December 01, 2016
"பிச்சைக்காரன்" வெற்றிக்குப் பிறகு விஜய் ஆண்டனி எடுத்திருக்கும் அவதாரம்தான் சைத்தான். முந்தைய வெற்றிகளால் கொஞ்சம் எதிர்பார்ப்பு கூடியிருக்க, எப்படி வந்திருக்கிறான் சைத்தான்? திறமை வாய்ந்த மென்பொறியாளரான விஜய் ஆண்டனிக்கு, திருமணமான ஓரிருநாட்களில் திடீரென சில சம்பவங்கள் நடக்கத் தொடங்குகிறது. கணினியிலிருந்து நீளும் கை தாக்குகிறது. மண்டைக்குள் ஒரு குரல் துரத்துகிறது. அதன் தொடர்ச்சியாக சில விபரீதங்கள் நிகழ, குடும்பமும், அவரது பாஸும் கோயில், சைக்யாட்ரிஸ்ட் என்று விடைதேடிப் பயணிக்கிறார்கள். இதன் நடுவில் துரத்தும் குரலின் வழிகாட்டுதல் படி, விஜய் ஆண்டனியும் ஜெயலட்சுமியைத் தேடுகிறார். யார் அந்த ஜெயலட்சுமி... எதற்காகத் தேடச் சொல்கிறது அந்தக் குரல் என்பதை பிற்பாதியில் காட்டி முடித்திருக்கிறார்கள். டைட்டிலுக்கு முன்னரே சுஜாதா படத்தைப் போட்டு, அவரது நாவலிலிருந்து தழுவி எடுக்கப்பட்டது என்று காட்டிவிடுகிறார்கள். அவரது ‘ஆ’ நாவலின் பெரும்பாலான பகுதிகள்தான் சைத்தான். இடைவேளையில் ஒரு ஃபோட்டோவைப் பார்த்ததும் விஜய் ஆண்டனி ஷாக் ஆகும் தருணத்தில் தியேட்டரும்...
December 01, 2016
தங்கம் மீது பாய்ந்ததா அரசின் அடுத்த அதிரடி?
December 01, 2016ரூபாய் நோட்டுகளைச் செல்லாமல் ஆக்கிய அதிரடியைத் தொடர்ந்து கறுப்புப் பணத்தை ஒழிக்க அடுத்த அதிரடியைத் தங்கம் மீது எடுத்திருக்கிறது மோடி தலைமைய...
ரூபாய் நோட்டுகளைச் செல்லாமல் ஆக்கிய அதிரடியைத் தொடர்ந்து கறுப்புப் பணத்தை ஒழிக்க அடுத்த அதிரடியைத் தங்கம் மீது எடுத்திருக்கிறது மோடி தலைமையிலான அரசு. தங்கத்தின் மீது மோகம் கொண்ட நாடுகளில் உலகிலேயே முதலிடத்தில் இந்தியாதான் உள்ளது. இந்தியாவில் தற்போது கிட்டத்தட்ட 18 ஆயிரம் டன் தங்கம் புழக்கத்தில் உள்ளது. தங்கத்தைப் பெரும்பாலானோர் முதலீடாகக் கருதுகிறார்கள். ஆனால் தங்கத்தினால் பொருளாதார வளர்ச்சிக்கு எந்தப் பயனும் இல்லை என்பதுதான் உண்மை. எனவே பல வழிகளிலும் தங்கத்தின் புழக்கத்தைக் குறைக்க அரசு முயற்சித்து வந்தது. இதற்கிடையில், பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று நவம்பர் 8-ம் தேதி அறிவித்து, கறுப்புப் பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையில் இறங்கி உள்ளதாக மத்திய அரசு அறிவித்தது. ஆனால், இந்த அறிவிப்பால் கறுப்புப் பண முதலைகளைக் காட்டிலும் சாமான்ய மக்களே பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். பெரும்பாலும் கறுப்புப் பணத்தை ஏற்கெனவே ரியல் எஸ்டேட்டிலும், தங்கத்திலும் பதுக்கி...
