­
10/17/16 - !...Payanam...!

“நண்பேன்டா…” என்று யாருக்கு வேண்டுமென்றாலும் கை கொடுத்துவிடுவார் சந்தானம். ஆனால் சிவகார்த்திகேயன் பற்றி பேச்செடுங்களேன்… வெண்டைக் காயை போட்...

<
“நண்பேன்டா…” என்று யாருக்கு வேண்டுமென்றாலும் கை கொடுத்துவிடுவார் சந்தானம். ஆனால் சிவகார்த்திகேயன் பற்றி பேச்செடுங்களேன்… வெண்டைக் காயை போட்டு விளக்கெண்ணையில் பிசைந்த மாதிரி ஆகிவிடும் முகம். ஒரே தொலைக்காட்சியால் உயரத்திற்கு வந்தவர்கள்தான் இருவரும். ஆனால் இவர் ஒரு துருவத்திலும் அவர் ஒரு துருவத்திலும் நின்று கொண்டு நம்பியார் சிரிப்பு சிரிப்பதுதான் நாடு தாங்காத புரட்சி #actorsanthanam #sivakarthikeyan #VijayTv #DhillukkuThuttu #remo #ActionHero #VTVGanesh எப்படியாவது சிவகார்த்திகேயன் இடத்தை அடைந்துவிட வேண்டும் என்பதுதான் சந்தானத்தின் ஒரே லட்சியமாகவும் இருக்கிறது. மெல்ல காமெடி கூடாரத்திலிருந்து வெளியேறி, தனக்கு வேறொரு இமேஜ் கொடுத்துக் கொள்ள ஆசைப்பட்டாலும், மக்கள் மனசிலிருந்து அவரது நகைச்சுவை பிம்பம் உடைந்தால்தானே? அப்படி உடைய வேண்டும் என்றால், நவீன பொக்லைன்கள் நாலைஞ்சு இருந்தாலும் நடக்காது போலிருக்கே! அதற்காகதான் புது வேகம் எடுத்திருக்கிறார் சந்தானம். விடிவி கணேஷ் தயாரிக்கும் ஒரு புதிய படத்தில் ஹீரோவாக நடிக்கும் சந்தானம், அதில் முழுக்க...

Read More

தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு. தற்போது தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளிலும் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வருகிறார். அட...

தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு. தற்போது தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளிலும் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வருகிறார். அடுத்து தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் சுந்தர்.சி இயக்கப் போகும் திரைப்படம் 'சங்கமித்ரா' .சரித்திரக்கால கதை என்பதால் 'பாகுபலி' போன்று 250 கோடி பட்ஜெட்டில் உருவாக்க திட்டமிட்டனர். முதலில் விஜய் கால்ஷீட் கேட்டனர்,அவர் மறுத்தார், அடுத்து சூர்யாவிடம் கேட்டனர் அவரும் 'நோ' சொல்லி விட்டார். அதன்பின் மகேஷ்பாபுவை சந்தித்தனர் அவர் அரைமனதோடு ஒ.கே சொல்லி அனுப்பினார்.                                 மகேஷ்பாபுவை தொடர்ந்து பெரும் சம்பளம் பேரத்தோடு ஜெயம் ரவி, ஆர்யாவிடம் தேதிகள் கேட்டனர். 'சங்கமித்ரா' படத்தை நட்சத்திர பட்டாள படமாக உருவாக்க திட்டமிட்டனர். இதற்கிடையில் ராஜமெளலி போன்று ஹிஸ்டாரிக்கல் கதையை படமாக்கும் திறன் சுந்தர்.சி-க்கு இருக்கிறதா? ஏற்கெனவே சுந்தர்.சி இயக்கிய...

Read More

சிவகார்த்திகேயன் படங்கள் என்றாலே குடும்பத்துடன் சென்று வரலாம் என்ற நிலை உருவாகிவிட்டது. ஆனால், அவர் படங்களில் தொடர்ந்து பெண்களை துரத்தி காத...

