?
அதுபற்றி மருத்துவர் ஒருவர் கூறும்போது, " ரத்தம், திசுக்களுக்கு ஆக்சிஜன் செல்லுவதில் ஏற்படும் குறைபாட்டை 'Hypoxia' என்று சொல்வோம். இதனால், மூச்சு விடுவதில் சிரமம் இருக்கும். படபடப்பு, இதயத்துடிப்பு அதிகமாக இருக்கும். இந்தக் குறைபாட்டை சரிசெய்ய வென்டிலேட்டர் முறையில் செயற்கை சுவாசம் தரவேண்டும். அப்போதுதான் நோயாளி நார்மலாக இருக்கமுடியும்'' என்கிறார்.
இந்தக் காரணத்தில்தான், ஜெயலலிதா வார்டு மாறுவது மேலும் சிலநாட்களுக்கு தள்ளிப்போகும் எனத் தெரிகிறது. இந்த நிலையில், நவம்பர் 4-ம் தேதியன்று அப்போலோவின் மருத்துவக் கையேடு புத்தக வெளியீட்டு விழாவில் சேர்மன் பிரதாப் ரெட்டி கலந்துகொண்டார். முதல்வர் உடல்நலம் பற்றி செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அவர் பதிலளிக்கும்போது, ''முதல்வர் தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதைத் தெளிவாக உணர்ந்திருக்கிறார். இனிமேல் எப்போது மருத்துவமனையிலிருந்து செல்வார் என்பதை அவர்தான் முடிவு செய்ய வேண்டும். மேலும் அவருக்கு, அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்தும் அவர் மிகவும் திருப்திகரமாக உணருகிறார். இதில் டாக்டர்கள் மட்டுமல்லாமல் நர்ஸ்கள் தொடங்கி பணியாட்கள் வரை அனைவரது பங்குமே குறிப்பிடத்தக்கது. முக்கியமாக இங்கிலாந்து மருத்துவர்கள், டெல்லி மருத்துவர்கள் என அனைவருமே தங்களது முழு உழைப்பையும் அவரது சிகிச்சைக்காக அர்ப்பணித்திருக்கிறார்கள். அவருக்கு அளித்து வரும் மொத்த சிகிச்சை முறையிலும் மிக முக்கியமான சிகிச்சை ஒன்று வெற்றிகரமாக முடிந்துள்ளது. சொல்லப்போனால் உலகின் தலைசிறந்த சிகிச்சைமுறைகள் அனைத்தும் அவருக்கு அளிக்கப்பட்டிருக்கின்றன. கூடவே கோடிக்கணக்கான மக்களின் பிரார்த்தனையும் சேர்ந்து பயனளித்திருக்கிறது. அவர் விரைவிலேயே உங்களை எல்லாம் வந்து சந்திப்பார்” என்றார்.
''முதல்வர் எப்போது மருத்துவமனையிலிருந்து வீடு திரும்புவார்' என்ற கேள்விக்கு பதிலளிக்கையில், “அவருடைய இயல்பு உங்கள் அனைவருக்குமே நன்றாகத் தெரியும். அவர் தன் உடல்நிலையை நல்ல முறையில் புரிந்துகொண்டுள்ளார். விரைவிலேயே ‘நான் எப்போது வீடு திரும்பலாம்?’ என்று அவர் என்னிடம் கேட்பார் என எதிர்பார்க்கிறேன். சாதாரண மருத்துவ வார்டுக்குச் செல்வதாகட்டும் அல்லது தன் வீட்டுக்குத் திரும்புவதாகட்டும்... இனி எந்த முடிவும் அவர் கையில்தான் இருக்கிறது. விரைவில் ஆட்சிப் பொறுப்பையும் ஏற்பார்” என்று சிரித்தபடியே பதிலளித்தார். பிரதாப் ரெட்டி ஏன் இப்படி திடீரென்று சொன்னார் என்பதுதான் மருத்துவர்கள் மத்தியில் மில்லியன் டாலர் கேள்வியாக இருக்கிறது!

Search This Blog
Blog Archive
- ► 2018 (454)
-
▼
2016
(306)
-
▼
November
(109)
-
▼
Nov 05
(6)
- பாலித்தீன் பேப்பர் பயன்படுத்தி வேகவைக்கப்படும் இட்...
- விடுமுறைக்குப் பின் கர்ப்பப் பரிசோதனை அவசியம்! அதி...
- நவதானிய அறக்கட்டளையின் தலைவரும் சுற்றுச்சூழல் ஆர்வ...
- குஷ்பு, ராதிகா, சுஹாசினி, ஊர்வசி இணையும் 'ஓ! அந்த ...
- கௌதமியை போல மற்றொரு நடிகை Living Together வாழ்க்கை...
- ஜெயலலிதா டிஸ்சார்ஜ் ஆவதில் ஏன் தாமதம்?
-
▼
Nov 05
(6)
-
▼
November
(109)