November 14, 2017
அடிக்கடி தண்ணீர் குடிக்கலாமா?
November 14, 2017ஆரோக்கியமாக உள்ளவர்கள் போதிய அளவு தண்ணீர் குடிக்காவிட்டால் உடலில் இருந்து கழிவுகள் முழுமையாக வெளியேறாது. இதனால் சிறுநீர் வெளியேறும்போது எரி...
ஆரோக்கியமாக உள்ளவர்கள் போதிய அளவு தண்ணீர் குடிக்காவிட்டால் உடலில் இருந்து கழிவுகள் முழுமையாக வெளியேறாது. இதனால் சிறுநீர் வெளியேறும்போது எரிச்சல் ஏற்படும். ஆரோக்கியமாக உள்ளவர்களுக்கு தினமும் இரண்டு லிட்டர் வரை சிறுநீர் வெளியேறினால் இயல்பு நிலை. இதயநோய், சிறுநீரக நோய் பாதிப்பு உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி குடிநீரின் அளவை நிர்ணயித்துக் கொள்வது அவசியம். ஏனெனில் கூடுதல் தண்ணீரை வெளியேற்ற இதயம் அதிகமாக ரத்தத்தை பம்ப் செய்ய வேண்டியிருக்கும்.
ஒருநாளைக்கு மூன்று லிட்டர் தண்ணீர் குடித்தால் போதுமானது. அதேபோல் சிறுநீர் அடிக்கடி வெளியேறக்கூடாது.
ஆரோக்கியமாக உள்ளவர்கள் 4 முதல் 6 மணி நேரத்திற்கு ஒருமுறை தான் சிறுநீர் கழிக்க வேண்டும். இதற்கு குறைந்த நேரத்தில் சிறுநீர் கழித்தால் உடனே மருத்துவரிடம் ஆலோசனை செய்யவும்.
சிறுநீரகத்தில் பிரச்சினை, மது குடித்தல், புகைப்பழக்கம், சிறுநீர் தொற்று, முதுமை என அடிக்கடி சிறுநீர் கழிப்பதற்கு பல காரணங்கள் உண்டு.
முதுமையில் புராஸ்டேட்(விந்து) சுரப்பி வீக்கம் காரணமாகவும் அடிக்கடி சிறுநீர் வெளியேறும். ஆனால் குளுகுளு அறையில் இருப்பது, பரபரப்பாக செயல்படுவது, பதட்டத்தில் இருக்கும் நேரங்களில் சிறுநீர் கழிக்கும் உணர்வு அடிக்கடி ஏற்பட்டால் அதனால் எந்த பிரச்சினையும் இல்லை!