November 22, 2016
'பிளாக் மணி உலகில் கமல் மட்டும்தான் வொயிட்!' - சிலாகிக்கும் ஆஸ்கார் ரவிச்சந்திரன்
November 22, 2016 நரேந்திர மோடி அறிவிப்பு நாட்டு மக்களை மட்டுமல்ல தமிழ் சினிமாவையே கடும் உலுக்கு உலுக்கி இருக்கிறது. ஆயிரம், ஐநூறு ரூபாய்கள் செல்லாது என்ற அறிவிப்பால் வெளியூரில் நடந்த படப்பிடிப்புகள், சென்னையில் நடந்து கொண்டிருந்த படப்பிடிப்புகள் அனைத்தும் பாதியிலேயே நிறுத்தப்பட்டன. தற்போது மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துவரும் படத்தின் படப்பிடிப்பும், சந்தானம் ஹீரோவாக நடித்துவரும் 'ஓடி ஓடி உழைக்கணும்' திரைப்படத்தின் படப்பிடிப்பும் மட்டுமே நடந்து வருகிறது. விஜய் நடிக்கும் 'பைரவா' படமும், சூர்யாவின் 'சிங்கம் -3' படங்களின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் வேகமாக நடந்து வருகின்றன. இந்திய, தமிழ் சினிமாவில் நடித்துவரும் முன்னணி நடிகர்கள், நடிகைகள் பெரும்பாலும் தனது சம்பளத்தில் பாதிப் பணத்தை...