இந்த படத்தில் விஜய் தான் நடிக்க வேண்டியிருந்தது! இது தெரியுமா
July 07, 2017இளையதளபதி விஜய் பல படங்களில் நடித்து ஹிட் கொடுத்துள்ளார். அவரின் படங்கள் சில எதிர்பாபாராத தோல்வியையும் சந்தித்துள்ளது. ஆனால் சில படங்கள் வந...
இது போன்ற பிரபல நடிகர்களுக்கும் சில படங்கள் கைவிட்டுபோனதும் உண்டு. கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்து கடந்த ஆண்டு வெளியான அச்சம் என்பது மடமையா படத்தில் விஜய் தான் முதலில் நடிக்க வேண்டியிருந்தது.
மேலும் யோகன் என்ற படம் விஜய்க்காக எடுக்கப்பட இருந்தது. ஃபர்ஸ்ட் லுக் கூட ரிலீஸ் ஆனது. ஆனால் படம் அப்படியே நிறுத்தப்பட்டது.
பிக் பாஸ் நிகழ்ச்சியால் சிம்புவுக்கு வந்த சிக்கல்
July 07, 2017நடிகர் சிம்பு தன் கனவு படமான கெட்டவன் படத்தை விரைவில் துவங்கவுள்ளதாக செய்திகள் வந்துள்ள நிலையில், அந்த படத்திற்கு விஜய் டிவி நடத்திவரும் பி...
10 வருடத்திற்கு முன்பே துவங்கிய இந்த படத்தில் நமீதா ஹீரோயினாக நடித்துள்ளார். தற்போது அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் உள்ளார், அதிலிருந்து அவர் வெளியில் வந்தால் தான் கெட்டவன் படத்தில் நடிக்க முடியும்.
அதனால் படப்பிடிப்பு துவங்குவதில் சில மாதங்கள் தாமதம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதல் நாளே இத்தனை கோடிகளை அள்ளியதா SpiderMan Homecoming
July 07, 2017ஹாலிவுட் படங்கள் என்றாலே பாக்ஸ் ஆபிஸில் வசூல் சாதனை படைப்பது இயல்பு தான். அதிலும் SpiderMan Homecoming போன்ற ஹாலிவுட் சீரியஸ் படங்களுக்கு உ...
அந்த வகையில் இப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளிவந்தது, அமெரிக்காவில் மட்டுமே இப்படம் ரூ 40 மில்லியன் டாலர் வசூல் செய்துள்ளது.
உலகம் முழுவதும் சேர்த்து இந்திய மதிப்பில் ரூ 300 கோடி வரை முதல் நாளே வசூல் செய்துள்ளது. ஆனால், இப்படத்திற்கு நேற்று தமிழகத்தில் பெரிதும் வரவேற்பு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
எப்படி இருந்த டான்ஸ் மாஸ்டர் தற்போது இப்படி ஆகிவிட்டாரா? ரசிகர்கள் ஷாக் (புகைப்படம் உள்ளே)
July 07, 2017பாலிவுட் திரையுலகில் முன்னணி நடன இயக்குனர் கணேஷ் ஆச்சார்யா. இவரின் உடல் எடை எல்லோருக்கும் தெரிந்தது. 120 கிலோவிற்கு மேல் இருந்தும் இந்தியாவ...
120 கிலோவிற்கு மேல் இருந்தும் இந்தியாவின் முன்னணி நடன இயக்குனராக வலம் வருகின்றார். மேலும், இவர் ஏபிசிடி என்ற பாலிவுட் படத்தில் நடித்துள்ளார்.
தமிழில் ஜீவா நடித்த ரௌத்தரம் படத்தில் முன்னணி வில்லனாக நடித்து அசத்தினார். இவர் சமீபத்தில் தன் புகைப்படத்தை வெளியிட்டு அனைவரையும் ஷாக் ஆக்கியுள்ளார்.
ஏனெனில் பல கிலோக்களை குறைத்து ஸ்லீம் தோற்றத்தில் இவர் இருக்க பலருக்கும் ஷாக் தான்...
