July 04, 2019
திருவள்ளூவர் சிலையை காண முடியாமல் சுற்றுலா பயணிகள் தவிப்பு- காரணம் இதுதான்..!
July 04, 2019கன்னியாகுமரியில் கடல்நீர் மட்டம் குறைந்துவிட்டதால் திருவள்ளூவர் சிலை மற்றும் விவேகானந்தர் மண்டபத்திற்கு செல்லும் படகு சேவை நிறுத்தப்பட்டுள்...
கன்னியாகுமரியில் கடல்நீர் மட்டம் குறைந்துவிட்டதால் திருவள்ளூவர் சிலை மற்றும் விவேகானந்தர் மண்டபத்திற்கு செல்லும் படகு சேவை நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
கன்னியாகுமரியில் கடல் நீர்மட்டம் குறைந்துள்ளதால் விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலைக்கு படகு சேவை நிறுத்தப்பட்டுள்ளது.
முக்கிய சுற்றுலாத் தளங்களில் ஒன்றான கன்னியாகுமரியில் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் மூலம் விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு சுற்றுலாப் படகுகள் இயக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கன்னியாகுமரி கடலில் இன்று கடல் நீர்மட்டம் குறைந்து காணப்படுகிறது. இதனால் தற்காலிகமாக சுற்றுலா படகு சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. கடல் நீர் மட்டம் பழையநிலைக்கு வந்ததும் படகு சேவை தொடங்கப்படும் என பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.
இந்த தகவல் சுற்றுலாப் பயணிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. திருவள்ளூர் சிலைக்கு போக முடியாமல் சுற்றுலாப் பயணிகள் வேதனை தெரிவித்தனர். மேலும், திருவள்ளூர் சிலை பின்னணியில் அவர்கள் செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.