October 19, 2016
<
சிவகார்த்திகேயன் ரெமோ வெற்றி விழாவில் அழுதது எல்லோரையும் வியக்க வைத்தது. என்னை நிம்மதியாக வேலை செய்ய விடுங்கள் என்று சொன்னது எல்லோருக்கும் அதிர்ச்சியை தந்தது. தற்போது சிவகார்த்திகேயன் மீது மூன்று தயாரிப்பாளர்கள், அவர் பணம் வாங்கி விட்டு நடிக்க மறுக்கிறார் என புகார் சொன்னதையடுத்து சங்கம் சார்பில் சிவாவிடம் விசாரணை நடந்தது. இதில் அவர் 2013 ம் வருடம் வேந்தர் மூவிஸ் மதன், எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதன் மற்றும் ஞானவேல் ராஜா ஆகியோர் என்னிடம் கால்ஷீட் கேட்டார்கள். இதில் நான் ஞானவேல் ராஜா படத்தில் நடிப்பதற்கு மட்டும் அப்போது ஒப்பந்தமாகி அட்வான்ஸ் வாங்க பட்டது. மற்றவர்களின் படங்களில் நடிக்க பணம் ஏதும் வாங்கப்படாமல் பேச்சளவில் மட்டுமே சொல்லப்பட்டது. தற்போது என்னுடைய மார்க்கெட் ட்ரெண்டை கொண்டு என்னை அவர்களது படத்தில் நடிக்க மிகவும் வற்புறுத்துகிறார்கள். அட்வான்ஸ் வாங்கிய படத்தில் மட்டுமே நடிப்பேன். மற்றவரின் பிரச்சனையை சட்டம் மூலம் சந்திப்பேன் என்று...
October 19, 2016
பறவைகள் தான் 2.0வில் மறைந்திருக்கும் ரகசியங்கள்- வெளிவந்த சூப்பர் தகவல்
October 19, 2016இந்திய சினிமாவிலேயே அதிக பட்ஜெட்டில் எடுத்துக்கொண்டிருக்கும் படம் 2.0. இப்படத்தை ஷங்கர் இயக்க, ரஜினிகாந்த், அக்ஷய்குமார் நடித்து வருகின்றன...
<
இந்திய சினிமாவிலேயே அதிக பட்ஜெட்டில் எடுத்துக்கொண்டிருக்கும் படம் 2.0. இப்படத்தை ஷங்கர் இயக்க, ரஜினிகாந்த், அக்ஷய்குமார் நடித்து வருகின்றனர். இப்படத்தில் பறவைகள் வைத்து தான் கதையே நகருமாம், அதாவது அக்ஷய் குமாரின் தோற்றம் இப்படத்தில் பறவை போல் இருந்தது. மேலும், சமீபத்தில் கூட பறவை போல் வேடமணிந்து ரியாஸ்கான், ரஜினியிடம் சண்டைப்போடுவது போல் ஒரு காட்சியை எடுத்தார்களாம். ரசூல் பூக்குட்டி கூட ஒரு பேட்டியில் 2.0 படத்திற்காக காகத்தின் சத்தத்தை பதிவு செய்தது மிகவும் சிரமமாக இருந்தது என கூறியுள்ளார். இதையெல்லாம் வைத்து பார்க்கையில் கண்டிப்பாக இந்த படத்தில் பறவைகள் வைத்து தான் கதை நகரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. ...
October 19, 2016
தினமும் பல் துலக்க பயன்படுத்தும் டூத் பிரஷ்ஷின் அசிங்கமான ரகசியங்கள்!!
October 19, 2016வாயை சுத்தமாக வைத்துக் கொள்ளவும், பிளேக்கை அகற்றவும் தினசரி பல் துலக்குவது அவசியம். வாயின் சுகாதாரத்தைப் பேணுவதற்கு டூத் பிரஷை சரியான முறைய...
