­
06/11/17 - !...Payanam...!

 '2.0' திரைப்படத்தின் புகைப்படங்கள் இணையத்தில் கசிந்ததால் படக்குழு அதிர்ச்சியில் உறைந்துள்ளது. நடிகர் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய...

 '2.0' திரைப்படத்தின் புகைப்படங்கள் இணையத்தில் கசிந்ததால் படக்குழு அதிர்ச்சியில் உறைந்துள்ளது. நடிகர் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய் நடிப்பில் கடந்த 2010-ல் எந்திரன் திரைப்படம் வெளியானது. இதன் 2-வது பாகமாக '2.0' என்ற படத்தை இயக்குநர் ஷங்கர் இயக்கி வருகிறார். லைக்கா தயாரிப்பில் உருவாகி வரும் இத்திரைப்படத்தை தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி மற்றும் ஜப்பான், கொரியா உள்பட 15 மொழியில் திரையிட முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்து வரும் இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். சுமார் ரூ.400 கோடி பொருட்செலவில் லைக்கா நிறுவனம் தயாரித்து வருகிறது. சென்னை, டெல்லி உள்ளிட்ட இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. கிராபிக்ஸ் காட்சிகளின் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. ரஜினி - ஏமி ஜாக்சன் - அக்‌ஷய்குமார் மூவரும் பங்குபெறும் பிரதான சண்டைக்காட்சி ஒன்றையும் படக்குழு படமாக்கியுள்ளது. சண்டைக்காட்சி படப்பிடிப்பு முடிவடைந்ததைத் தொடர்ந்து, பிரதான காட்சிகளின் அனைத்தும்...

Read More

பிரபலங்கள் மற்றும் சாதனையாளர்கள் வாழ்க்கையை சினிமா படமாக்கும் போக்கு திரையுலகில் அதிகரித்து வருகிறது. அதுபோன்ற படங்கள் நன்றாக ஓடி வசூலும் க...

பிரபலங்கள் மற்றும் சாதனையாளர்கள் வாழ்க்கையை சினிமா படமாக்கும் போக்கு திரையுலகில் அதிகரித்து வருகிறது. அதுபோன்ற படங்கள் நன்றாக ஓடி வசூலும் குவிக்கின்றன.டாக்டர் அம்பேத்கர், கிரிக்கெட் வீரர்கள் அசாருதீன், டோனி, சச்சின் தெண்டுல்கர், குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம், சந்தன கடத்தல் வீரப்பன், நடிகை சில்க் சுமிதா ஆகியோர் வாழ்க்கை சினிமா படமாக வந்துள்ளது. தற்போது முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வாழ்க்கையும் சினிமா படமாக தயாராகிறது. மன்மோகன் சிங் இந்தியாவின் 14-வது பிரதமராக பணியாற்றினார். 1991 முதல் 1996 வரை நரசிம்மராவ் ஆட்சியில் நிதி மந்திரியாக இருந்தார். சிறந்த பொருளாதார வல்லுனராகவும் திகழ்ந்தார். மத்திய ரிசர்வ் வங்கியின் தலைவராகவும் செயல்பட்டார். இந்தியாவில் தாராள மயமாக்கல் கொள்கையின் தொடக்கத்தில் இவர் பங்கு வகித்தது குறிப்பிடத்தக்கது. மன்மோகன் சிங் வாழ்க்கையை மையமாக வைத்து அவரிடம் ஆலோசகராக பணியாற்றிய சஞ்சய்பாரு ‘த ஆக்சிடன்சியல் பிரைம் மினிஸ்டர்’ என்ற புத்தகத்தை எழுதி வெளியிட்டார். அந்த...

Read More

பெங்களூருவை சேர்ந்த சாஹிதி பிங்காலி அங்குள்ள இன்வென்ட்சர் அகாடெமியில் பியூசி 2-ம் ஆண்டு (12-ம் வகுப்பு) படித்து வருகிறார். அறிவியல் துறையில...

