­
03/12/18 - !...Payanam...!

குரு பாபாவிடம் ஆசி பெறுவதற்காக ஆன்மீக பூமியான இமயமலைக்குச் சென்றுள்ள நடிகர் ரஜினிகாந்த் அங்கு பல்வேறு இடங்களில் சாமி தரிசனம் செய்ததோடு, குத...

குரு பாபாவிடம் ஆசி பெறுவதற்காக ஆன்மீக பூமியான இமயமலைக்குச் சென்றுள்ள நடிகர் ரஜினிகாந்த் அங்கு பல்வேறு இடங்களில் சாமி தரிசனம் செய்ததோடு, குதிரை சவாரி மேற்கொண்டும் மகிழ்ந்துள்ளார்.சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது படங்களின் ரீலீசுக்கு முன்பு எப்போதும் இமயமலைக்குச் சென்று தனது குருவான பாபாவிடம் ஆசிபெறுவது வழக்கம். இந்நிலையில் அடுத்த மாதம் ரஜினி நடித்த காலா படம் ரிலீசாக உள்ள நிலையில் வழக்கம்போல் ரஜினி இமயமலைக்கு ஆன்மீக பயணம் சென்றுள்ளார்.ஆன்மீக பயணம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமது இமயமலைப் பயணம் அன்றாட வாழ்க்கையைக் காட்டிலும் மாறுபட்டு இருப்பதாக தெரிவித்தார். மேலும் தான் யாத்ரீகனாக இமயமலை வந்துள்ளதால், அரசியல் பற்றி இங்கு பேச விரும்பவில்லை என்றும் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.ரஜினிகாந்த் தனது ஆன்மீக அரசியல் அறிவிப்பை வெளியிட்ட பிறகு முதன் முறையாக தற்போது இமயமலைக்கு சென்றுள்ளார். அங்கு 10 முதல் 15 நாட்கள் தங்க ரஜினிகாந்த் திட்டமிட்டுள்ளார். இமயமலைக்கு...

Read More

ஷங்கர் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினி மற்றும் அக்ஷய் நடிக்கும் 2.0 படத்தின் போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகள் தற்போது நடந்துவருகிறது. இந்நிலையில் இ...

<
ஷங்கர் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினி மற்றும் அக்ஷய் நடிக்கும் 2.0 படத்தின் போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகள் தற்போது நடந்துவருகிறது.இந்நிலையில் இந்த படத்தின் VFX காட்சிகளுக்காக பணியாற்றிவந்த ஒரு பிரபல அமெரிக்க நிறுவனம் தற்போது திவாலாகியுள்ளது. அதனால் தற்போது வேறொரு புதிய கம்பெனிக்கு அந்த பணிகளை ஒப்படைக்கலாமா என படக்குழு பரிசீலித்து வருகிறதாம்.அதனால் ஆகஸ்ட் 15ம் தேதி வெளியாகும் என எதிரிபார்க்கப்பட்ட 2.0 மீண்டும் தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்த வருடம் தீபாவளி அல்லது அடுத்த வருடம் பொங்கலுக்கு படம் வெளியாகலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. ...

Read More

‘ஊர்ல இருந்தா நம்மகிட்டயும் பத்து லட்சம் கொடுக்கச் சொல்லி படுத்துவாங்களோ?’ இப்படியொரு வாசகத்தை எழுதி, பக்கத்திலேயே ரஜினி படத்தையும் ஒட்டி க...

<
‘ஊர்ல இருந்தா நம்மகிட்டயும் பத்து லட்சம் கொடுக்கச் சொல்லி படுத்துவாங்களோ?’ இப்படியொரு வாசகத்தை எழுதி, பக்கத்திலேயே ரஜினி படத்தையும் ஒட்டி கலாய்த்துக் கொண்டிருக்கிறார்கள் வலைதள வம்பர்கள். திருச்சியில் கர்பிணி உஷா டிராபிக் எஸ்.ஐ யின் அநியாய செயலால் உயிரிழந்தபின், மக்கள் நீதி மையம் சார்பில் 10 லட்சம் வழங்குவதாக அறிவித்தார் கமல். இதையடுத்துதான் மேற்படி மீம்ஸ்.அதை நிரூபிப்பது போலவே ஏர்போர்ட்டில் ரஜினியின் செயலும் இருந்தது. இமயமலை கிளம்பியவரை இடை மறித்து, ஆன்மீக பயணம் பற்றி கேள்வி கேட்ட மீடியாவுக்கு சிரித்த முகத்துடன் பதிலளித்தார் ரஜினி. நடுவில் ஒரு நிருபர், இந்த வாரத்தில் இரண்டு பெண்கள் கொடூரமான முறையில் இறந்திருக்காங்க. அது பற்றி? என்று கேள்வி எழுப்ப, சட்டென சுதாரித்துக் கொண்ட ரஜினி, இரண்டு கைகளையும் எடுத்து கும்பிட்டுவிட்டு எடுத்தார் பயணம்… (ஓட்டம் என்று எழுத நமக்கே சங்கடமாக இருக்கிறது)கட்… சினிமா ஸ்டிரைக் நடக்கிறதல்லவா? இந்த ஸ்டிரைக் ஏப்ரல் மே...

