December 08, 2016
December 08, 2016
அரசியலில் வெற்றிடம்! நிரப்புவாரா ரஜினி? பிரபல ஜோதிடர் கமுக்கமான கமென்ட்!
December 08, 2016அம்மா உடல்நிலை ஆபத்தான நிலைக்கு தள்ளப்பட்ட நாளில் இருந்தே ஒட்டுமொத்த தமிழகத்தின் பார்வையும் ஜெ.வின் பக்கத்து வீட்டுக்காரர் பக்கம்தான் இருந்...

குட்டிக் குழந்தைகள் கூட சட்டென்று சொல்லிவிடும். கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக “வருவேன். வர வேண்டிய நேரத்தில் கண்டிப்பா வருவேன்” என்றெல்லாம் தான் நடித்து வந்த சினிமாக்களில் முன்னோட்டம் விட்டுக் கொண்டிருந்த ரஜினிக்கு, அந்த நேரம் இதுதான் என்பது தெரிந்திருக்கும். தெரிய வேண்டும் என்றெல்லாம் அவரது ரசிகர்களுக்கும் எண்ணம் இருந்தது.
அதிமுகவின் சிம்ம கர்ஜனை ஓய்ந்து அமைதியாக படுத்திருக்கும் அந்த இறுதி நேரத்தில், அவருக்கு மலர் வளையம் வைக்க வந்த ரஜினியை பார்த்த மக்களும் கூட, ஓவென்று ஆரவாரம் செய்து தங்கள் அன்பை வெளிப்படுத்தியதை பார்க்க முடிந்தது. ஆனால், ரஜினி இனிமேலாவது கட்சி ஆரம்பிப்பாரா? மத்தியில் ஆளும் மோடிக்கும் ரஜினிக்கும் இருக்கும் நட்பு, இனிமேலாவது பிரயோஜனமான ஒரு திசையை நோக்கி பயணிக்குமா? என்றெல்லாம் ஜனங்களுக்கும் ஆர்வம் வர ஆரம்பித்திருக்கிறது. இந்த நிலையில்தான், தமிழ்நாட்டில் புகழ் பெற்ற அந்த ஜோதிடரை சந்தித்தோம்.
“என் பெயரையெல்லாம் போட்றாதீங்க. ரஜினி அரசியலுக்கு வருவாரா, மாட்டாரன்னு மட்டும் சொல்லிடுறேன்” என்று நம்மிடம் பேச ஆரம்பித்தார் அவர்.
ரஜினியோட நட்சத்திரம் திருவோணம். மறைந்த நடிகர் சிவாஜி கணேசனின் நட்சத்திரமும் திருவோணம். அவருக்கு இல்லாத செல்வாக்கா? ரசிகர்கள் கூட்டமா? ஆனால் அவர் கட்சி ஆரம்பித்தாரே… என்னாச்சு? ரஜினி கட்சி ஆரம்பித்தாலும் அதே நிலைமைதான் தொடரும். இந்த ஜோதிட பலன் ரஜினிக்கும் தெரிந்திருக்கும். அதனால்தான் பலரும் வற்புறுத்திய போதெல்லாம், அமைதியாக இருந்துவிட்டார்.
“இப்போதல்ல… எப்போதுமே அவர் அரசியலுக்கு வர மாட்டார். வெளியில் இருந்தே சிங்கம் போல கர்ஜனை செய்துவிட்டு போக வேண்டியதுதான். உள்ளே வந்தால் சிங்கத்தை எலியாக்கிவிடும் அவரது ராசி” என்றபடி தனது ஜாதக பலனை முடித்து வைத்தார்.
அட… க்ளைமாக்ஸ் இப்படியாகிருச்சே?
December 08, 2016
ஜெயலலிதா மீது கேரள அரசின் கரிசனம்... தமிழக செய்தித்துறையின் மெளனம்!
December 08, 2016ஜெயலலிதா மறைவு காரணமாக இந்தியாவே ஸ்தம்பித்து விட்டது. பல மாநில அரசுகளும் சட்டசபை நிகழ்வுகளை ரத்து செய்தன. பாராளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்...