December 01, 2016
''இன்னொரு புயல் இருக்கு..'' - தமிழ்நாடு வெதர்மேன் பேட்டி
December 01, 2016தமிழக மக்கள் மழைக் காலங்களில், சென்னை வானிலை ஆய்வு மைய தகவல்களையும், தமிழ்நாடு வெதர்மேன் கூறும் தகவல்களையும்தான் அதிகம் நம்பியுள்ளனர். ச...
தமிழக மக்கள் மழைக் காலங்களில், சென்னை வானிலை ஆய்வு மைய தகவல்களையும், தமிழ்நாடு வெதர்மேன் கூறும் தகவல்களையும்தான் அதிகம் நம்பியுள்ளனர். சென்னை வானிலை ஆய்வு மையத்தில் பல அதிகாரிகள் செய்யும் வேலைகளை, தனி ஆளாக செய்து கொண்டிருக்கிறார் வானிலை ஆர்வலரான பிரதீப் ஜான். இவர்தான் 'தமிழ்நாடு வெதர்மேன்' ஃபேஸ்புக் பக்கத்தின் அட்மின் நபர். வானிலை முன்னறிவிப்புகளை துல்லியமாக ஃபேஸ்புக் பக்கத்தில் இவர் பதிவேற்றி வருவதால், இவருக்கு ஏகப்பட்ட பாலோயர்ஸ். "தமிழ்நாடு வெதர்மேனே சொல்லிட்டாருப்பா.. கண்டிப்பா மழை வரும், புயல் வரும்" என மக்கள் சொல்லும் அளவுக்கு பிரபலமாகி விட்டார் பிரதீப் ஜான். கடந்த ஆண்டு வரலாறு காணாத மழை பெய்யும் என தமிழக அரசே எதிர்பார்க்காத நிலையில், 'மிக அதிகளவு மழை பெய்யும்' என கூறியவர் பிரதீப் ஜான். இவரின் துல்லியமான மழை முன்னறிவிப்புகளை தி.மு.க தலைவர் கருணாநிதியே பாராட்டியுள்ளார். கடந்த வருடம் ஏகத்திற்கு கொட்டித்தீர்த்த மழை, இந்த...
December 01, 2016
இந்தியாவில் இனிமேல் இதெல்லாம் இருக்காது! தயவு செஞ்சு ஒரு நிமிடம் ஒதுக்கி இதை படிக்கலாமே..
December 01, 2016இந்தியாவில் 10 நாட்களுக்கு முன்பு வெளியான அறிவிப்பால் கலவரத்தில் பலரும் உள்ளனர். நடுத்தர மக்கள் வங்கிக்கு முன்பு சிரமப்படுகின்றனர். ஆனால் இ...
<
இந்தியாவில் 10 நாட்களுக்கு முன்பு வெளியான அறிவிப்பால் கலவரத்தில் பலரும் உள்ளனர். நடுத்தர மக்கள் வங்கிக்கு முன்பு சிரமப்படுகின்றனர். ஆனால் இதெல்லாம் கொஞ்சம் காலம் தானாம் அதன்பின்பு. இனி காகித பணத்திற்கு வேலையில்லை இனி எல்லாம் E payments தான் வாழைக்காய் வியாபாரிக்கும், வெங்காய வியாபாரிக்கும், மாட்டு ஆடு வியாபாரிக்கும் சேர்த்தே. இனி மேல் இந்தியாவில் பணத்திற்காக 1.ஆள் கடத்தல் இருக்காது,மணல் கடத்தல் இருக்காது பெரிய தொகையாக காகித பணம் இனி யார் கையிலும் இருக்காது 2.அரிசி கடத்தல் இருக்காது 3.கஞ்சா அபின் கடத்தல் இருக்காது 4.தீவிரவாதிகளுக்கு பணம் சப்ளை இருக்காது 5.அரசியல்வாதிகளுக்கு அல்லகை இருக்காது 6.கருப்பு பணத்தில் அரசியல் மாநாடு இருக்காது 7.மதமாற்றம் இருக்காது 8.தினம் தினம் அரசியல் கட்சி போராட்டங்கள் இருக்காது 9.கந்துவட்டி இருக்காது 2 பில் புக் இருக்காது 10.ரியல் எஸ்டேட் புரோக்கர்கள் இருக்காது 11.அரசு அதிகாரிகள் லஞ்சம் இருக்காது 12.ஹவாலா பண பரிமாற்றம்...
