June 16, 2017
மரகத நாணயம் விமர்சனம் - ‘நாணயமா’ ஒரு படத்தை கொடுத்திருக்கிறார்கள். நல்லாயிருப்பீங்கய்யா!
June 16, 2017 ஆயிரம் தலைவாங்கிய அபூர்வ ஆவிகளை கூட, நிற்க வச்சு படம் போட்டு, நிமிர வச்சு கலர் அடிப்பதில் கோடம்பாக்கத்திற்கு நிகர் கோடம்பாக்கம்தான்! சுடுகாட்டு படங்களுக்கு ‘சூப்பர் மால்’ தியேட்டர்களாகட்டும். சுமார் ஹால் தியேட்டர்களாகட்டும். செம வரவேற்பு என்பதால், டீ கிளாசில் கூட ‘ஆவி பறக்கிறதா?’ என்றுதான் ஆலாய் பறக்கிறார்கள் இயக்குனர்கள். இப்படியொரு ரெகுலர் பார்முலாவுக்குள் வந்தாலும் மரகத நாணயத்தின் மதிப்பும், அது ரசிக்க வைக்கும் அழகும்… ஒவ்வொரு ரசிகனையும் வாய்விட்டே பேச வைக்கும். “ஆவியே உன்னை ஆராதிக்கிறேன்’’! அந்த காலத்து ராஜா ஒருவனின் சமாதிக்குள்ளிருக்கும் மரகத நாணயத்தை ‘அடித்து’க் கொடுப்பவருக்கு பத்து லட்சம் துட்டு என்று ஆஃபர் தரப்பட, குடும்ப கஷ்டத்திலிருக்கும் ஆதி கிளம்புகிறார். “அந்த நாணயத்தை அடிப்பது அவ்வளவு ஈஸியான விஷயமில்ல. இது வரைக்கும் 132 பேர் அந்த மரகத நாணயத்தை கையால் தொட்டவுடனேயே இறந்து போயிருக்காங்க” என்று மற்றொரு முடிச்சையும் போடுகிறார்கள் அந்த நாணய விபரம்...