ஒடிஷா , கேரள அரசுகள் மூன்று நாட்கள் அரசு முறை துக்கம் அறிவித்துள்ளன. ஆந்திரா, தெலங்கான மாநிலங்களில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகள் தமிழகம் போலவே பாலைவனமாகின. ஆந்திராவில் சித்தூர், திருப்பதி நகரங்கள் பெரும் சோகத்தில் மூழ்கின. தெலங்கானாவில் செகந்திரபாத் நகருக்கும் ஜெயலலிதாவுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. செகந்திரபாத் அருகேயுள்ள ஜெடிமட்லா கிராமத்தில்தான் ஜெயலலிதாவின் பண்ணை வீடு இருக்கிறது. இந்த பண்ணை வீட்டை ஒட்டி, தேசிய நெடுஞ்சாலை எண்.44 செல்கிறது. இந்த சாலை அருகேதான் ஜெயலலிதாவின் திராட்டைச் தோட்டம் உள்ளது. அரசியலில் நுழைவதற்கு முன்பே ஜெயலிலதா இதனை வாங்கி விட்டார்.
அகில இந்தியத் தலைவர்கள் அனைவருமே சென்னைக்கு வந்து ஜெயலலிதாவின் உடலுக்கு நேரடியாக அஞ்சலி செலுத்தினர். குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் மோடி, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, கர்நாடக முதல்வர் சித்தராமையா, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, உபி முதல்வர் அகிலேஷ் யாதவ் என ஏராளமான அகில இந்தியத் தலைவர்களும் இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் பங்கேற்றனர். தமிழகத்துடன் எப்போதும் போட்டிப் போட்டுக் கொண்டிருக்கும் இரு மாநில முதல்வர்களும் கூட, ஜெயலலிதாவின் மறைவை முன்னிட்டு மிகுந்த கவலையுடன் வந்திருந்தனர். கேரளத்தில் 3 நாட்கள் அரசு முறை துக்கம் அனுசரிக்கப்படுகிறது. பள்ளிக் கல்லூரிகளுக்கு அரசு அலுவலகங்களுக்கு பொது விடுமுறை அளிக்கப்பட்டது. கர்நாடகாவிலும் அரசு முறை துக்கம் அனுஷ்டிக்கப்பட்டது.
தமிழகத்துக்கும் அண்டை மாநிலங்களான கேரளாவுக்கும் கர்நாடாகாவுக்கும் எத்தனையோ பிரச்னைகள் உண்டு. கேரளாவுடன் முல்லை பெரியாறு பிரச்னை. கர்நாடாகாவுடன் காவிரி பிரச்னை இன்னும் அணைந்த பாடில்லை. இரு மாநில முதல்வர்களும் தமிழக முதல்வர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுக் கொண்டேதான் இருப்பார்கள். தமிழக முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு கேரள,. கர்நாடக அரசுகள் துக்கம் அனுஷ்டித்தது உண்மையிலேயே ஆரோக்கியமான விஷயமாகவே பார்க்கப்படுகிறது. கேரளா ஒரு படி மேல் போய் அரசு விடுமுறையே அளித்து விட்டது. 3 நாட்கள் அனைத்து அரசு நிகழ்வுகளும் ரத்து செய்யப்பட்டு விட்டன.
அதுமட்டுமல்ல, ஜெயலிலதாவின் இறுதி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிக்காக கேரள கவர்னர் சதாசிவம் கேரளத்தின் தற்போதைய முதல்வர் பினராயி விஜயன், முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி, கேரள சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதாலா ஆகியோர் ஒரே விமானத்தில் சென்னைக்கு வருகை தந்தனர். விமான நிலையத்தில் இருந்து ஒரே காரில் ராஜாஜி அரங்கத்துக்கு வருகை தந்து ஜெயலலிதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
அஞ்சலி செலுத்தியதோடு போய் விடவில்லை. தமிழில் பெரும்பாலான பத்திரிகைகளில் கேரள அரசு ஒரு விளம்பரம் வெளியிட்டுள்ளது. அதில் 'வெள்ளத்தனைய மலர் நீட்டம்; மாந்தர் தம் உள்ளத்தனையது உயர்வு'- என்ற திருக்குளை உதாரணம் காட்டி ஜெயலலிதா புகைப்படத்துடன் விளம்பரத்தை வெளியிட்டுள்ளது. கேரள அரசின் இந்த செயல் சமூக வலைதளங்களில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. ஏராளமானோர் அதனை பகிர்ந்து வருகின்றனர்.