பெங்களூருவை சேர்ந்த சாஹிதி பிங்காலி அங்குள்ள இன்வென்ட்சர் அகாடெமியில் பியூசி 2-ம் ஆண்டு (12-ம் வகுப்பு) படித்து வருகிறார். அறிவியல் துறையில் ஆர்வம் மிகுந்த சாஹிதி, தேசிய, சர்வதேச அளவிலான பல்வேறு போட்டிகளில் பங்கேற்று விருதுகளை குவித்துள்ளார். சமீபத்தில் அமெரிக்காவின் மாசசூசட்ஸ் லிங்கன் ஆய்வகம் நடத்திய சர்வதேச அறிவியல் மற்றும் பொறியியல் கண்டுபிடிப்பு போட்டியில் பங்கேற்றார். உலகம் முழுவதும் உள்ள பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் மிகப்பெரும் அறிவியல் போட்டியான இதில், சாஹிதி சமர்ப்பித்த கட்டுரை ஆய்வாளர்களால் முதல் மூன்று இடங்களுக்குள் தேர்வு செய்யப் பட்டுள்ளது. உலகமெங்கும் மாசடைந்து வரும் நீர் நிலைகளை தூய்மையாக பாதுகாப்பது தொடர்பான நவீன முறையை சாஹிதி கண்டறித்துள்ளார். இதன் மூலம் ஆறு, ஏரி, குளங்களில் உள்ள நீரின் தூய்மை தரத்தை செல்போன் ஆப் மூலமாக கண்காணிக்க முடியும். பெங்களூருவில் மாசடைந் துள்ள வர்தூர் ஏரியை சோதித்து, அதைத் தூய்மைப்படுத்துவது தொடர்பாக சாஹிதி ஆய்வு செய்துள்ளார்....

Read More

ஜெயிச்சவன் அப்பளத்தை உடைச்சாலும், அதற்கும் ஒரு கலிங்கத்துபரணியை பாடி சந்தோஷப்படும் உலகம்! இப்படி நின்றால்.. நடந்தால்… சிரித்தால்… முறைத்தால...

<
ஜெயிச்சவன் அப்பளத்தை உடைச்சாலும், அதற்கும் ஒரு கலிங்கத்துபரணியை பாடி சந்தோஷப்படும் உலகம்! இப்படி நின்றால்.. நடந்தால்… சிரித்தால்… முறைத்தால் கூட அதற்கும் ஒரு அர்த்தம் வைத்து ஆனந்தப்படும் வரிசையில் தம்பி ராமய்யா மகன் உமாபதியும் இணைந்து கொள்வதில் தப்பேயில்லை. ஏன்? வியப்பதற்கு எதுக்குய்யா தயக்கம்? உமாபதி நடிப்பில் ‘அதாகப்பட்டது மகாஜனங்களே’ என்ற படம் உருவாகி வருகிறது. பேசிக்கலாகவே நன்றாக டான்ஸ் ஆடும் உமாபதியிடம் ஒரே ஒரு குறையை கண்டுபிடித்தாராம் டான்ஸ் மாஸ்டர். “டான்ஸ் ஆடுறது விஷயமில்ல. அப்படி ஆடும்போது ஆடியன்சோட கனெக்ட் ஆகனும்ப்பா” என்றாராம். அதெப்படி கனெக்ட் ஆகறது என்கிற விஷயம் மட்டும் உமாபதிக்கு புரியவேயில்லை. அப்போதுதான் டி.வி யில் சிவகார்த்திகேயனின் ஊதாக்கலரு ரிப்பன் பாடல் ஓடிக் கொண்டிருந்தது. உமாபதியுடன் நான்கே வயது நிரம்பிய அவரது சகோதரி மகளும் பாடலை ரசித்துக் கொண்டிருந்தாளாம். ஒரு வரியில் சிவகார்த்திகேயன் ஏதோவொரு சேஷ்டை செய்ய…. அப்படியே வெட்கத்துடன் வீட்டுக்குள் ஓடினாளாம் அந்த...

Read More

கத்தி பிடித்தவனுக்கு காதல் வந்தால் என்ன நடக்கும் என்பதைச் சொல்கிறது இந்த சத்ரியன் ரிட்டர்ன்ஸ்.  சத்ரியன் திருச்சியையே ஆள நினைக்கும் இ...