December 01, 2016
விஜய்யுடன் இணைந்த ஜெயம் ரவி- பிரபல நிறுவனம் கொண்டாட்டம்
December 01, 2016ஜெயம் ரவி தொடர்ந்து தரமான படங்களாக நடித்து வருகிறார். இவர் நடிப்பில் டிசம்பர் 23ம் தேதி போகன் படம் திரைக்கு வரவுள்ளது. இப்படத்தை தமிழகம் ...
ஜெயம் ரவி தொடர்ந்து தரமான படங்களாக நடித்து வருகிறார். இவர் நடிப்பில் டிசம்பர் 23ம் தேதி போகன் படம் திரைக்கு வரவுள்ளது. இப்படத்தை தமிழகம் முழுவதும் ஸ்ரீக்ரீன் நிறுவனம் தான் வெளியிடவுள்ளது, இதே நிறுவனம் தான் விஜய்யின் பைரவா படத்தையும் தமிழகத்தில் வெளியிடவுள்ளது. இதன் மூலம் ஒரே நேரத்தில் இரண்டு முன்னணி நடிகர்களின் படத்தை வெளியிடும் வாய்ப்பு இந்த நிறுவனத்திற்கு கிடைத்துள்ளது. ...
December 01, 2016
சைத்தான் - திரைவிமர்சனம்
December 01, 2016எப்போதும் வித்தியாசமான முயற்சிகள் தொடர்ந்து செய்பவர் விஜய் ஆண்டனி. இதே வருடத்தில் பிச்சைக்காரன் என்ற மாபெரும் வெற்றிப்படத்தை கொடுத்த இவர் ம...
எப்போதும் வித்தியாசமான முயற்சிகள் தொடர்ந்து செய்பவர் விஜய் ஆண்டனி. இதே வருடத்தில் பிச்சைக்காரன் என்ற மாபெரும் வெற்றிப்படத்தை கொடுத்த இவர் மீண்டும் சைத்தான் மூலம் களம் இறங்கியுள்ளார். இந்த முறையும் ரசிகர்களை கவர்ந்தாரா பார்ப்போம். கதைக்களம் விஜய் ஆண்டனி ஒரு IT கம்பெனியில் நல்ல வேலையில் இருக்கிறார், அழகான பெண்ணை திருமணம் செய்து சந்தோஷமாக இருக்கிறார். அப்போது தான் அவர் காதில் ஒரு குரல் கேட்டுக்கொண்டே இருக்கின்றது. அந்த குரல் இவரை தற்கொலை செய்ய தூண்டுகிறது. மேலும் அந்த குரல் ஜெயலட்சுமி என்ற பெண்ணின் பெயரை திரும்ப திரும்ப சொல்கிறது. இதன் பின் ஜெயலட்சுமியை தேடி விஜய் ஆண்டனி போக, அவரால் அவர் குடும்பமும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். அதன் பின் என்ன ஆனது, ஜெயலட்சுமி யார் என்பதே மீதிக்கதை. படத்தை பற்றிய அலசல் விஜய் ஆண்டனி பாய் வேஷம் போட்டாலும் சரி, ஐயர் வேஷம் கட்டினாலும் சரி...