ரோஜா படத்தில் முதலில் நடிக்கவிருந்தது அரவிந்த்சாமி இல்லை, இந்த நடிகர் தான்
July 02, 2017மணிரத்னம் இயக்கத்தில் அரவிந்த்சாமி நடிப்பில் வெளிவந்து செம்ம ஹிட் அடித்த படம் ரோஜா. இப்படத்தின் மூலம் தான் ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பாளராக அற...
இப்படத்தில் முதலில் நடிக்கவிருந்தது அரவிந்த்சாமி இல்லையாம், பிரபல ஒளிப்பதிவாளர் ராஜிவ் மேனன் தான் மணிரத்னத்தின் சாய்ஸாக இருந்ததாம்.
ஆனால், அவர் எவ்வளவோ சொல்லியும் நடிக்க மறுத்துவிட்டாராம், பிறகு தான் அரவிந்த்சாமி கமிட் ஆகியுள்ளார்.
BiggBoss நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்களுக்கு வார சம்பளம் மட்டும் இவ்வளவா?
July 02, 2017தமிழ்நாட்டில் இருக்கும் தொலைக்காட்சி ரசிகர்களின் ஹாட் டாபிக் BiggBoss நிகழ்ச்சி தான். ஒவ்வொரு நாளும் இந்த நிகழ்ச்சியில் மிகவும் பரபரப்பான ந...
இந்த நிலையில் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் 15 பிரபலங்களின் சம்பள விவரம் ஒன்று சமூக வலைதளங்களில் தீயாக பரவுகிறது. 15 பேரை 3 பிரிவாக பிரித்து சம்பளம் கொடுக்கிறார்களாம்.
நமீதா, ஓவியா, ஸ்ரீ, கணேஷ் வெங்கட்ராம், சக்தி ஆகியோருக்கு வாரம் ரூ. 2.5 முதல் ரூ. 3 லட்சம் வரை சம்பளமாம்.
சினேகன், வையாபுரி, அனுயா, கஞ்சா கருப்பு, ஆர்த்தி, காயத்ரி ரகுராம் ஆகியோருக்கு வாரத்திற்கு ரூ. 1.5 லட்சம் முதல் ரூ. 2 லட்சம் வரை சம்பளம்.
பரணி, ஜுலியானா, ஆரார், ரைசா போன்றோருக்கு ரூ. 50 ஆயிரம் முதல் ரூ. 1 லட்சம் வரை சம்பளம் என கூறப்படுகிறது.
தன்னை கிண்டல் செய்தவர்களுக்கு பிக்பாஸில் கமல் கொடுத்த பதிலடி
July 02, 2017பிக்பாஸ் நிகழ்ச்சி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்க, இதை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகின்றார். இந்த நிகழ்ச்சியில் எலிமினேஷன் தொடங்கிவிட்டது. இ...
இந்நிலையில் இந்த நிகழ்ச்சி ஆரம்பித்த போது கமல் போட்டியாளர்கள் தங்கியிருக்கும் வீட்டை சுற்றி பார்த்தார், அப்போது பாத்ரூம் சென்று அங்கு நன்றாக தண்ணீர் வருகின்றதா என்றும் பார்த்தார்.
இதை பார்த்த பலரும் கமலை கிண்டல் செய்ய, நேற்று நடந்த பிக்பாஸில் கமல் இதற்கு பதிலடி கொடுத்தார்.
அவர் கூறுகையில் ‘எல்லோரும் அதை கிண்டல் செய்யும் விதமாக பேசினார்கள், ஆனால், என்னுடைய ஹீரோவே சிறந்த கழிவறை சுத்தம் செய்பவர் தான்.
அவர் பெயர் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி என’ என கூற, அரங்கமே கைத்தட்டி பாராட்டியது.
அத்தி மரங்களை சீர்படுத்த ஆணையிட்ட ஆதித்யநாத் அரசு!
July 02, 2017உத்தரப்பிரதேசத்தில் அத்தி மரங்களை சகுனத்தடையாகக் கருதி அவற்றை சீர்படுத்த உத்தரவிட்டுள்ளார் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத். உத்தரப்பிரதேச...