கத்தி பிடித்தவனுக்கு காதல் வந்தால் என்ன நடக்கும் என்பதைச் சொல்கிறது இந்த சத்ரியன் ரிட்டர்ன்ஸ்.  சத்ரியன் திருச்சியையே ஆள நினைக்கும் இரண்டு நண்பர்கள் விக்ரம் பிரபு மற்றும் கதிர். இருவரும் திருச்சியைக் கலக்கும் வெவ்வேறு தாதாக்களிடம் சேர்கிறார்கள். அதில் விக்ரம் பிரபு, சமுத்திரத்திடம் (சரத்) வேலைக்கு சேர, கதிர் இவர்களின் எதிராளியான மணப்பாறை சங்கரிடம் (அருள் தாஸ்) வேலைக்கு சேர்கிறார். அமைச்சர் சொல்லியதன் பேரில் அருள்தாஸ், சரத்தைக் கொன்றுவிட திருச்சி அருள்தாஸ் கைக்கு செல்கிறது. இதற்கிடையில் சரத்தின் மகள் மஞ்சிமா மோகனுக்கு விக்ரம் பிரபு காவலனாக செல்ல நேரிடுகிறது. வழக்கம் போல ஹீரோவுக்கும் ஹீரோயினுக்கு காதல் வர, அதனால் பிரச்னை துவங்குகிறது. இந்த காதல் சேர்கிறதா, விக்ரம் பிரபுவை கொல்ல நினைக்கும் எதிரிகளிடமிருந்து விக்ரம் பிரபு தப்பித்தாரா? இல்லையா? என்பதுதான் சத்ரியன் சொல்லும் கதை. வழக்கமாக மதுரையில் ஒரு கேங்ஸ்டர் கூட்டம் என சொல்லும் கதையைக் கொஞ்சம் மாற்றி...

Read More

உயிரோடு புதைக்கப்பட்ட ஒரு பெண், 1,000 ஆண்டுகளுக்குப் பிறகு மம்மியாகச் செய்யும் அட்டகாசங்களே `தி மம்மி 2017'. `தி மம்மி' என்ற போஸ்...

உயிரோடு புதைக்கப்பட்ட ஒரு பெண், 1,000 ஆண்டுகளுக்குப் பிறகு மம்மியாகச் செய்யும் அட்டகாசங்களே `தி மம்மி 2017'. `தி மம்மி' என்ற போஸ்டரைப் பார்த்ததும், அந்தத் திகில் கிளப்பும் இசையும் பாலைவனக் காட்சிகளும், ப்ரெண்டன் ஃப்ரேசர், ரேச்சல் வெய்ஸ், ஹமுனாபுத்ராவ் செல்வதும், அங்கு இருக்கும் மம்மி தற்செயலாக எழுவதும் என திகில் காட்சிகள்தான் நினைவு வரும். அதற்குப் பிறகு `தி மம்மி ரிட்டன்ஸ்', `தி மம்மி: டாம்ப் ஆஃப் தி டிராகன் எம்பரர்' எனப் பல மம்மிகள் எழுப்பப்பட்டன. 17 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒரு மம்மி படம். அதுவும் ஆக்‌ஷன் ஹீரோ டாம் க்ரூஸ், ரஸ்ஸல் க்ரோவ் எல்லாம் நடிக்கிறார்கள் என்றதும், நடிகர்களுடன் புது மம்மியின் எதிர்பார்ப்பும் கூடியது. எப்படி இருக்கிறது `தி மம்மி (2017)'? தி மம்மி தன் நாட்டுக்கு அரசியாக விரும்பும் இளவரசி அமனெட், வழக்கம்போல் குடும்பத்தில் இருக்கும் அனைவரையும் கொன்று, கடைசியாகக் காதலரையும்...

Read More

வாட்ஸ்அப் பார்க்காமல் ஒரு நாளைக்கூட இன்றைய தலைமுறையினரால் கடத்திவிட முடியாது. அலுவலகப்பணி காரணமாகவும், நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் உரைய...