<
வாயை சுத்தமாக வைத்துக் கொள்ளவும், பிளேக்கை அகற்றவும் தினசரி பல் துலக்குவது அவசியம். வாயின் சுகாதாரத்தைப் பேணுவதற்கு டூத் பிரஷை சரியான முறையில் பராமரிப்பது மிகவும் அவசியம். மேலும் 3-4 மாதங்களுக்கு ஒரு முறை அல்லது பிரிஸில்கள் தேய ஆரம்பித்தவுடன் டூத் பிரஷை மாற்றுவது அவசியம் என்று டாக்டர்கள் பரிந்துரைக்கிறார்கள். அதுமட்டுமின்றி, உங்கள் டூத் பிரஷ், கிருமிகளின் பண்ணையாக இருக்கிறது என்று இங்கிலாந்திலுள்ள மான்செஸ்டர் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். அதிலும் மூடி வைக்கப்படாத ஒரு டூத் பிரஷில் 100 மில்லியன் பாக்டீரியாக்கள் வசிக்கின்றன. வயிற்றுப் போக்கை ஏற்படுத்தும் ஈ-கோலி பாக்டீரியாவும், தோல் தொற்று நோயை ஏற்படுத்தும் ஸ்டாபில்கோலி பாக்டீரியாவும் இதில் அடங்கும். உங்கள் டூத் பிரஷில் கண்ணுக்குத் தெரியாமல் மறைந்திருப்பது என்ன தெரியுமா? ஏராளமான கிருமிகளின் பண்ணையே அதற்குள் இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். மூடி வைக்கப்படாத ஒரு டூத்பிரஷில் 100 மில்லியன் பாக்டீரியாக்கள் வசிக்கின்றன. வயிற்றுப் போக்கை ஏற்படுத்தும்...
October 19, 2016
கவுண்டமணி, அஜித் முதல் நயன்தாரா வரை...! - ஒரு Comeback சரித்திரம்
October 19, 2016நமக்குப் பிடித்த ஹீரோ ரொம்பநாள் கழித்து ஸ்கிரீனில் வரும்போது, நமக்குப் பிடித்த பேட்ஸ்மேன் ஃபார்ம் அவுட் காலத்துக்குப் பிறகு செஞ்சுரி அடிக்க...
<
நமக்குப் பிடித்த ஹீரோ ரொம்பநாள் கழித்து ஸ்கிரீனில் வரும்போது, நமக்குப் பிடித்த பேட்ஸ்மேன் ஃபார்ம் அவுட் காலத்துக்குப் பிறகு செஞ்சுரி அடிக்கும்போது லேசாக சிலிர்க்குமே... அதுதான் பெர்ஃபெக்ட் கம் பேக். அப்படி தமிழ் சினிமாவில் ஒரு பிரேக்கிற்குப் பின் கெத்தாக நுழைந்து 'ஐ யம் பேக்' என ஸ்டைல் ஸ்டேட்மென்ட் விட்டு நம்மை அசரடித்தவர்களின் சின்ன லிஸ்ட். அஜித்: 2007-ல் 'பில்லா' ஹிட்டிற்குப் பின் வெளியான ஏகனும், அசலும் வசூல் ரீதியாக ஓடவில்லை. போக ரேஸ் பக்கம் கவனம் செலுத்தியதால் ஒரு பிரேக் வேறு. இதனால் சோர்ந்து போயிருந்த ரசிகர்களை மானாவாரியாய் உற்சாகம் ஏற்ற வந்தது 'மங்காத்தா'. ஜீப் பறந்து வர, பின்னணியில் மிரட்டல் தீம் மியூஸிக்கில் அஜித் இறங்க, வெடித்து அடங்கின தியேட்டர்கள். படமும் பட்டிதொட்டி எல்லாம் ஹிட். அர்விந்த் சுவாமி: ஒரு காலத்தில் காதல் மன்னன். இளைஞர்களின் ரோல் மாடல். அப்புறம் ஆளையே காணோம். திடீரென...
October 19, 2016
ரஜினியே இப்படி கூறிவிட்டாரா? சந்தோஷத்தில் துள்ளிக்குதித்த சிவகார்த்திகேயன்
October 19, 2016சிவகார்த்திகேயன் ரெமோ படத்திற்கு பிறகு வேறு லெவலுக்கு சென்றுவிட்டார். அவர் படத்தின் வியாபாரங்கள் இனி விஜய், அஜித் படங்களுக்கு இணையாக நடந்த...
