November 23, 2016
எம்.ஜி.ஆர் அறிவிப்பும் இசைமேதை பாலமுரளி கிருஷ்ணா சந்தித்த சர்ச்சையும்..!
November 23, 2016 இன்றைக்கு சர்ச்சையானாலும் எந்த சலசலப்பானாலும் அது சினிமா சினிமா சினிமா...தமிழுலகின் சகல உணர்ச்சிகளும் சினிமாவாகவே மக்களுக்கு உள்ளது. பல பத்து ஆண்டுகளுக்கு முன் அந்த இடத்தை இசையுலகம் பற்றியிருந்தது. ஆம் இசையுலகில் ஆரோக்கியமான சர்ச்சைகளும் சலசலப்புகளும் எழுந்து இசையுலகத்துக்கு அது புது ரத்தம் பாய்ச்சிய நாட்கள் அவை. இந்த சர்ச்சை வளையத்துக்குள் சிக்காத இசைமேதைகள் கிடையாது. எரியும் நெருப்பில் சுப்புடு என்ற மனிதர் வேறு எண்ணெய் ஊற்றிக்கொண்டிருந்தது தனிக்கதை. 70 களில் கர்நாடக இசையுலகில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியடைந்துவந்த இளைஞரான மறைந்த பாலமுரளி கிருஷ்ணாவும் 70 களின் இறுதியில் அப்படி ஓர் சர்ச்சைக்குள் சிக்கினார். கிட்டதட்ட ஒரு வருடங்கள் அது இசையுலகில் கொழுந்துவிட்டு எரிந்தது அந்த விவகாரம். பரபரப்பான அந்த சர்ச்சைக்கு வித்திட்டது அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆரின் அறிவிப்பு ஆம் 1978-ம் ஆண்டு அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர் ஓர் அறிவிப்பை வெளியிட்டார். 'பாரம்பரியம் குன்றாமல் புதிய தமிழ்ப்பாடல்கள் மற்றும் தமிழ்க்...