சிவகார்த்திகேயன் படங்கள் என்றாலே குடும்பத்துடன் சென்று வரலாம் என்ற நிலை உருவாகிவிட்டது. ஆனால், அவர் படங்களில் தொடர்ந்து பெண்களை துரத்தி காதலிப்பது போல் காட்சிகள் உள்ளது என பல குற்ற்ச்சாட்டுகள் எழுந்தாலும் படம் நன்றாக தான் ஓடுகின்றது. நேற்று பல சர்ச்சை கேள்விக்கு சாமர்த்தியமாக பதிலை கூறினார் சிவகார்த்திகேயன், இதில் குறிப்பாக தான் அழுததற்கான காரணத்தையும் கூறிவிட்டார். இந்நிலையில் அந்த பேட்டியில் ‘சிவகார்த்திகேயன் அரசியலுக்கு வருவாரா?’ என தொகுப்பாளர் கேட்டார், அதிலும், ரஜினி, விஜய்க்கு பிறகு நீங்கள் தான் என்பது போலவும் கூறினார். இந்த கேள்வி நிகழ்ச்சியை பார்த்த அனைவருக்கு கோபத்தை ஏற்படுத்தியிருக்கும், ஏனெனில் அந்த இடத்திற்கும், இந்த கேள்விக்கும் எந்த விதத்திலும் சம்மந்தம் இல்லை, ஏன் இதை கேட்க வேண்டும் என ரசிகர்களே கோபமாகிவிட்டனர். ...

Read More

"காலமெனும் ஆழியிலும் காற்று, மழை, ஊழியிலும் சாகாது கம்பனவன் பாட்டு... அது தலைமுறைக்கு எழுதி வைத்த சீட்டு...! கண்ணதாசன், கம்பனுக்க...

"காலமெனும் ஆழியிலும் காற்று, மழை, ஊழியிலும் சாகாது கம்பனவன் பாட்டு... அது தலைமுறைக்கு எழுதி வைத்த சீட்டு...! கண்ணதாசன், கம்பனுக்கு எழுதிய கவிதை இது. கம்பனுக்கு மட்டுமின்றி, கண்ணதாசனுக்கும் இது பொருந்தும். ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்கள், நான்காயிரத்துக்கும் மேற்பட்ட கவிதைகள், 20க்கும் மேற்பட்ட நாவல்கள் என காலத்தால் அழிக்க முடியாத படைப்புகளைத் தந்த மாபெரும் படைப்பாளி... சங்க இலக்கிங்களின் செழுமையையும், தத்துவங்களையும், அனுபவங்களையும், சமூக, அரசியல் விழிப்புணர்வையும் பாமர மனிதனுக்கும் புரியும் எளிய மொழியில் எழுதிய இந்த மாபெரும் கவிஞனுக்கு இன்று (அக்டோபர் 17ம் தேதி) 35வது ஆண்டு நினைவு நாள். சிவகங்கை மாவட்டம், காரைக்குடிக்கு அருகில் உள்ள சிறுகூடல்பட்டி என்ற கிராமத்தில் பிறந்தவர் கண்ணதாசன். இயற்பெயர் முத்தையா. அப்பா பெயர் சாத்தப்ப செட்டியார். அம்மா பெயர் விசாலாட்சி. உடன் பிறந்தவர்கள், ஆறு சகோதரிகள், மூன்று சகோதரர்கள். செட்டிநாட்டில், நிறைய குழந்தைகளைப் பெற்ற தம்பதி, குழந்தைகள் இல்லாத தம்பதிக்கு...

Read More

உலக அளவில் புகழ்பெற்று அவர்கள் இறந்தும், இறவாப் புகழுடன் வரலாற்றில் இடம்பிடித்துள்ள எத்தனையோ பெரிய பெரிய பிரபலங்களின் பின்புலம்(பேக்ரவுண்டு...

