July 28, 2017
'செல்'லைக் கண்டறிந்த ராபர்ட் ஹூக் பிறந்த தினம் இன்று
July 28, 2017<
'ராபர்ட் ஹூக்' - இவரை எத்தனை பேருக்குத் தெரிந்து இருக்குமோ தெரியவில்லை. காலம் மறந்துபோன மாமேதைகளில் இவரும் ஒருவர் எனலாம். ஆனால், வரலாறு இவரை புதுமைப்புலி என்றே பதிந்து வைத்துள்ளது. உலகின் 100 சிறந்த கண்டுபிடிப்பாளர்களில் இவர் பத்தாவது இடத்தில் இருந்தபோதும் என்னவோ அறிவியல் உலகில் மட்டுமே அறியப்பட்டவராக இருக்கிறார். சரி இவரைப்பற்றி என்ன என்கிறீர்களா. 1635-ம் ஆண்டின் ஜூலை 28-ம் நாள்தான் இங்கிலாந்தில் ஃபிரஷ்வாட்டர் எனும் பகுதியில் ஹூக் பிறந்தார். அவருடைய பிறந்த நாள் இன்று. சரி என்ன சாதித்தார் என்கிறீர்களா. இதோ சுருக்கமாகவே தருகிறோம். ஆனால், அதுவே நீள்கிறது பாருங்கள்.இவர் கண்டறிந்த நுண்ணோக்கியின் மூலம் 'செல்' என்ற அமைப்பைக் கண்டறிந்து சொன்னவரே இவர்தான். ஒவ்வொரு பொருளும் செல்லால் ஆனது என்பதை அதன்பிறகே உலகம் அறிந்துகொண்டது. இவரின் இந்த ஆய்வுக்குப் பின்னர்தான் உடலியல் வல்லுநர்களின் செல்கள் குறித்த ஆய்வுகள், மருத்துவ வளர்ச்சி போன்றவை வேகமெடுக்க ஆரம்பித்தன. முதல்...