October 29, 2016
சில அம்சங்களைத் தவிர்த்திருந்தால் ‘கொடி’ இன்னும் நன்றாகப் பறந்திருக்கும்
October 29, 2016<
இயக்குநர் துரை செந்தில்குமார் ‘எதிர்நீச்சல்’, ‘காக்கி சட்டை’ படங்களைத் தொடர்ந்து இயக்கி யிருக்கும் படம் ‘கொடி’. தனுஷ் இரட்டை வேடத்தில் நடிக்கும் முதல் படம் என்பதால் இந்தப் படத்தை ரசிகர்கள் அதிகமாக எதிர்பார்த்தனர். தனுஷ் த்ரிஷாவுடன் இணைந்து நடிக்கும் முதல் படம் என்பதும், ‘ப்ரேமம்’ புகழ் அனுபமா பரமேஸ்வரன் தமிழில் அறிமுகமாகும் படம் என்பதும் கூடுதல் ஆவலை உருவாக்கியிருந்தன. கொடி (தனுஷ்) பிறக்கும்போதே அரசியல் அவனுடைய வாழ்க்கையின் அங்கமாகிவிட்டது. அவனுடைய அப்பா (கருணாஸ்) தான் வாய் பேச முடியாததால் அரசியலில் சாதிக்க முடியாததை தன் மகன் சாதிக்க வேண் டும் என்று விரும்புகிறார். ஊரில் மெர்குரி கழிவுகளைக் கொட்டி வைத்திருக்கும் ஒரு தொழிற்சாலையை அகற்றக் கோரி கட்சி நடத்தும் போராட்டத்தில் தீக்குளித்து இறந்து விடுகிறார். அப்பாவின் விருப்பத் துக்கு ஏற்றபடி, கொடி தீவிர அரசியல் வாதியாகிறான். இரட்டைச் சகோ தரர்களில் இன்னொருவனான அன்பு (தனுஷ்) கல்லூரிப் பேராசிரியர். இவன்...