<
வாட்ஸ்அப் பார்க்காமல் ஒரு நாளைக்கூட இன்றைய தலைமுறையினரால் கடத்திவிட முடியாது. அலுவலகப்பணி காரணமாகவும், நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் உரையாடவும் வாட்ஸ்அப் தான் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. உலகம் முழுவதும் சுமார் 120 கோடிப்பேர் வாட்ஸ்அப் பயன்படுத்துகின்றனர். இந்தியாவில் மட்டும் சுமார் 20 கோடிப்பேர் வாட்ஸ்அப் பயன்படுத்துகின்றனர். வாட்ஸ்அப் - புதிய வசதிகள் வாட்ஸ்அப் புதிய வசதிகளை அறிமுகப்படுத்துவதற்கு முன், டெஸ்ட்டர்களுக்கான பீட்டா வெர்ஷனில் அறிமுகப்படுத்தி சோதிப்பது வழக்கம். அதன்பின் தான் புதிய வசதிகள் அனைத்தும் அனைவருக்கும் அறிமுகப்படுத்தப்படும். சமீபத்தில் வெளியான வாட்ஸ்அப் பீட்டா வெர்ஷனில் (Beta Version - 2.17.210), அசத்தலான சில புதிய வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இவை விரைவில் அனைவருக்கும் அறிமுகப்படுத்தப்படலாம். மெஸேஜை திரும்பப்பெறலாம் : வாட்ஸ்அப்பில் தவறுதலாக ஒரு மெஸேஜை அனுப்பிவிட்டு, அதை நீக்கவோ அல்லது திரும்பப்பெறவோ முடியாமல் சிரமப்பட்டிருப்போம். மெஸேஜை டெலீட் செய்தால் அனுப்பியவரின் சாட்டில் மட்டுமே அது நீக்கப்படும். ஆனால், ரிசீவர் மொபைலில் அந்த...

Read More

இதய நோய், மூட்டுவலி எனப் பெரிய பெரிய நலக் குறைபாடுகளுக்குக்கூட மருந்து, மாத்திரை சாப்பிட்டால் வலிக்கு நிவாரணம் கிடைத்துவிடும். ஆனால், இந்த ...

<
இதய நோய், மூட்டுவலி எனப் பெரிய பெரிய நலக் குறைபாடுகளுக்குக்கூட மருந்து, மாத்திரை சாப்பிட்டால் வலிக்கு நிவாரணம் கிடைத்துவிடும். ஆனால், இந்த சளியும் ஜலதோஷமும் இருக்கிறதே... அது வந்துவிட்டால், அதற்காக மாத்திரை சாப்பிட்டாலும்கூட ஒரு வாரம் பாடாய்ப் படுத்தி எடுத்துவிட்டுத்தான் நம்மைவிட்டு அகலும். சளித் தொந்தரவு வந்துவிட்டால், முழுமையாக வேலையில் கவனம் செலுத்தவோ, நிம்மதியாகத் தூங்கவோகூட முடியாது. ஆகவேதான் சளி என்றாலே பலருக்கும் அழற்சி, அருவருப்பு ஏற்படுவது இயல்பு. சாதாரணமானவர்களுக்கே இப்படியென்றால், சைனஸ், தூசி மற்றும் நுரையீரல் அழற்சி உள்ளவர்களின் நிலையைச் சொல்லித் தெரியவேண்டியதில்லை. குறிப்பாக சைனஸ், நுரையீரல் பிரச்னை உள்ளவர்களுக்கு கோடை, குளிர், மழைக்காலம் என எந்தப் பருவகாலமும் விதிவிலக்கு இல்லை. ஜலதோஷம் இது ஒருபக்கம் இருக்க, புகைப்பழக்கம், நகரமயமாக்கலால் காடுகள் அழிப்பு, வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு, தொழிற்சாலைகள் வெளியிடும் புகை போன்ற காரணங்களால் சுற்றுச்சூழல் பாதிப்பு அதிகரித்துவருகிறது. இதனால் நுரையீரல் பிரச்னைகள் ஏற்படும் ஆயுர்வேத மருத்துவர்...

Read More

தமிழ் சினிமாவின் மயில் ஸ்ரீதேவி. இவரது படங்கள் ஒவ்வொன்றும் இப்போது உள்ள இளம் ரசிகர்களாலும் வரவேற்கப்படுபவை. அடுத்த மாதத்தோடு சினிமாவில் ...