உத்தரப்பிரதேசத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை-ஆகஸ்ட் மாதங்களில் கன்வார் யாத்திரை என்ற புனித யாத்திரை சிவ பக்தர்களால் மேற்கொள்ளப்படும். இந்தாண்டு யாத்திரைக்கான முன்னேற்பாடுகளை யோகி ஆதித்யநாத் தலைமையிலான உ.பி அரசு செய்துவருகிறது. முதல்கட்டமாக யாத்திரீகர்கள் செல்லும் வழியெங்கும் சிசிடிவி கேமராக்கள் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் பாதுகாப்பு ஏற்பாடுகளை பல மடங்கு அதிகரிக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில், இந்த யாத்திரையின்போது பின்பற்றப்பட வேண்டிய முறைகள் குறித்து முதல்வர் ஆதித்யநாத் சமீபத்தில் ஒரு அறிக்கை விடுத்தார். இந்த அறிக்கை தான் தற்போது பல சர்ச்சைகளை எழுப்பி வருகிறது. கன்வார் புனித யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்களின் வேண்டுகோளை ஏற்று முதல்வர் ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளார். முதல்வர் ஆதித்யநாத் அறிக்கையில், கன்வார் புனித யாத்திரை மேற்கொள்ளப்படும் வழியெங்கும் அதிகளவில் காணப்படும் அத்தி மரங்களை வெட்ட உத்தரவிடப்படப்பட்டுள்ளது.
’விரதம் இருந்து புனித யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்கள் செல்லும் வழியில் அத்தி மரங்கள் இருப்பது அபசகுணம் என்று பக்தர்கள் கருதுகின்றனர்’ என்று குறிப்பிட்டு ஆதித்யநாத் இந்த உத்தரவை விதித்துள்ளார். மேலும், யாத்திரையின் போது மோசமான வார்த்தைகள் நிறைந்த பாடல்களையும் கேட்கக்கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
ஒரு மரத்தை அபசகுணமாகக் கூறப்படும் கருத்தை அரசு ஆதரித்து இருப்பது மூடநம்பிக்கையின் உச்சகட்டம் என சமூக வலைதளங்களில் பலரும் தங்கள் விமர்சனங்களைப் பதிவு செய்து வருகின்றனர். பொதுநிலையில் இருக்க வேண்டிய அரசு இவ்வாறு மூடநம்பிக்கைகள் சார்ந்து இருப்பது வேதனை அளிக்கிறது என்றும் இயற்கை ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதேவேளையில், முதல்வர் ஆதித்யநாத்துக்கு ஆதரவாகவும் பல கருத்துகள் முன்னிறுத்தப்பட்டு வருகின்றன.
முன்னதாக முதல்வர் யோகி ஆதித்யநாத் அத்தி மரங்களை அகற்றக்கூறியதாகத் தகவல்கள் வெளியாகின. ஆனால் முதல்வர் யாத்திரை வழியில் உள்ள மரங்களை சீர்படுத்தக் கூறியதாக மட்டுமே அறிக்கை வெளியிட்டுள்ளார்.

‘சும்மா’ இருக்கற நேரத்துல இதெல்லாம் செய்யலாமே..!
July 02, 2017ஒரு நாளைக்கு வேலை நேரம் போக மற்ற நேரங்களில் என்ன செய்கிறோம் என யோசித்திருக்கிறோமா? கொஞ்சம் யோசித்துப்பாருங்க, வெட்டியாத்தான் இருப்போம். இல்...
புத்தகம் படிக்கலாம்:
நேரத்தை நமக்கு உபயோகமாக மாற்றுவதற்கு அருமையான வழிகளில் ஒன்று, புத்தகம் படிப்பது. இதனால் உங்களின் மனம் ரிலாக்ஸ் ஆவதோடு, சிந்திக்கும் திறனும் அதிகரிக்கும். உங்களைச் சுற்றியுள்ள உலகத்தைப் புரிந்துகொள்ள புத்தகம் உதவும். ஒவ்வோர் அனுபவத்தையும் நீங்கள் தேடித் தேடி அனுபவிக்க முடியாது. ஆனால், புத்தகம் வாசிப்பதால் உங்களால் பல அனுபவங்களைப் பெற முடியும். ஆனால், அதைத் திரையில் படிப்பதைவிட காகிதத்தில் படிப்பது நல்லது.
இயற்கையை ரசிக்கலாம்:
அதிகாலையில் பறக்கும் பறவைகளைப் பார்த்தால், உங்கள் மனமும் பறப்பதற்கான ஆற்றலை பெற்றுவிடும். மரங்களை ரசித்துப் பாருங்கள். உங்களுக்குள் பசுமை துளிர்விடும். மலைகளை ரசித்துப் பாருங்கள், உயரம் செல்வதற்கான வழி தென்படும்.