மாம்-திரைவிமர்சனம்-எல்லா நேரத்திலும் கடவுள் நம்மிடம் இருக்க மாட்டார், அதற்கு பதிலாக தான் அம்மாவை படைத்தார்’
July 07, 2017தமிழ் சினிமாவில் 80-களில் கொடிக்கட்டி பறந்தவர் ஸ்ரீதேவி. இவர் பாலிவுட்டிலும் கால் பதித்து நம்பர் 1 நடிகையாக வலம் வந்தவர். இவர் தயாரிப்பாள...
கதைக்களம்
டெல்லியில் நடந்த நிர்பயா கற்பழிப்பு சம்பவத்தை தழுவிய கதையே இந்த மாம். ஸ்ரீதேவி ஒரு பள்ளியில் ஆசிரியராக உள்ளார். அவரின் மகளும் (சஜல் அலி) அதே பள்ளியின் படிக்கின்றார்.
சஜலுக்கு ஒரு பையன் தொடர்ந்து தன்னை காதலிக்குமாறு டார்ச்சர் செய்கிறான், ஒருநாள் பார்ட்டிக்கு செல்லும் போது எல்லை மீறி அவரை தன் நண்பர்களுடன் இணைந்து ஓடும் காரில் கற்பழித்து சாக்கடையில் தூக்கி எறிகிறான்.
அதை தொடர்ந்து ஸ்ரீதேவி நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க, வழக்கு குற்றவாளிகளுக்கு சாதகமாக வருகின்றது. இனி சட்டத்தை நம்பினால் ஒன்றும் ஆகாது, என ஸ்ரீதேவியே களத்தில் இறங்கி பழிவாங்கும் ஒரு எமோஷ்னல் பயணம் தான் இந்த மாம்.
படத்தை பற்றிய அலசல்
ஸ்ரீதேவி இன்னும் நான் ஒரு சிறந்த நடிகை என்று நிரூபித்துக்கொண்டே இருக்கின்றார். தன் மகளின் நிலை அறிந்து அவர் அழும் காட்சியில் படம் என்பதை மறந்து கதாபாத்திரமாகவே வாழ்கின்றார், அதிலும் ஒருவனை கொலை செய்ய போய், ஒரு விபத்து ஏற்பட, அப்போது அவர் பயந்து கொடுக்கும் எக்ஸ்பிரேஷன் எல்லாம் எப்போதுமே ஸ்ரீதேவி நம்பர் 1 தான் என்று சொல்ல வைக்கின்றது.
நாட்டையே உலுக்கிய ஒரு வழக்கு, அதை கையில் எடுத்து கொஞ்சம் சினிமாத்தனம் சேர்த்து மக்களின் உணர்வை புரிந்து அதற்கு ஏற்றார் போல் படத்தை இயக்கிய ரவிக்கு பாராட்டுக்கள்.
ஒரு பெண் கற்பழிக்கப்பட்டால் அவள் அடையும் துன்பங்கள், வெளியே வரமுடியாமல், ஒரு சின்ன அறைக்குள் அடைந்து சஜல் அழும் காட்சியெல்லாம் மனதை உலுக்கி எடுக்கின்றது, பல இடங்களில் கண்கள் ஈரமாகின்றது.
தன் மகளை இப்படி ஆக்கியவன் சந்தோஷமாக வெளியே இருக்கிறான் என்று தெரிந்து ஸ்ரீதேவி எடுக்கும் அதிரடி, அதற்கு உதவும் நஸ்வுதீன் சித்திக், இவர்களின் திட்டத்தை கண்டுப்பிடிக்கும் போலிஸ் அக்ஷய் கண்ணா என அனைவருமே சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளனர்.