<
உலக அளவில் புகழ்பெற்று அவர்கள் இறந்தும், இறவாப் புகழுடன் வரலாற்றில் இடம்பிடித்துள்ள எத்தனையோ பெரிய பெரிய பிரபலங்களின் பின்புலம்(பேக்ரவுண்டு) மிகவும் எளிமையாகவும், வறுமையாகவும் இருந்துள்ளது. இதற்கு எத்தனையோ எடுத்துக் காட்டுகள் உள்ளன.அதில் சில, வில்லியம் ஷேக்ஸ்பியர் எனும் உலக இலக்கிய மேதையின் அப்பா குதிரை லாயத்தினை பராமரித்து வருபவராக இருந்துள்ளார். தாமஸ் ஆல்வா எடிசனின் தந்தையோ படகு செய்து வாழ்க்கை நடத்திய ஏழையாக இருந்துள்ளார். பெஞ்சமின் பிராங்ளின் தந்தை மெழுகுவர்த்திகளை வாங்கி விற்பனை செய்யும் வியாபாரியாக இருந்துள்ளார். பெரும் ஆட்சியாளராக இருந்த ஹிட்லரின் தந்தை சாதாரண கட்டடத்தொழிலாளி. ஆபிரகாம் லிங்கத்தின் அப்பாவோ சாதாரண கூலித் தொழிலாளியாக இருந்துள்ளார். அமெரிக்காவின் முன்னாள் அதிபரான பில் கிளிண்டனின் அப்பா சாதாரண வியாபாரிதான். ஆங்கில அகராசியின் ஆசிரியரான சாமுவேல் ஜான்சனின் தந்தை மிகுந்த வறுமையில் வாழ்ந்து வந்த புத்தக வியாபா‌ரியாவார். மொழிகளைத் தாண்டி உலக மக்களையே சிரிப்பில் ஆழ்த்திய சார்லி சாப்ளின் தந்தை...

Read More

விக்ரம் இன்று இந்தியாவே தலையில் தூக்கி கொண்டாடும் நடிகர். தமிழநாடு அரசு விருது, ப்லிம் பேர் விருது ஏன் தேசிய விருது என அனைத்து விருதுகளையும...

விக்ரம் இன்று இந்தியாவே தலையில் தூக்கி கொண்டாடும் நடிகர். தமிழநாடு அரசு விருது, ப்லிம் பேர் விருது ஏன் தேசிய விருது என அனைத்து விருதுகளையும் வென்று விட்டார். தனக்காக லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளார்கள், சக நடிகர்கள் போல் மாஸ் படங்களை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து ஒரு சேஃப்(Safe) வட்டத்திற்குள் பயணிக்கலாம். ஆனால், கமர்ஷியல் படத்தில் கூட வித்தியாசம் காட்ட வேண்டும் என்பதற்காக படத்திற்கு படம் உடல், முகம் என மாற்றி நடிக்கும் ஒரு அற்புதக்கலைஞன். ஒரு நாள் இவரிடம் ஏன் சார் இப்படி கஷ்டப்படுகிறீர்கள் என கேட்ட போது ‘இது கஷ்டம் இல்லை, காதல், எனக்கு எதிலுமே கஷ்டம் இல்லை. எனக்கு பிடித்த இந்த சினிமாவில் ஒவ்வொரு விஷயத்தையும் நான் காதலித்து தான் செய்கிறேன்’ என்றார். இதை சாதரணமாக நாம் எடுத்துக்கொள்ள முடியாது, ஏனெனில் விக்ரம் இன்றுடன் சினிமாவில் காலடி எடுத்து வைத்து 26 வருடங்கள் ஆகின்றது....

Read More

முருகதாஸ் படத்தில் நடிக்க இந்திய சினிமாவின் முன்னணி ஹீரோக்கள் அனைவரும் வெயிட்டிங். இந்நிலையில் இவர் தற்போது மகேஷ் பாபு நடிக்கும் படத்தை இயக...

முருகதாஸ் படத்தில் நடிக்க இந்திய சினிமாவின் முன்னணி ஹீரோக்கள் அனைவரும் வெயிட்டிங். இந்நிலையில் இவர் தற்போது மகேஷ் பாபு நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். இப்படம் முடிந்து அடுத்து அஜித்துடன் கூட்டணி வைப்பார் என கூறப்பட்ட நிலையில், சமீபத்தில் வந்த் அசெய்தி ஒன்று அனைவரையும் ஆச்சரியத்தில் உள்ளது. முருகதாஸ் நீண்ட வருடங்களுக்கு முன்பே ஒரு இளம் ஹீரோவிற்காக ஒரு கதையை ரெடி செய்து வைத்தாராம். அதில் ஜெய் நடிக்கப்போவதாக கூட ஒரு செய்தி வந்தது, தற்போது அந்த கதைக்கு சிம்புவை முருகதாஸ் டிக் செய்துள்ளதாக கூறப்படுகின்றது. ...

Read More

Search This Blog

Blog Archive

About