October 30, 2017
தலையில் சுத்தியலால் பலமுறை அடி வாங்கியபோதும் ஏடிஎம் கொள்ளையனை பிடிக்க துணிச்சலுடன் போராடிய காவலாளி
October 30, 2017கோவா தலைநகர் பனாஜியில் ஏடிஎம் கொள்ளையனை காவலாளி ஒருவர் துணிச்சலுடன் பிடிக்க முயலும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. இந்த முயற்சியில் கொள்ளைய...
கோவா தலைநகர் பனாஜியில் ஏடிஎம் கொள்ளையனை காவலாளி ஒருவர் துணிச்சலுடன் பிடிக்க முயலும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. இந்த முயற்சியில் கொள்ளையனிடம் அவர் பலமுறை தலையில் சுத்தியலால் அடி வாங்குவது மனதை பதற வைக்கிறது.
கோவா தலைநகர் பனாஜியில், பேங்க் ஆப் மகாராஷ்டிரா வங்கி ஏடிஎம் ஒன்றில் கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு முகமூடி அணிந்த மர்ம நபர் ஒருவர் நுழைந்து, ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்றார். இதைக் கண்ட காவலாளி, ஏடிஎம் உள்ளே நுழைந்து அந்தக் கொள்ளையனை பிடிக்க முயன்றார். இதையடுத்து கொள்ளையன் அங்கிருந்து தப்பிக்கும் முயற்சியாக, தன்னிடம் இருந்த சுத்தியலால் காவலாளியின் தலையில் தாக்க முயன்றார். கொள்ளையன் சுத்தியலால் அடிப்பதை காவலாளி யால் சிலமுறை மட்டுமே தவிர்க்க முடிந்தது. பலமுறை தவிர்க்க முடியவில்லை. எனினும் கொள்ளையனை பிடிக்கும் முயற்சியை அவர் கைவிடவில்லை. இறுதியில் அவர் கொள்ளையனிடமிருந்து சுத்தியலை பறிக்கும்போது, கொள்ளையன் ஒருவழியாக தன்னை விடுவித்துக்கொண்டு, தான் கொண்டு வந்த கறுப்பு நிற ‘பேக்’ உடன் அங்கிருந்து தப்பிச் சென்று விடுகிறார். எனினும் தலையில் வழியும் ரத்தத்துடன் கொள்ளையனை பிடிக்க காவலாளி பின்னால் ஓடுகிறார்.
இந்தக் காட்சி அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. இதனை ஏஎன்ஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. 40 விநாடிகள் கொண்ட இந்த வீடியோவில் சுத்தியலால் காவலாளி அடி வாங்கும் காட்சி நம் மனதை பதற வைக்கிறது.
ஏடிஎம் கொள்ளை முயற்சி தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கண்காணிப்பு கேமரா காட்சியின் அடிப்படையில் கொள்ளையனை பிடிக்க தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளனர்.