டெல்லியின் ஆடம்பரத்தை ஒரு பக்கம் காட்டி, அதன் பின் எத்தனை அதிர்ச்சிகள் உள்ளது என்பதையும் இயக்குனர் தெளிவாக கூறியுள்ளார், படத்தின் மிகப்பெரும் பலம் ரகுமானின் இசை, பின்னணியிலேயே பல காட்சிகளில் நெகிழ வைக்கின்றார். அதிலும் குறிப்பாக சஜலை காருக்குள் கற்பழிக்கும் காட்சியில் கார் போக போக ரகுமானின் பின்னணி இசையே காட்சிகளை விளக்கி நெஞ்சை கனமாக்குகின்றது.
க்ளாப்ஸ்
நடிகர், நடிகைகள் பங்களிப்பு, அனைவருடைய யதார்த்தமான நடிப்பு கவர்கின்றது.
ஏ.ஆர்.ரகுமானின் பின்னணி இசை.
பல்ப்ஸ்
கொஞ்சம் மெதுவாக நகரும் திரைக்கதை மற்றபடி ஏதுமே இல்லை.
மொத்தத்தில் படத்தில் ஒரு வசனம் வரும் ‘எல்லா நேரத்திலும் கடவுள் நம்மிடம் இருக்க மாட்டார், அதற்கு பதிலாக தான் அம்மாவை படைத்தார்’ என்று, இந்த வசனம் போலவே படமும் மிகவும் எமோஷ்னல் பயணமாக உள்ளது.
ஜிஎஸ்டி குழப்பங்கள்; வந்தாச்சு புதிய செயலி!
July 07, 2017ஜிஎஸ்டி குழப்பங்களுக்கு தீர்வு சொல்லும் விதமாக புதிய மொபைல் செயலி ஒன்றை மத்திய அரசு அறிமுகம் செய்திருக்கிறது. கடந்த ஜூலை 1 ஆம் தேதி ஜிஎஸ்ட...
கடந்த ஜூலை 1 ஆம் தேதி ஜிஎஸ்டி அமலானது முதல் குழப்பங்களும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. மத்திய அரசும் பல்வேறு அறிவிப்புகளை தொடர்ந்து அறிவித்து வந்தாலும் ஒரு தெளிவான புரிதல் பொதுமக்களுக்கு இன்னமும் கிடைக்கவில்லை. இதில் முக்கியமானது எந்த எந்த பொருள்களுக்கு எவ்வளவு வரி என்ற குழப்பம்.
இந்நிலையில் மத்திய அரசாங்கம் நேற்று புதிய செயலி ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. ஜிஎஸ்டி ரேட்ஸ் ஃபைண்டர் (GST Rates Finder) என பெயரிடப்பட்டுள்ள இந்த செயலியை மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தொடங்கி வைத்தார். இந்த செயலி மூலம் எந்த பொருள்களுக்கும் சேவைகளுக்கும் எத்தனை சதவிகிதம் வரி என்பதை தெரிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செயலியை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சியில் சுங்கத் துறை அதிகாரிகளும் உடனிருந்தனர். மத்திய சுங்கத் துறை தலைவர் வனஜா சர்னா மற்றும் சந்தீப் ராவல் ஆகியோர்தான் இந்த செயலியினை உருவாக்கி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Search This Blog
Blog Archive
- ► 2018 (454)
-
▼
2017
(521)
-
▼
July
(156)
-
▼
Jul 07
(7)
- BiggBoss நிகழ்ச்சியை இதுவரை எத்தனை கோடி பேர் பார்த...
- இந்த படத்தில் விஜய் தான் நடிக்க வேண்டியிருந்தது! இ...
- பிக் பாஸ் நிகழ்ச்சியால் சிம்புவுக்கு வந்த சிக்கல்
- முதல் நாளே இத்தனை கோடிகளை அள்ளியதா SpiderMan Homec...
- எப்படி இருந்த டான்ஸ் மாஸ்டர் தற்போது இப்படி ஆகிவிட...
- மாம்-திரைவிமர்சனம்-எல்லா நேரத்திலும் கடவுள் நம்மிட...
- ஜிஎஸ்டி குழப்பங்கள்; வந்தாச்சு புதிய செயலி!
-
▼
Jul 07
(7)
-
▼
July
(156)