November 26, 2017
சிங்கப்பூர் மருத்துவமனையில் நடிகர் விஜயகாந்த் அட்மிட்
November 26, 2017 பல மாதங்கள் முன்பு நடிகர் விஜயகாந்த் உடல்நிலை மோசமானதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். கிட்டத்தட்ட ஒரு மாதகால சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பினார்.இந்நிலையில் விஜயகாந்த் இன்னும் ஒரு வாரத்தில் சிங்கப்பூரில் உள்ள ஒரு மருத்துவமனையில் இன்னும் ஒரு வாரத்திற்குள் அட்மிட் ஆகவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது."விஜயகாந்த் ஆண்டுக்கு ஒருமுறை மருத்துவ பரிசோதனைக்காக செல்வது வழக்கம். அதேப்போல இந்த ஆண்டும் மருத்துவ சிகிச்சைக்காக சிங்கப்பூரிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு ஒருவாரத்துக்குள் செல்லவுள்ளார்" என தேமுதிக வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.இந்நிலையில் நடிகர் சங்க தலைவர் நாசர் மற்றும் நிர்வாகிகள் இன்று விஜயகாந்தை நேரில் சந்தித்துள்ளனர். ...