June 15, 2017
தகரத்தில் காடுகளை உருவாக்கும் இயற்கைக் காதலன்!
June 15, 2017 "நீங்கள் காதலிப்பதைக் கொண்டாடுங்கள்... காரணம், வாழ்க்கை நம்மைவிட மிகப் பெரியது!" இதைத்தான் தன் வாழ்க்கைத் தத்துவமாக முன்வைக்கிறார் டான் ராலிங்க்ஸ். இங்கிலாந்தைச் சேர்ந்த இளைஞர். மண்வெட்டியில் தொடங்கி, மரம் அறுக்கும் ரம்பம், கார்கள், வேன்கள் வரை தகரங்களில், இயற்கைச் சார்ந்த வடிவங்களைச் செய்கிறார். அப்படி சமீபத்தில், "நேச்சர் டெலிவர்ஸ்" ( Nature Delivers ) என்ற பெயரில் ஒரு பழைய ஃபோர்ட் - ட்ரான்ஸிட் ( Ford - Transit ) வேனில் சில மர வடிவங்களைக் கைகளாலேயே செதுக்கினார். "பொதுவாக மோட்டார் வாகனங்களை நவீனத்தின் அடையாளமாகவும், இயற்கைக்கு மாற்றாகவும் பார்க்கிறோம். ஆனால், இவை இயற்கையிடமிருந்து நம்மை முற்றிலும் விலக்குகிறது. இவைகளைக் கொண்டு இயற்கையை நாம் கடந்திட முடியாது" என்ற தத்துவத்தின் அடிப்படையில் இவர் இதை வடிவமைத்துள்ளார். வெளிநாடுகளில் ஃபோர்ட் ட்ரான்ஸிட் வாகனம், பொருள்களை டெலிவர் செய்வதற்காகப் பயன்படுத்தப்படுகிறது. நவீன வாழ்வின் முக்கிய அடையாளமாக அது இருப்பதால், அந்த...