சிவகார்த்திகேயன் ரெமோ படத்திற்கு பிறகு வேறு லெவலுக்கு சென்றுவிட்டார். அவர் படத்தின் வியாபாரங்கள் இனி விஜய், அஜித் படங்களுக்கு இணையாக நடந்தாலும் ஆச்சரியம் இல்லை. அந்த வகையில் சமீபத்தில் ரெமோ படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பார்த்துள்ளார், படத்தை பார்த்துவிட்டு உடனே தயாரிப்பாளர் ராஜாவை பாராட்டியுள்ளார். அதுமட்டுமில்லாமல் சிவகார்த்திகேயனையும் புகழ்ந்து தள்ளிவிட்டாராம், அவரின் வளர்ச்சி குறித்தும் பெருமையாக கூற, சிவகார்த்திகேயன் சந்தோஷத்தில் துள்ளிக்குதித்துள்ளார். ரெமோ விமர்சனங்கள் ரீதியாக தோல்வியடைந்தாலும், வசூலில் இந்த வருடத்தில் கபாலி, தெறிக்கு அடுத்த இடத்தில் உள்ளது. ...
October 19, 2016
திருட்டு விசிடியால் இந்தெந்த படங்களுக்கு இத்தனை கோடி நஷ்டமாம்- வெளிவந்த புள்ளி விவரம்
October 19, 2016திருட்டு விசிடி இன்று தமிழ் சினிமாவின் வில்லனாக வளர்ந்து நிற்கின்றது. அதிலும் மிகவும் தைரியமாக திருட்டுவிசிடி.காம் என்ற பெயரிலேயே நடத்தி வர...
திருட்டு விசிடி இன்று தமிழ் சினிமாவின் வில்லனாக வளர்ந்து நிற்கின்றது. அதிலும் மிகவும் தைரியமாக திருட்டுவிசிடி.காம் என்ற பெயரிலேயே நடத்தி வருகின்றனர், இதனால் பல பேரின் உழைப்பு வீணாகின்றது என்பது அவர்களுக்கு எப்போது புரிய போகின்றதோ. சரி, அது ஒரு புறம் இருக்கட்டும், படங்களை அதிகாரப்பூர்வமாக வாங்கி வெளியிடும் தளம் ஒன்று ஒரு கருத்துக்கணிப்பில் திருட்டி விசிடி மற்றும் ஆன்லைனில் படம் பார்ப்பவர்கள் எண்ணிக்கையும், டிக்கெட் விலையையும் வைத்து ஒரு படத்திற்கு எத்தனை கோடி இதன் மூலம் நஷ்டமாகின்றது என்பதை வெளியிட்டுள்ளது. இதோ அந்த நஷ்ட விவரம்.. உறியடி- ரூ 8 கோடி அப்பா- ரூ 11 கோடி ரஜினி முருகன்- ரூ 65 கோடி கணிதன்- ரூ 17 கோடி இந்த சிறு பட்ஜெட் படங்களுக்கே இத்தனை கோடி நஷ்டம் என்றால் கபாலி, தெறி, வேதாளம் போன்ற படங்களுக்கு? நீங்களே கணக்கு போட்டு பாருங்கள். ...
Search This Blog
Blog Archive
- ► 2018 (454)
-
▼
2016
(306)
-
▼
October
(156)
-
▼
Oct 19
(6)
- நடந்த உண்மையை போட்டுடைத்த சிவகார்த்திகேயன் !
- பறவைகள் தான் 2.0வில் மறைந்திருக்கும் ரகசியங்கள்- வ...
- தினமும் பல் துலக்க பயன்படுத்தும் டூத் பிரஷ்ஷின் அச...
- கவுண்டமணி, அஜித் முதல் நயன்தாரா வரை...! - ஒரு Come...
- ரஜினியே இப்படி கூறிவிட்டாரா? சந்தோஷத்தில் துள்ளிக்...
- திருட்டு விசிடியால் இந்தெந்த படங்களுக்கு இத்தனை கோ...
-
▼
Oct 19
(6)
-
▼
October
(156)