November 28, 2016
634 முறை கொலை முயற்சி... ஃபிடல் சந்தேகம் இல்லாமல் சந்திக்கும் மனிதர்!
November 28, 2016 கடந்த நவம்பர் 25-ம் தேதி இரவில். கியூபா அதிபர் ரவுல் காஸ்ட்ரோ தொலைக்காட்சியில் தோன்றினார். ஏதோ முக்கியமான செய்திதான் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர். ‘கியூபா புரட்சியின் காமென்டர் இன் சீஃப் மறைந்து விட்டார். தொடர்ந்து வெற்றியை நோக்கி செல்லுங்கள் 'என்ற ஃபிடலின் புகழ்பெற்ற பொன்மொழியுடன் ரவுல் காஸ்ட்ரோ அறிவித்த போது, கியூபா மக்கள் மட்டுமல்ல, அர்ஜென்டினாவில் இருந்த மரடோனாவும் குலுங்கி அழத் தொடங்கி விட்டார். சர்ச்சைகளுக்குப் பெயர் போன ஒரு புகழ்பெற்ற கால்பந்து வீரர், ஒரு நாட்டின் தலைவர் ஒருவர் மறைவுக்கு கண்ணீர் வீடுகிறார் என்றால், அதன் பின்னணி பலமானது. கடந்த 1959-ம் ஆம் ஆண்டு சேகுவராவுடன் சேர்ந்து கியூபா புரட்சியில் ஈடுபட்டு, படிஸ்டாவை ஆட்சியில் இருந்து அகற்றிய ஃபிடல் கியூபா மக்களின் வாழ்க்கையில் மட்டுமல்ல மரடோனாவின் வாழ்விலும் மலர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.. மரடோனா இன்று உயிருடன் இருக்கிறார் என்றால் அதற்கு ஃபிடலும் ஒரு காரணம். கடந்த 1986-ம் ஆண்டு...