July 20, 2019
ஆடை - திரைவிமர்சனம்
July 20, 2019<
அமலா பாலா ஆடையே இல்லாமல் நடித்துள்ளார் என பெரிய பரபரப்பை ஏற்படுத்திய படம் ஆடை. பல பிரச்சனைகள் தாண்டி இன்று மாலை திரைக்கு வந்திருக்கிறது. படம் எப்படி வாங்க பாப்போம்.கதை:மார்பகங்களை மறைக்க வரி கட்ட வேண்டும் என திருவாங்கூர் சமஸ்தானத்தில் இருந்த சட்டத்தை எதிர்த்து நங்கெலி என்ற பெண் நடத்திய போராட்டம் பற்றிய கார்ட்டூன் கதையுடன் ஆரம்பமாகிறது படம்.காமினி (அமலா பால்) ஒரு பிரபல டிவி சேனலில் வேலை செய்பவர். செய்ய முடியுமா என யாராவது வாய் தவறி கேட்டால் அவர்களிடம் பெட் கட்டி எதையும் செய்து காட்டுபவர். அவரது டீமில் ரம்யா மற்றும் சில ஆண்களும் உள்ளனர்.அப்பா இல்லாமல் உன்னை வளர்ந்த எனக்கு கெட்ட பெயர் வாங்கி கெடுத்துவிடாதே என தொடர்ந்து அவருக்கு அட்வைஸ் செய்யும் ஒரு அம்மா. ஆனாலும் அவர் கேட்பதாயில்லை.டிவி டிஆர்பிகாக பிரான்க் ஷோ என்கிற பெயரில் பொதுமக்களிடம் பல விஷயங்கள் செய்கின்றனர் காமினி...