Read More

நமது உடலுக்கு தேவையான குரோமியம் தாது பற்றி நிறைய பேருக்கு தெரிவதில்லை. ஆனால் நம் உடலின் செயல்பாடுகளுக்கு குரோமியமும் மிகவும் முக்கியமான தாத...

<
நமது உடலுக்கு தேவையான குரோமியம் தாது பற்றி நிறைய பேருக்கு தெரிவதில்லை. ஆனால் நம் உடலின் செயல்பாடுகளுக்கு குரோமியமும் மிகவும் முக்கியமான தாது ஆகும். குரோமியம் தான் நமது உடலின் இன்சுலின் சுரப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதன் மூலம் தான் நமது இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்க முடிகிறது. இன்சுலின் சுரப்பு சரியாக இல்லாத காரணத்தினால் தான் நமக்கு டயாபெட்டீஸ் வரும் அபாயமும் ஏற்படுகிறது.குரோமியத்தை எங்கு போய் தேடுவது என்று குழம்பாதீர்கள். இயற்கையாகவே நாம் உண்ணும் உணவிலேயே குரோமியம் மிக அதிக அளவில் காணப்படுகிறது. ஒரு நாளைக்கு 19-50 வயதுடைய ஆணுக்கு 35 மைக்ரோகிராம் வரையிலும் மற்றும் பெண்களுக்கு 25 மைக்ரோகிராம் வரையிலும் குரோமியம் தேவைப்படுகிறது.இந்த தாதுவின் பற்றாக்குறையால் சோர்வு, வலுவற்ற எலும்புகள், ஆரோக்கியமற்ற சருமம், கண் பார்வை குறைபாடுகள், நினைவாற்றல் பாதிப்பு போன்றவை ஏற்படும். எனவே குரோமியம் அடங்கிய உணவை எடுத்துக் கொள்வது...

Read More

தற்போது இருக்கும் தமிழ்நட்டு அரசியல் சூழ்நிலையில் வெற்றிடம் இருக்கிறது என்று ரஜினி, கமல் அரசியல் களத்தில் குதித்துள்ளனர். இதன் ஒரு படிமேல் ...

<
தற்போது இருக்கும் தமிழ்நட்டு அரசியல் சூழ்நிலையில் வெற்றிடம் இருக்கிறது என்று ரஜினி, கமல் அரசியல் களத்தில் குதித்துள்ளனர்.இதன் ஒரு படிமேல் சென்று கமல் கட்சி பெயரையும் அறிவித்து தமிழ்நாட்டில் சில இடங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். ஆனால் ரஜினியோ அரசியலுக்கான வருகைக்கு தனது ரசிகர்கள் என்கிற பின்பலத்தை காவலர்களாக மாற்றிவரும் பணியில் இருக்கிறார்.அதுமட்டுமில்லாமல் அரசியல் களம் என்று வந்துவிட்டால் மீடியாக்கள் எழுப்பும் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும். ஆனால் பத்திரிக்கையாளர்கள் காவேரி விவகாரத்தை பற்றி கேள்விகளுக்கு ரஜினி பதில் அளிக்காமல் எஸ்கேப் ஆகிவிடுகிறார்.இதுபற்றி இன்று கமலிடம் பத்திரிகையாளர்கள் கேட்ட போது : அவர் பல விஷயங்களுக்கு பதிலளிக்காமல் சென்றுவிடுகிறார் என்று முதன்முறையாக ரஜினிக்கு எதிராக கருத்து தெரிவித்தார் கமல்.சமீபத்தில் அஷ்வினி, உஷா ராணி மரணம் பற்றிய கேள்விக்கு பதிலளிக்காமலேயே ரஜினி சென்றது பரபரப்பானது. ...

Read More

விஜய் சேதுபதி இன்று பலராலும் எதிர்பார்க்கப்படும் நடிகராகிவிட்டார். அவரின் படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைப்பதுண்டு. பல படங்களில் அவர் தன் தி...

<
விஜய் சேதுபதி இன்று பலராலும் எதிர்பார்க்கப்படும் நடிகராகிவிட்டார். அவரின் படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைப்பதுண்டு. பல படங்களில் அவர் தன் திறமையை காட்டி வருகிறார்.அதிகம் படங்களை கொடுக்கும் நடிகரான இவர் தற்போது தெலுங்கில் சிரஞ்சீவி நடிக்கும் சயீரா நரசிம்ம ரெட்டி படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.இதில் நயன்தாரா சிரஞ்சீவியுடன் ஜோடியாக நடிக்க இப்படத்தை சீனாவில் வெளியிட படக்குழு முடிவு செய்து அதற்காக வேலைகளை செய்து வருகிறது.சீனாவில் வெளியாகும் இந்திய படங்களுக்கு நல்ல வசூல் கிடைத்து வருகிறது. சமீபத்தில் பாகுபலி, டங்கல் போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. ...

Read More

Search This Blog

Blog Archive

About