தமிழக அரசு எத்தனையோ விளம்பரங்களை வெளியிட்டுள்ளது. முதல்வரின் மறைவுக்கு ஒரு விளம்பரம் கூட வெளியிடப்படவில்லை. அதே வேளையில், கேரள அரசு திருக்குறளை உதாரணம் காட்டி மறைந்த நமது முதல்வரை கவுரவப்படுத்தியுள்ளது. அந்த திருக்குறள் கேரள அரசுக்கும் நிசசயம் பொருந்தும்!
December 08, 2016
'எப்போது உயில் எழுதினார் ஜெயலலிதா?!' - சசிகலாவை திணறடிக்கும் ஆர்.டி.ஐ கேள்விகள்
December 08, 2016ஜெயலலிதா, எப்போது உயில் எழுதினார், அவரது உடல் மீது வைக்கப்பட்டு இருந்த தேசிய கொடியை சசிகலா நடராஜன் வாங்கியது சரியா போன்ற கேள்விகளை ஆர்.டி.ஐ...
ஜெயலலிதா, எப்போது உயில் எழுதினார், அவரது உடல் மீது வைக்கப்பட்டு இருந்த தேசிய கொடியை சசிகலா நடராஜன் வாங்கியது சரியா போன்ற கேள்விகளை ஆர்.டி.ஐ மூலம் கேட்டுள்ளார் நெல்லை வழக்கறிஞர் பிரம்மா.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, கடந்த 5ம் தேதி காலமானார். அவரது உடல் எம்.ஜி.ஆர். சமாதி அருகில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக மத்திய பொது தகவல் அலுவலர், ராஜ்பவனுக்கு நெல்லை வழக்கறிஞர் பிரம்மா சில கேள்விகளை ஆர்.டி.ஐ மூலம் கேட்டுள்ளார். அதன் விவரம்:
* முதலமைச்சராக ஜெயலலிதா 5.12.2016ல் அப்போலோ மருத்துவமனையில் மரணம் அடைந்தார். அவரது இறுதி சடங்கு 6.12.2016ல் நடைபெற்றது. அதில் மத்திய அரசு சார்பாக கலந்து கொண்ட நபர்களின் பெயர், பணி பொறுப்பு, விவரம் தர வேண்டும்.
* இறுதி சடங்கில் முப்படையினர் மொத்தம் எத்தனை பேர் கலந்து கொண்டார்கள். அவர்கள் முப்படையில் என்னென்ன பணி பொறுப்பில் உள்ளார்கள் என்ற விவரம் தர வேண்டும்.
* இறுதி சடங்கில் ஜெயலலிதா பூத உடல் முப்படையினரிடம் எத்தனை மணிக்கு ஒப்படைக்கப்பட்டது. அவ்வாறு ஒப்படைக்கப்பட்ட பூத உடலை முப்படையில் பெற்றுக் கொண்ட நபரின் பெயர், பணி பொறுப்பு விவரம் தர வேண்டும்.
* இறுதி சடங்கில் ஜெயலலிதா, பூத உடல் மீது வைக்கப்பட்டு இருந்த இந்திய தேசிய கொடியை எடுத்து சசிகலா நடராஜனிடம் எந்த அடிப்படையில் ஒப்படைக்கப்பட்டது என்ற விவரம் தர வேண்டும்.
* இறுதி சடங்கில் தேசிய கொடியை பெறுவதற்கு இந்திய அரசியலமைப்பின் சட்டத்தின்படி இறந்தவரின் வாரிசுதாரர்கள் யாரிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். எந்த அடிப்படையில் எந்த வரிசையில் வாரிசுதாரர்களிடம் சட்டவிதிகளின்படி ஒப்படைக்கப்பட வேண்டும் என்ற விவரம் தர வேண்டும்.
* இறுதி சடங்கில் தேசிய கொடியை இறந்தவரின் வாரிசுதாரர் அல்லாத நபரிடம் எந்த அடிப்படையில் ஒப்படைக்கலாம் என சட்ட விதிகள் உள்ளது என்ற விவரம் தர வேண்டும்.
* ஜெயலலிதாவின் இறுதி சடங்கு இந்து சமய அடிப்படையில் நடைபெற்றுள்ளது எனில் இந்து வாரிசு உரிமை சட்டப்படி தேசிய கொடியை முப்படை வீரர்களிமிருந்து பெறுவதற்கு சட்ட அதிகாரம் யாருக்கு வழங்கப்பட்டுள்ளது என்ற விவரம் தர வேண்டும்.
* மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அரசு மரியாதை அடிப்படையில் எந்த சட்டபிரிவின் கீழ் முப்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டு குண்டுகள் முழங்க இறுதி சடங்கு நடைபெற்றது என்ற விவரம் தர வேண்டும்.
* இறுதி சடங்கில் மொத்தம் எத்தனை குண்டுகள் முழுங்கப்பட்டது என்ற விவரம் தர வேண்டும்.
* முதல்வர் பதவியிலிருந்த காரணத்தினால் ஜெயலலிதாவுக்கு அரசு மரியாதையும், குண்டு முழக்கமும் மற்றும் அவரது பூத உடலை ராணுவ வாகனத்தில் ஏற்றி செல்லப்பட்டுள்ளது எனில் எந்த சட்டப்பிரிவின் கீழ் இந்த நடைமுறை அனுமதிக்கப்படுகிறது என்ற விவரம் தர வேண்டும்.
* ஜெயலலிதாவுக்கு இறுதி சடங்கு நடைபெறுவதற்கு முன்பு எத்தனை நாட்களுக்கு முன்பு அல்லது எத்தனை மணி நேரத்திற்கு முன்பு ஜெயலலிதா முதல்வர் பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டார் என்ற விவரம் தர வேண்டும்.
* இறுதி சடங்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நடைபெற்றது போல தமிழகத்தில் 30 ஆண்டுகளுக்கு முன்பு எந்தெந்த முன்னாள் முதல்வர்களுக்கெல்லாம் அரசு மரியாதையுடன் நடைபெற்றுள்ளது என்று விவரம் தர வேண்டும்.
* அரசு மரியாதை கேட்டு விண்ணப்பம் செய்ய வேண்டுமெனில் விண்ணப்பம் செய்ய வேண்டிய நபரின் பெயர், முகவரி தர வேண்டும். மேலும் விண்ணப்பம் செய்யும் தகுதி யார், யாருக்கெல்லாம் உள்ளது என்ற விவரம் தர வேண்டும்.
* முன்னாள் முதல்வர் ஜெயலலிதா எழுதிய உயிலின் நகல் தர வேண்டும்.
* உயிலானது எந்த தேதியில் எழுதப்பட்டது எந்த தேதியில் அரசிடம் ஒப்படைக்கப்பட்டது என்ற விவரம் தர வேண்டும். அரசிடம் கொடுக்கப்பட்ட உயிலினை பெற்றுக் கொண்ட அதிகாரியின் பெயர், பணி பொறுப்பு மற்றும் உயிலை பெற்றுக் கொண்டமைக்கு பதிவேட்டில் பதிவு செய்யயப்பட்டு வழங்கப்பட்ட எண் விவரம் தர வேண்டும்.
* தமிழக முதலமைச்சராக பன்னீர் செல்வம் எந்த தேதியில் முதலமைச்சர் பதவியை ஏற்றுக் கொண்டார். பதவி பிரமாணம் செய்து வைக்கப்பட்ட நேரம், நாள் விவரம் தர வேண்டும்.
* முதலமைச்சர் பதவி ஏற்றபொழுது அவருடன் மொத்தம் எத்தனை அமைச்சர்கள் பதவியேற்றார்கள் என்ற விவரம் தர வேண்டும். அவர்களுக்கு ஆளுநர், பதவி பிரமாணம் எத்தனை மணிக்கு செய்து வைத்தார். எந்த தேதியில் என்ற விவரம் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பணி பொறுப்பு ஏற்று கையொப்பமிட்ட பதிவேட்டின் நகல் தர வேண்டும்
* முதலமைச்சர் பன்னீர்செல்வம் தேர்ந்தெடுக்கப்பட்டமைக்கு எம்.எல்.ஏக்கள் ஒப்புதல் அளித்து கொடுத்த கடித நகல் தர வேண்டும்.
* முதலமைச்சராக பன்னீர்செல்வம் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு என்ன பொறுப்பு வைத்திருந்தார் என்ற விவரம் தர வேண்டும். சட்டமன்ற உறுப்பினர் தவிர வேறு என்னென்ன பொறுப்புகளிலிருந்து ஜெயலலிதா விடுவிக்கப்பட்டார் என்ற விவரம் தர வேண்டும்.
* முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணமடைந்தார் என்ற செய்தி அதிகாரப்பூர்வமாக அரசு எத்தனை மணிக்கு வெளியிட்டது என்ற விவரம் தர வேண்டும்.
* முன்னாள் முதல்வர் அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த காலத்தில் எந்தெந்த தேதிகளில் ஆளுநர் நேரில் சென்று பார்வையிட்டார் என்ற விவரம் தர வேண்டும்
* முன்னாள் முதல்வர் சிகிச்சை பெற்ற மருத்துவமனையின் மருத்துவர்கள் முன்னாள் முதல்வர் உடல்நலம் குறித்து எழுத்துப்பூர்வமாக ஆளுநரிடம் கொடுத்த நகல் தர வேண்டும்.
* தமிழக அரசின் முதல்வராக பொறுப்பு வகித்து இறந்த பின்னர், மரபுபடி தற்காலிக முதல்வர் தேர்ந்தெடுக்கப்படுவது தமிழ்நாட்டின் நடைமுறையில் இருந்துள்ளது. ஆனால் இப்போது மட்டும் மரணமடைவதற்கு முன்பு முதல்வராக பன்னீர் செல்வம் தேர்வு செய்யப்பட்டுள்ளார் எனில் முன்னாள் முதல்வருக்கு அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு நடத்துவதற்கு எந்த வகையில் சட்டத்தின் வழியில் அனுமதிக்கப்பட்டது என்ற விவரம் தர வேண்டும்.
* முன்னாள் முதல்வர் நல்லடக்கம் செய்யப்பட்ட இடமானது யாருக்கு சொந்தமான இடம் என்ற விவரம் தர வேண்டும்.
* இடமானது அரசின் பராமரிப்பிலும் அரசுக்கு சொந்தமாகவும் உள்ளது எனில் அந்த இடத்தில் தமிழக முன்னாள் முதல்வர்களை நல்லடக்கம் செய்ததற்கு வழங்கப்பட்ட அனுமதி கடித நகல் தர வேண்டும்.
* முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் எந்த தேதியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார் என்ற விவரம் தர வேண்டும்.
* கட்டணமானது என்னென்ன வகைக்கெல்லாம் கொடுக்கப்பட்டது. மருத்துவருக்கு கொடுக்கப்பட்ட கட்டணம். அப்போலோவில் ரூம் வகைக்கு கொடுக்கப்பட்ட கட்டணம். மருந்து வகைக்கு கொடுக்கப்பட்ட கட்டணம் உட்பட அனைத்து வகையான கட்டணங்களும் சேர்த்து மொத்தம் எவ்வளவு செலவு செய்யப்பட்டது என்ற விவரம் தனித்தனியே வழங்கப்பட்ட தொகை தேதி வாரியாக மற்றும் கொடுக்கப்பட்ட வரைவோலை, காசோலை, பணம் விவரம், வங்கியின் விவரம், காசோலை எண் உட்பட அனைத்து தகவல்களும் தர வேண்டும்
இவ்வாறு கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன.
இந்த ஆர்.டி.ஐ கேள்விகள் தபால் அலுவலகம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ஆளுங்கட்சி புள்ளிகள் மீது பாய்ந்த ஐ.டி ரெய்டு! -திணறடிக்கும் ‘திடீர்’ வியூகம்
December 08, 2016ஆளுங்கட்சிக்கு நெருக்கமான புள்ளிகள் மீது வருமான வரித்துறையின் நடவடிக்கைகள் பாய ஆரம்பித்துவிட்டன. ' பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றிய பின்னண...

சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள ஆயக்கர் பவனில் கடந்த சில நாட்களாக தீவிர விவாதம் நடந்து வந்தது. ' திங்கள்கிழமையன்று நடவடிக்கையில் இறங்கலாம்' என முடிவு செய்தனர். ' எத்தனை கார்கள் தேவைப்படும்' என்பதையும் முடிவு செய்து, தனியார் ட்ராவல் ஏஜென்சிக்குத் தகவல் கொடுத்தனர். சுமார் 15 லட்ச ரூபாய் வரையில் செலவாகலாம் என்பதைக் கணக்கிட்டுள்ளனர். இன்று நடந்த சோதனையில் புதிய ரூபாய் நோட்டுகளாக 70 கோடி ரூபாய்கள் பிடிபட்டுள்ளன. ' சென்னையில் எட்டு இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் 100 கிலோ தங்கம் உள்பட 90 கோடி ரூபாய் வரையில் பிடிபட்டுள்ளது. தொழிலதிபர்கள் சேகர் செட்டி, சீனிவாச ரெட்டி, பிரேம் ஆகியோரை குறிவைத்து சோதனை நடத்தப்பட்டது' என்கின்றனர் அதிகாரிகள்.
"பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்புக்குப் பிறகு, புதிய ரூபாய் நோட்டுகளைப் பெறுவதற்காக வங்கி நிர்வாகிகளை அணுகியுள்ளனர் தமிழக அமைச்சர் ஒருவருக்கு நெருக்கமான தொழிலதிபர்கள் சிலர். அண்மையில் கர்நாடக அரசு அதிகாரிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட 5 கோடி ரூபாய் புதிய நோட்டுகள் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது. முடிவில், 1,100 கோடி ரூபாய் அளவுக்கு புதிய இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளாக மாற்றப்பட்ட தகவலை அறிந்தனர். இந்தக் காரியத்தில் 27 வங்கிகள் ஈடுபட்டிருப்பதை அறிந்து மத்திய அரசு அதிர்ச்சியில் ஆழ்ந்தது. இதையடுத்து, பணத்தை மாற்றியவர்கள்; தங்கமாக மாற்றியவர்கள் குறித்த விவரங்களை சேகரிக்கத் தொடங்கினர். தமிழக முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்த அறிவிப்பு வெளியானதால், திங்கள்கிழமை அன்று ரெய்டு நடத்த முடியவில்லை. இன்றும் நாளையும் ரெய்டு நடவடிக்கைகள் பாயும்" என்கின்றனர் வருமான வரித்துறையினர்.
“தமிழக சீனியர் அமைச்சர் ஒருவரின் சம்பந்தி உள்பட மூன்று பேர் வீடுகளில் நேற்று அதிரடி சோதனை நடத்தப்பட்டது. இதில் கணக்கில் காட்டப்படாத ஆவணங்களும் பணமும் பிடிபட்டன. இன்று ரெய்டில் சிக்கியவர்களில் ஒருவர், மாநில அரசில் கோலோச்சும் அரசு செயலர் ஒருவருக்கு மிகவும் வேண்டியவர். மணல் வியாபாரத்தில் கொடி கட்டிப் பறக்கிறார். சீனியர் அமைச்சர்களோடு நெருங்கிய உறவில் இருப்பவர். இவர்களுடைய அண்ணா நகர், தி.நகர் வீடுகளில் சோதனை நடந்துள்ளது. பழைய நோட்டுகளை மாற்றியது குறித்து, விரிவான விசாரணை நடத்தப்பட உள்ளது. பணத்தை மாற்றிய சீனியர் அமைச்சர்கள் குறித்த தகவலையும் சேகரித்துள்ளனர். மத்திய அரசின் அறிவிப்புக்குப் பிறகான இவர்களின் செயல்பாடுகளையும் தீவிரமாக கண்காணித்து வந்தனர். வருமான வரித்துறையின் வலையில் எளிதாகவே சிக்கினர். மாநில அமைச்சர் ஒருவரின் உறவினர்களை வளைத்தது; அரசின் உயர் செயலர் பொறுப்பில் உள்ளவரின் நண்பர் வீட்டில் ரெய்டு நடத்தியது என ‘எதையோ’ மனதில் வைத்து மத்திய அரசு களமிறங்கியுள்ளது. ஆட்சி அதிகாரத்தில் கோலோச்சுபவர்களை குறிவைத்துத் தாக்குவதாக உணர்ந்து கொள்ளத் தோன்றுகிறது” என்கிறார் தலைமைச் செயலக அதிகாரி ஒருவர்.
‘புதிய ரூபாய் நோட்டுகள் புழக்கத்துக்கு வந்தபோது, சென்னை பாரிமுனை உள்பட சில இடங்களில் மார்வாடிகளை குறிவைத்துக் களமிறங்கியது வருமான வரித்துறை. ஜெயலலிதாவின் மரணத்துக்குப் பிறகு ஆளுங்கட்சிக்கு நெருக்கமான புள்ளிகள் குறிவைக்கப்படுவதை அவ்வளவு எளிதாகப் பார்க்க முடியவில்லை’ என்கின்றனர் அ.தி.மு.கவினர்.
Search This Blog
Blog Archive
- ► 2018 (454)