உடற்பயிற்சி:
வேலை நேரங்களில் மூளைக்கு வேலைகொடுக்கும் நாம், மற்ற நேரங்களில் உடலுக்கு வேலை தர மறந்துவிடுகிறோம்.
சும்மா இருக்கும் நேரங்களில்கூட சிறிய உடற்பயிற்சிகளை மேற்கொள்ளலாம். வேலைகள் எல்லாம் முடித்த பிறகு, நீங்கள் செய்யும் அரை மணி நேர உடற்பயிற்சி, நீங்கள் இழந்த புத்துணர்ச்சியை மீட்கும்.
இசையைக் கற்றுக்கொள்ளுங்கள்:
`இப்பவே சும்மா இருக்கும்போது ஹெட்செட்ல பாட்டுதானே கேட்குறோம்'னு சொல்கிறீர்களா... பாடல்கள் கேட்பது நல்ல பொழுதுபோக்குதான். ஆனால், எத்தனை நாளைக்குதான் கேட்க மட்டுமே செய்வீர்கள்? அதனால் இசையை இசைக்கக் கற்றுக்கொள்ளுங்கள். கிட்டாரோ, கீபோர்டோ வாசிக்கக் கத்துக்கொள்ளுங்கள். ஏனென்றால், இசை உங்களை மட்டும் அல்ல, உங்களைச் சுற்றி இருப்பவர்களையும் மகிழ்விக்கும்.
கற்றுக்கொள்ளுங்கள்... பிறருக்கும் கற்றுக்கொடுங்கள்:
நீங்கள் கற்றுக்கொண்ட நல்ல விஷயங்களைப் பிறருக்கும் கற்றுகொடுங்கள். அது உங்கள் அனுபவமாக இருக்கலாம், உங்களுக்குத் தெரிந்த விஷயமாக இருக்கலாம். எதுவாக இருந்தாலும் பிறருக்குக் கற்றுக்கொடுங்கள். உங்கள் வீட்டில் குழந்தைகள் இருக்கிறார்களா, விளையாடக் கற்றுக்கொடுங்கள். வயதானவர்கள் இருக்கிறார்களா, அவர்களிடமிருந்து அனுபவத்தைக் கற்றுக்கொள்ளுங்கள்.
உங்களுக்கும் பொழுதுபோகும் அவர்களுக்கும் உதவியாக இருக்கும்.
மனிதர்களோடும் கொஞ்சம் பேசுங்க பாஸ்!
டிஜிட்டல் உலகில் இருக்கும் நாம், அந்த மயக்கத்திலேயே நம்மைச் சுற்றி இருக்கும் மனிதர்களை மறந்துவிடுகிறோம். வேலை நேரத்தை விடுங்க, மற்ற நேரங்களிலாவது அவர்களிடம் பேசலாமே! `எப்படி இருக்க?' எனக் கேட்பதற்குப் பதிலாக `பேசி ரொம்ப நாள் ஆச்சுல்ல' என்றுதான் ஆரம்பிக்கிறது இன்றைய நண்பர்களின் தொலைபேசி உரையாடல்கள். சும்மா இருந்தால், உங்க நண்பர்களுடன் ஒரு ஜாலி அரட்டை அடிங்க!
உதவி செய்யுங்கள்:
வீட்டிலோ, பொது இடங்களிலோ முடிந்தவரை பிறருக்கு உதவி செய்யுங்கள். உதவி செய்வதில் கிடைக்கும் திருப்தி, வேறு எதிலும் கிடைக்காது. அலுவலக வேலை முடிந்து வந்ததும் வீட்டில் இருக்கும் வேலைகளைப் பகிர்ந்துகொள்ளுங்கள்.
ப்ளான் பண்ணுங்க பாஸ்:
அடுத்த நாள் என்ன வேலை பண்ணலாம்னு ப்ளான் பண்ணுங்க. வேலை பார்க்கும் நேரத்தைவிட சும்மா இருக்கும் நேரத்தில்தான் நம் க்ரியேட்டிவிட்டி லெவல் அதிகமாகுமாம். அதனால் சும்மா இருக்கும்போது உதிக்கும் ஐடியாக்களைச் செயல்படுத்திப் பார்க்கலாமே!
சுவிஸ் வங்கியில் அதிக பணம்... 88-வது இடத்தில் இந்தியா!
July 02, 2017சுவிஸ் வங்கிகளில், அதிக பணம் வைத்திருக்கும் வெளிநாட்டவர்களின் பட்டியலில் இந்தியா 88-வது இடத்துக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. சுவிட்சர்லாந்து ...
சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள வங்கிகளில் அதிக பணம் வைத்திருக்கும் வெளிநாட்டவர்களின் பட்டியலில், பிரிட்டன் தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது. இரண்டாவது இடத்தில் அமெரிக்காவும், அடுத்தடுத்த இடங்களில் மேற்கிந்தியத் தீவுகள், பிரான்ஸ், பனாமாஸ், ஜெர்மனி, ஹாங்ஹாங் உள்ளிட்ட நாடுகளும் உள்ளன. கடந்த 2014-ம் ஆண்டு 61-வது இடத்தில் இருந்த நம் இந்தியா, தற்போது 88-வது இடத்துக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. சமீப காலமாக சுவிஸ் வங்கிகளில் கறுப்புப் பணம் வைத்திருக்கும் இந்தியர்களைக் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க மத்திய அரசு தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டதன் விளைவே இதற்குக் காரணமாகச் சொல்லப்படுகிறது.
இதனால், சுவிட்சர்லாந்து அரசும் தன் நாட்டு வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் இந்தியர்களின் விவரத்தை அளிக்கவும் அண்மையில் ஒப்புக்கொண்டது. மேலும், மத்திய அரசின் தீவிர நடவடிக்கைகளால் சுவீஸ் வங்கிகளில் இந்தியர்களின் பண மதிப்பு குறையத் தொடங்கியது. தங்களின் கணக்கில் இருந்த பணத்தை அவர்கள் ஏற்கெனவே பெருமளவில் எடுத்துவிட்டபடியால், சுவிஸ் வங்கிகளில் வெளிநாட்டவர்களின் மொத்தப் பணத்தில் இந்தியர்களின் பணம் 0.04 சதவிகிதமாகக் குறைந்துவிட்டது. இதன்படி, அந்த நாட்டு வங்கிகளில் இந்தியர்களின் பணம் 4,500 கோடி ரூபாய் உள்ளது என 2016-ம் ஆண்டு இறுதிவரை கிடைத்த தகவல்களின் அடிப்படையில் சுவிஸ் தேசிய வங்கி தெரிவித்துள்ளது. மேலும் அது, ''ஹாங்காங், சிங்கப்பூர் நாடுகளை ஒப்பிடும்போது... தங்கள் நாட்டு வங்கிகளில் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் குறைவான அளவு தொகையையே டெபாசிட் செய்துள்ளனர்'' என்கிறது.
2007 முதல் 2013 வரை காலகட்டத்தில் முதல் 50 இடங்களுக்குள் இருந்த இந்தியா, அதிகபட்சமாக 2004-ம் ஆண்டில் 37-வது இடத்தில் இருந்தது என்பதும் அதேசமயத்தில், 2015-ம் ஆண்டு 75-வது இடத்தில் இருந்ததும் குறிப்பிடத்தக்கது. இந்தியாவை விட சுவிஸ் வங்கிகளில் அதிகம் பணம் வைத்திருக்கும் பாகிஸ்தானியர்கள், இந்தப் பட்டியலில் 71-வது இடத்தில் உள்ளனர். நம்முடைய மற்ற அண்டை நாடுகளான சீனா 25-வது இடத்திலும்,வங்கதேசம் 89-வது இடத்திலும், நேபாளம், இலங்கை 150, 151-வது இடங்களிலும் உள்ளன. பூடான் 282-வது இடத்தில் உள்ளது.
Search This Blog
Blog Archive
- ► 2018 (454)
-
▼
2017
(521)
-
▼
July
(156)
-
▼
Jul 02
(8)
- ஜூலியா, அனுயாவா? பிக் பாஸில் இருந்து முதலில் வெளிய...
- ரோஜா படத்தில் முதலில் நடிக்கவிருந்தது அரவிந்த்சாமி...
- BiggBoss நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்களுக்கு வார ...
- தன்னை கிண்டல் செய்தவர்களுக்கு பிக்பாஸில் கமல் கொடு...
- அத்தி மரங்களை சீர்படுத்த ஆணையிட்ட ஆதித்யநாத் அரசு!
- அத்தி மரங்களை சீர்படுத்த ஆணையிட்ட ஆதித்யநாத் அரசு!
- ‘சும்மா’ இருக்கற நேரத்துல இதெல்லாம் செய்யலாமே..!
- சுவிஸ் வங்கியில் அதிக பணம்... 88-வது இடத்தில் இந்த...
-
▼
Jul 02
(8)
-
▼
July
(156)