தமிழ் சினிமாவின் மயில் ஸ்ரீதேவி. இவரது படங்கள் ஒவ்வொன்றும் இப்போது உள்ள இளம் ரசிகர்களாலும் வரவேற்கப்படுபவை. அடுத்த மாதத்தோடு சினிமாவில் 50 வருடத்தை தொடும் ஸ்ரீதேவிக்கு இப்போதே பல வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது. தற்போது இவரது நடிப்பில் MOM என்ற படம் வெளியாக இருக்கிறது. இப்படத்தை தயாரித்திருக்கும் ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் பேசும்போது, ஸ்ரீ 50 வருடத்தை எட்டியுள்ளார். 1967ல் நான்கு வயதில் துணைவன் என்ற படம் மூலம் நடிக்க ஆரம்பித்த அவர் 2017ல் MOM என்ற படம் மூலம் 300வது படத்தில் நடித்து முடித்துவிட்டார். ஸ்ரீயின் சாதனையை பாராட்டி ஒரு பெரிய விழா நடைபெற இருக்கிறது. அவருடன் நடித்த ரஜினி, கமல்ஹாசன் போன்ற நடிகர்களுக்கு இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்திருப்பதாக கூறியுள்ளார். ...

Read More

ரஜினி திரைப்பயணத்தில் அவராலும் சரி, ரசிகர்களாலும் சரி மறக்க முடியாத ஒரு படம் பாட்ஷா. ரஜினி நடிப்பு, இசை, மாஸ் திரைக்கதை என படம் அசத்தலாக இர...

ரஜினி திரைப்பயணத்தில் அவராலும் சரி, ரசிகர்களாலும் சரி மறக்க முடியாத ஒரு படம் பாட்ஷா. ரஜினி நடிப்பு, இசை, மாஸ் திரைக்கதை என படம் அசத்தலாக இருக்கும். இந்த படத்தில் மும்பையில் வினாயகர் சதுர்த்தி பின்னணியில் ஒரு மாஸ் காட்சி படமாக்கப்பட்டிருக்கும். அதேபோல் காலா படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பில் மும்பையில் வினாயகர் சதுர்த்தி பின்னணியில் படத்திற்கு மிகவும் முக்கியமான ஒரு காட்சி படமாக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வந்துள்ளது. பா. ரஞ்சித் இயக்கும் இப்படத்தை தனுஷ் தயாரிக்க, ஹுமா குரேஷி, நானா படேகர், சமுத்திரக்கனி, சுகன்யா என பலர் நடிக்கின்றனர் ...

Read More

காலா படத்தில் வரும் ரஜினியின் கெட்டப்பையே கூட சர்வ சாதாரணமாக கசிய விட்டுவிட்டார் அப்படத்தின் இயக்குனர் பா.ரஞ்சித்! இந்தியாவே அதிசயப்படுகிற ...

<
காலா படத்தில் வரும் ரஜினியின் கெட்டப்பையே கூட சர்வ சாதாரணமாக கசிய விட்டுவிட்டார் அப்படத்தின் இயக்குனர் பா.ரஞ்சித்! இந்தியாவே அதிசயப்படுகிற ரஜினியின் படமும், அதில் வரும் காலாவின் கெட்டப்பும் இவ்வளவு சிம்பிளாக இருக்க… ஜி.வி.பிரகாஷின் கெட்டப் வெளியே தெரியக் கூடாது என்று டைரக்டர் பாலா மூடி மூடி அனுப்பினால், வாயை மூடாமல் ஒரு வாரத்துக்கு சிரிக்காமல் வேறென்ன செய்வதாம்? மனம் போல சிரிச்சுருங்க மக்களே… ‘செம’ என்ற படத்தில் ஹீரோவாக நடிக்கும் ஜி.வி.பிரகாஷ், அந்தப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவுக்கு தனது தலையை மறைத்து ஏதோ ஒரு துணியை கட்டிக் கொண்டு வந்திருந்தார். (சாம்பிராணி பாய் போல செம கெட்டப்புய்யா அது!?) சரி அதை விடுங்க. இந்த படத்தை பசங்க பாண்டிராஜ் தயாரிக்க, அவரது உதவியாளர் வள்ளிகாந்த் இயக்கியிருக்கிறார். ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடி அர்த்தனா. விழாவில் டைரக்டர் பார்த்திபன் பேச்சுதான் வழக்கம் போல அசத்தல். “ஜி.வி என்றால் ‘கேர்ள்ஸ் வியூ’. பெண்களின்...

Read More

Search This Blog

Blog Archive

About