November 12, 2016
முடிவுக்கு வந்த சிவகார்த்திகேயன் பிரச்னை!
November 12, 2016<
சிவகார்த்திகேயன் மேடையில் அழுத பிரச்சனைக்கு இன்று தீர்வு கிடைத்துள்ளது. தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா,எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதன் இருவருக்கும் படம் நடித்து தர ஒப்புக்கொண்டதை அடுத்து தன்னை சிலர் மிரட்டுவதாக தெரிவித்த பிரச்சனைக்கு சுமூக முடிவு எடுக்கபட்டு உள்ளது. ரெமோ' வெற்றி விழாவில் தன்னை வேலை செய்ய விடாமல் சிலர் நெருக்கடி கொடுப்பதாகவும் நான் யாரை சொல்கிறேன் என அவர்களுக்குத் தெரியும் என மேடையில் பொங்கினார் சிவகார்த்திகேயன். இதைத் தொடர்ந்து, நடிகர் சங்கத்தில் சிவகார்த்திகேயன் கொடுத்த புகாரில் ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல் ராஜா தவிர எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதன், வேந்தர் மூவிஸ் மதன் ஆகிய இருவரும் முன்பணம் எதுவும் கொடுக்கவில்லை. எனவே அவர்களுக்கு படங்கள் எதுவும் நடித்து கொடுக்க முடியாது என்று இந்த பிரச்னையை சட்ட ரீதியாக சந்திக்கத் தயார் என்றும் குறிப்பிட்டு இருந்தார். ஞானவேல் ராஜாவுடனான ஒப்பந்தத்தை சிவாவே ஒப்புக்கொண்டு இருந்தார் ஆனால் சிவா தற்போது உள்ள...