July 26, 2019
ஏ1 படம் எதிர்பார்ப்பு இல்லாமல் போனால் இரண்டு மணி நேரம் உங்களை சிரிக்கவைக்கும்.
July 26, 2019<
காமெடியில் வடிவேலுவுக்கு அடுத்து அவரது இடத்திற்கு வந்தவர் தான் சந்தானம். ஆனால் இதற்குபிறகு ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என கூறி நடித்து சில படங்களில் வெற்றியும் கண்டுள்ளார்.ஏ1 (ஆக்கியூஸ்டு நம்பர் 1) அவருக்கு மேலும் ஒரு வெற்றியை பெற்றுத்தருமா? வாருங்கள் பார்ப்போம்.கதை:சில லோக்கல் ரௌடிகளிடம் சிக்கிக்கொண்ட ஹீரோயினை சண்டைபோட்டு காப்பாற்றுகிறார் சந்தானம். தமிழ் சினிமா வழக்கப்படி உடனே ஹீரோயினுக்கு ஹீரோ மீது காதல். அடுத்த நிமிடமே கட்டிப்பிடித்து லிப் டு லிப் கிஸ் செய்துவிடுகிறார்.லோக்கல் பையனான சந்தானம் அன்று நெற்றியில் நாமம் போட்டிருப்பார். அதனால் அவர் அய்யங்காராக தான் இருப்பார் என நினைத்து காதலில் விழுந்துவிடுகிறார் அவர். ஆனால் அடுத்த நாளே சந்தானம் யார் என அறிந்து பிரேக் அப் செய்கிறார்.பின்னர் ஹீரோயினின் அப்பா ரோட்டில் உயிருக்கு போராடும் சமயத்தில் அவருக்கு உதவுகிறார் சந்தானம். அதை பார்த்து ஹீரோயினுக்கு மீண்டும் காதல் மலர்கிறது. அதை நம்பி அவர் வீட்டிற்கு...